பழையன கழிதலும் புதியன புகுதலும் கட்டுரை

Advertisement

பழையன கழிதலும் புதியன புகுதலும் கட்டுரை | Pazhaiyana Kazhithalum Puthiyana Puguthalum in Tamil Katturai

நமது முன்னோர்கள் நிறைய வகையான பழமொழிகளை நமக்கு கூறிவிட்டு சென்றுள்ளனர். அந்த பழமொழிகள் அனைத்தும் அர்த்தமுள்ளதாக இருக்கும். இருப்பினும் அந்த பழமொழிக்கு அர்த்தம் என்பது சிலருக்கு தெரியும், சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அவற்றில் ஒன்றான பழமொழி தான் இந்த பழையன கழிதலும் புதியன புகுதலும் பழமொழி ஆகும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்றாகும். இன்றைய பதிவில் நாம் தெரிந்துகொள்ள இருப்பது பழையன கழிதலும் புதியன புகுதலும் பழமொழிக்கு ஒரு சிறிய கட்டுரையை எழுதிடலாம் வாங்க.

குறிப்பு சட்டகம்:

  • முன்னுரை 
  • பொங்கல் பண்டிகையின் முதல் நாள் 
  • மனிதனின் கலப்படமான மனநிலை 
  • நன்னூல் நூற்பாவின் கூறும் பழமை
  • முடிவுரை

முன்னுரை:

பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஓன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தைப்பொங்கல் சிறுவர் கட்டுரை

பொங்கல் பண்டிகையின் முதல் நாள்:

பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி‘-யில் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். வெறும் பொருட்களை எரிப்பதோடு மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம்.

மனிதனின் கலப்படமான மனநிலை:

புதியவை அறிமுகமாகும்போதெல்லாம் ஒரு சிக்கல் உருவாக்குகிறது. பழையதை என்ன செய்வது என்பது தான் அது. புதிய தொலைக்காட்சி வாங்கினால் பழையதை என்ன செய்வது?, புதிய சட்டை வாங்கினால் பழையதை என்ன செய்வது? புதிய மனைவி வந்தால் பழைய அம்மாவை என்ன செய்வது? புதிய தொழில்நுட்பங்கள் வந்தால் பழைய தொழில்நுட்பத்தை என்ன செய்வது என்ற சிக்கல் பல காலமாகவே இருக்கிறது.

இந்த கலப்படமான மனநிலையை என்னெவென்று சொல்லுவது? ஒருபுறம் காலத்தின் தேவை/அவசியம், மறுபுறம் பிரிவு கொடுக்கும் துயரம். தவிர்க்க முடிய நிலைதான்.. ஆயினும் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்‘ அவசியம் தான் அல்லவா?!

நன்னூல் நூற்பாவின் கூறும் பழமை:

“ பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” 

என பவணந்தி முனிவர் நன்னூலில் குறிப்பிட்டபடி, கால மாற்றங்களோடு பொருந்திப் போகாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாதவற்றை தவிர்த்து, கால மாற்றங்களோடு மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடை போடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதே பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதால் விளக்கப்படுகின்றது.

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளன்று கொண்டாடப்படுகின்ற போகிப் பண்டிகை விளக்கும் தத்துவமும் இதுவாகும்.

மாதத்தின் கடைசி நாளன்று தேவையற்ற பழைய பொருட்களை எரித்து, பழைய சிந்தனைகளையும் தேவையற்ற மன அழுக்கையும் போகியில் போக்கிவிட்டு, புதிய பொருட்கள், புதிய எண்ணங்களுடன் பிறக்கும் புதிய மாதமான தையை வரவேற்பதே போகிப் பண்டிகை எனப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பொங்கல் திருநாள் கட்டுரை

முடிவுரை:

புதுமைச் செறிவு இல்லாத பழமை அறிவு யாருக்கும் பயன்படாது. ″துளங்குவதால் தான் அவை காலத்தால் அழியாத புத்திலக்கியமாய் ஒளிவீசுகின்றன”

பாரதியாரின் பாடல்களில் அத்தகைய புதுமைச் செறிவு உறைந்து சொல்லத்தக்க கவிஞர் பெருங்குட்டதை பாரதி இலக்கியம் உருவாகியிருக்கிறது. இன்னும் உருவாக்கி வருகிறது என்று சொன்னால் அதற்குக் காரணம் புதுமைச் செறிவு.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement