Thai Pongal Siruvar Katturai in Tamil
தமிழர்கள் எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் முதன்மை பெற்றுள்ளது இந்த பொங்கல் பண்டிகை. பொங்கல் அன்று அனைவரும் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தமிழர்கள் பல விழாக்களும் பண்டிகைகளும் கொண்டாடுகின்றனர் அவற்றுள் ஒன்றான தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பற்றி இந்த “தைப்பொங்கல் சிறுவர் கட்டுரை” பதிவில் காணலாம்.
தைப்பொங்கல் சிறுவர் கட்டுரை:
முன்னுரை:
பொங்கல் பண்டிகை தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் திருவிழா ஆகும்.
பொங்கல் பண்டிகை:
வேளாண்மையை அடிப்படையாக கொண்ட தமிழர் தம் இறைவனான சூரியனுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் பண்டிகையாகும். உழவர் திருநாள் என்று போற்றப்படும் இந்த பொங்கல் பண்டிகைகள் நான்கு நாட்கள் நடத்தப்படுகிறது. போகி பொங்கல், தைப் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என நான்கு தினங்களுக்கும் தனி தனி பெயருண்டு.
போகி பொங்கல்:
தமிழர்தம் பொங்கல் பண்டிகையும் முதல் நாள் விழா இதுவாகும். பழையன கழிதல், புதியன புகுதல் என்பது இத்தினத்தின் சாராம்சமாகும். தமிழர் தம் வேளாண்மை சுழற்சியின் கடைசி நாள் இதுவாகும் பண்டைய காலங்களில் ஒவ்வொரு வருடத்தின் வேளாண்மை வேளைகளில் கடைசியாக செய்ய வேண்டிய மீத பொருட்களை தீயிட்டு எரிக்கும் வேலைகள் இன்று செய்யப்பட்டன இது மார்கழி கடைசி தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்போதையாக காலங்களில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை மாற்றும் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. போகி பண்டிகை அன்று வீட்டு மாடங்களில் காப்பு கட்டும் வழக்கமும் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பொங்கல் பண்டிகை கட்டுரை
தை பொங்கல்:
பொங்கல் பண்டிகையும் பிரதான தினம் இதுவாகும். இது இரண்டாவது பொங்கல் தினம் ஆகும். இது குறிப்பாக தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாமட்டும் அல்லாமல் உலகில் உள்ள அனைத்து தரப்பினராலும் பரவலாக கொண்டாடப்பட்டுகிறது. வருடம் முழுவதும் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய இத்துணை நாள் உழவர் தமக்கு உதவிய பூமிக்கு சேர்த்து பொங்கல் வைக்கும் தினமாகும். அறுவடை முடித்து அனைவரும் சந்தோசமாக இருக்கும் மாதம் தை என்பதால், தை முதல் நாள் கடைபிடிக்கப்படுகிறது. அனைவரும் புத்தாடை அணிந்து அனைத்து நண்பர் மற்றும் உறவினருடன் இணைந்து கொண்டாடப்படும் விழா இதுவாகும்.
மாட்டு பொங்கல்:
வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கும் வீட்டு விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இது பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள் விழாவாகும். குறிப்பாக விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காளை மாட்டிற்கும், இல்லத்தை செழிப்புற செய்யும் பசு மாட்டிற்கும் இடும் பொங்கல் இதுவாகும். இன்றைய தினம் மாட்டுகள் வசிக்கும் இடங்களை சுத்தம் செய்து மாடுகளை குளிப்பாட்டி வர்ணம் பூசி உழவு கருவிகள் அனைத்தையும் வைத்து படையல் வைத்து பொங்கல் வைக்கப்படுகிறது.
காணும் பொங்கல்:
காணும் பொங்கல் என்பது உற்றார் உறவினர் பிரிந்து சென்ற நண்பர்களை மீண்டும் கண்டு உறவை புதுப்பிக்கும் நிகழ்வாகும்.இது பொங்கல் பண்டிகையின் நான்காவது தின கொண்டாடட்டமாகும். இதனை காணும் பொங்கல் என்றும் அழைப்பார்கள். தற்போதையகாலகட்டங்களில் பட்டிமன்றம் சிறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வேலை நிமித்தம் தனிமையாகி போன உறவினர்களை இணைக்கமுற செய்ய இரு வாய்ப்பளிக்கிறது.
முடிவுரை:
இவ்வாறு பொங்கல் பண்டிகை நான்கு நாட்களுக்கும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது இதனால் பொங்கல் பண்டிகை தமிழர்களின் சிறப்பான பண்டிகையாக உள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பொங்கல் பண்டிகை வரலாறு
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |