வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குழந்தைகள் தினம் பேச்சு போட்டியில் ஜெயிக்க எளிமையான பேச்சு போட்டி கட்டுரை..!

Updated On: November 10, 2025 5:45 PM
Follow Us:
Speech About Children's Day in Tamil
---Advertisement---
Advertisement

Speech About Children’s Day in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் குழந்தைகள் தின பேச்சுப்போட்டியில் ஜெயிக்க எளிமையான குழந்தைகள் தின கட்டுரையை தொகுத்து இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம். குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 14 குழந்தைகள் தினம். ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை தான் குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் நவம்பர் 14 கொண்டாடி மகிழ்கின்றோம். வந்த நாளில் மாணவ மாணவிகள் பள்ளிகளில் நடைபெறும் பேச்சு போட்டியில் கலந்துகொள்வார்கள், அவர்களுக்கு உதவிடும் வகையில் இன்றைய பதிவில் குழந்தைகள் தினம் பேச்சு போட்டி கட்டுரையை பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து போட்டில் வெற்றி பெறுங்கள்.

குழந்தைகள் தினம் பேச்சு போட்டி கட்டுரை:

ஆதவனைப் போல் அமைந்திருக்கும் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும். அதன் கோள்களாய் திகழும் ஆசிரியர்களுக்கும். என்னுடன் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இன்று பேச வந்துள்ள தலைப்பு குழந்தைகள் தினம் பற்றி.

நேரு தன் குழந்தைகளை தாண்டி அனைத்து குழந்தைகளின் மீதும் அளவற்ற பாசத்தினை காட்டியவர் என்பதால் அவருடைய பிறந்த தினத்தை குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தை நாம் அனைவரும் கொண்டாடப்படுவதற்கு முக்கிய நோக்கம் சிறந்த கல்வி, சிறந்த வாழ்வாதாரம், குழந்தைகளுக்கு அடிப்படை உரிமையாக கிடைக்க செய்வதே ஆகும். அந்த நாளில் குழந்தைகளுக்கு பேச்சு போட்டி, பாட்டு போட்டி, நடன போட்டி, சிறு பற்றிமன்றங்கள் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
குழந்தைகள் தின பேச்சு போட்டி எளிய 10 வரிகள்..!

நேருவின் கூற்று:

தேசத்தின் சொத்தானது களஞ்சியத்தில் இல்லை கல்வி பயிலும் பள்ளியிலேயே இருக்கிறது என்றார்.

குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்:

இந்தியாவில் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான். சட்டென இலகும் மனம் கொண்டவர்களை குழந்தை குணம் உள்ளவர் என்று அனைவரும் சொல்லுவோம். மனதில் கள்ளம் கபடமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20-ஆம் நாள் கொண்டாப்பட்டு  வருகிறது.

நேரு முதன் முதலில் பிரதமராக இருந்த போது நாட்டில் உள்ள குழந்தைகள், இளைஞர்களின் உடல்நிலை, அவர்களுடைய படிப்பு, வாழ்க்கையின் முன்னேற்றம் தரம் பற்றி சில திட்டங்கள் நிறைவேற்றி கொடுத்தவர். மேலும் வாழ்க்கையின் பொழுதுபோக்கிற்காக குழந்தைகளுடன் பேசி மகிழ்வார்.

குழந்தைகள் தினக் கொண்டாட்டம்:

  • பள்ளிகளில் குழந்தைகள் தினம் மிகவும் விமர்ச்சியாக கொண்டாடப்படும். நாளைய எதிர்கால தூண்களாகிய குழந்தைகளை இன்றே போற்றி வாழ்த்தும் நாளாக இன்றைய நாள் கொண்டாடப்படுகிறது.
  • இன்றைய தினம் குழந்தைகளுக்கான தினமாக இருக்கும். ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் அந்த நாள் குழந்தைகளால் அமர்க்களப்படும்.

குழந்தைகளின் மனம் கவர்ந்தவர்:

உலகிலேயே குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக கொண்டுள்ள நாடு பெருமைக்குரிய இந்தியா நாடு தான். நேருவின் அனைத்து புகைப்படங்களிலும் மிக சிறப்பு பெற்றவை குழந்தை செல்வங்களோடு அவர் இருக்கும் புகைப்படங்கள் தான். ஜவஹர்லால் நேரு, அரசியல் துறையில் தேர்ச்சியும், எத்தனை அனுபவம் பெற்றிருந்தாலும் உள்ளதால் குழந்தை மனதுடனேயே இருந்ததால் குழந்தைகளின் வளர்ச்சி முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.

குழந்தைகள் தின விழாவின் நோக்கம்:

நவம்பர் 14-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தாலும் ஒரு புறம் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து கொண்டுதான் வருகிறது. நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளுமே அடிப்படை கல்வியும், அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம் ஆகும்.

பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினம்:

ஜெனிவாவில் 1925-ஆம் ஆண்டு நடைபெற்ற குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பான சர்வதேச மாநாட்டில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து  அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1954-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டு இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

குழந்தைகளை குழந்தைகளாவே மற்றவர்கள் பார்த்தால் வேண்டும்:

ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளை பெற்ற தாய்மாரிகளும் தங்களிடம் இருக்கும் குறைகளை நீக்கி, குழந்தைகளுடைய ஆசைகளையும், அவர்களிடம் இருக்கும் ஆர்வத்தையும், மனநிலை எப்படி உள்ளது, அணுகுமுறைகளையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். அதன் அடிப்படியில் அவர்களுக்கான பாடத்தை போதிக்க வேண்டும். இவ்வாறான அணுகுமுறையே குழந்தைகளின் நாளைய ஆக்கபூர்வமான சாதனைகளுக்கு வித்தாக அமையும் என மனதில் கொள்ளுங்கள்.

வாய்ப்பளித்த அனைத்து மாணவர்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..

நன்றி வணக்கம்🙏🙏🙏

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஜவஹர்லால் நேரு பற்றிய சிறு குறிப்பு

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now