Puthu Kavithai Thotramum Valarchiyum Katturai in Tamil
கவிதை என்பது மனிதர்களாக பிறந்த அனைவரும் விரும்ப கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த கவிதைகளை மரபு கவிதை மற்றும் புதுக்கவிதை என இரண்டாக பிரிக்கலாம். மரபுக்கவிதை போன்று சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை கொண்டிராத ஒன்றாக புதுக்கவிதை காணப்படுகின்றது. புதுக்கவிதைகளில் காணும் காட்சியினை அலங்கார வார்த்தைகளின்றி, உள்ளதை உள்ளபடியே எளிய தமிழ்ச் சொற்கள் கொண்டே எழுதப்படும் கவிதை வடிவமாக இருக்கிறது. அதனால் இந்த பதிவில் புதுக்கவிதையின் வளர்ச்சியும். தோற்றமும் பற்றி கட்டுரை வடிவில் காண்போம்.
முன்னுரை:
இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவரும் கவிதையை விரும்பாதவர்கள் என்று யாரும் இல்லை. கவிதைகளில் வடிவமாக இருப்பது தான் புதுக்கவிதைகள். மரபு கவிதை என்ற பெயர் நீங்கி புதுக்கவிதை என்ற வடிவில் இருக்கிறது. நாளை வேறொரு பெயரில் கூட அழைக்கலாம். நேசம்⸴ காதல்⸴ கோபம்⸴ மகிழ்ச்சி⸴ அன்பு⸴ பாசம்⸴ துக்கம்⸴ ஏக்கம்⸴ எதிர்பார்ப்பு⸴ காத்திருப்பு போன்ற எல்லாவற்றையும் சுவைபட புதுக்கவிதைகள் அலங்கரித்து வருகின்றன.இந்த கவிதைகளானது மக்களுக்கு புரியும் வகையில் வடிமைக்கப்படுகிறது. இதனுடைய தோற்றமும், வளர்ச்சியும் குறித்து இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
தோற்றம்:
புதுக்கவிதையின் முதல் நூல் 1910-ம் ஆண்டில் வால்ட் விட்மன் என்ற ஆங்கில கவிஞர் எழுதிய புல்லின் இதழ்கள் என்ற நூல் தான் முதல் நூலாக இருக்கிறது. இதனை அடுத்து எஸ்ரா பவுண்ட் ஒரு சிறந்த புதுக்கவிதையை தொடுத்தார். பாரதியார் எழுதப்பட்ட கவிதைகளை சொல்ல எழுத்துக்கள் போதாது. இவர் எழுதிய வசன கவிதைகள் புதுக்கவிதைக்கு முன்னோடியாக இருந்தது.
இலக்கணம்:
புதிதாக தொடங்கும் இலக்கியத்தை விருந்து என தொல்காப்பியர் பெயரிட்டார். மரபு கவிதை போல் புதுக்கவிதைகள் இருக்காது. இவை இலக்கணச் செங்கோல்⸴ யாப்புச் சிம்மாசனம்⸴ எதுகை பல்லக்கு⸴ தனிமொழி சேனை⸴ பண்டித பவனி இவை எதுவும் இல்லாது தம்மைத் தாமே ஆளும் சிறப்பு பெற்ற கவிதைகள் புதுக்கவிதைகளாகும்.
வளர்ச்சி காலம்:
இந்த புதுக்கவிதையானது மூன்று காலங்களில் வளர்ச்சியை தொட்டது. அவை எந்தெந்த காலம் என்றால் மணிக்கொடி காலம்⸴ எழுத்துக் காலம்⸴ வானம்பாடிக் காலம் போன்ற மூன்று காலங்களில் வளர்ச்சியை தொட்டது.
மணிக்கொடி காலத்தில் மணிக்கொடி இதழ் மட்டும் இல்லை, பல இதழ்களும் புதுக்கவிதைகளை வெளியிட்டன. ஜெயபாரதி⸴ சூறாவளி⸴ மோகினி போன்ற இதழ்களைக் கூறலாம். இந்நூல்களில் மணிக்கொடி முதலில் தோன்றியதால் இதனை மணிக்கொடி காலம் என்று கூறப்பட்டது.
எழுத்து காலத்தில் எழுத்து⸴ சரஸ்வதி⸴ இலக்கியவட்டம்⸴ தாமரை⸴ கசடதபற போன்ற இதழ்கள் புதுக்கவிதைகளை வளர்ந்தன. சிட்னி⸴ வல்லிக்கண்ணன்⸴ மயன் ஆகியோர் இக்காலத்திற்குச் சிறப்புச் சேர்த்தவர்களாவர்.
வானம்பாடி காலத்தில் வானம்பாடி⸴ தீபம்⸴ கணையாழி⸴ சதங்கை முதலிய இதழ்கள் புதுக்கவிதைகளைப் பிரசுரித்தன. சகங்கை⸴ புவியரசு போன்றவர்களை இக்காலத்து புதுக்கவிஞர்களாக்கியது.
சிறப்புகள்:
புதுக்கவிதைகள் எளிமையான முறையில் இருப்பதால் அனைவராலும் புரிந்து கொள்ளும் அளவில் இருக்கும். நவீன தமிழ் இலக்கியத்தின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக புதுக்கவிதைகள் இருக்கிறது. ஒரே ஒரு கருப்பொருளை மட்டும் வைத்து அதனை கண்முன்னே கொண்டு நிறுத்த கூடிய வடிவில் வடிமைக்கப்ட்டது தான் புதுக்கவிதை.
முடிவுரை:
புதுக்கவிதைகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்துள்ளது. புதுக்கவிதை முன்னோடிகள் பலர் பல கவிதைகளை நமக்கு அளித்துள்ளனர். மாறும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்குத் தக்க சான்றாக புதுக்கவிதை வளர்ச்சியைக் கூறலாம்.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |