“தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள் கட்டுரை”
இன்றைய பதிவில் நாங்கள் தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள் கட்டுரை (Effects of False Advertisement in Tamil) பற்றி மிக தெளிவாக கூறியுள்ளோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
சுருக்கம்:
- முன்னுரை
- தவறான விளம்பரங்கள் என்றால் என்ன
- தவறான விளம்பரங்களால் ஏற்படும் தாக்கங்கள்
- தவறான விளம்பரங்களில் இருந்து தப்பிப்பது எப்படி
- முடிவுரை
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
முன்னுரை
விளம்பரத்தின் மூலமே நாம் நிறைய பொருட்களின் சேவைகள் மற்றும் அதன் விலையினை தெரிந்து கொள்கின்றோம். மக்களிடம் ஒரு பொருள் மிக எளிதாக பொய் சேர விளம்பரம் ஒன்றே மிக எளிதான வழியாகும். எல்லா விளம்பரங்களும் நமக்கு உண்மையை தான் சொல்கின்றதா என்று கேட்டால் அது தான் இல்லை. சில தவறான விளம்பரங்களும் வருவதுண்டு, இதனால் பாதிப்படைந்தவர்களும் உண்டு.
தவறான விளம்பரங்கள் என்றால் என்ன?
மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியதாகவும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை வழங்கும் விளம்பரங்களே தவறான விளம்பரங்களாகும்.
இந்த தவறான விளம்பரங்களால் பாதிக்கப்படுவது customers ஆகிய நாம் தான். ஏனென்றால் இந்த விளம்பரங்களில் ஒரு பொருளின் உண்மையான விலை, தரம் போன்றவை இருக்காது. இதனால் ஏமாற்றம் அடைவது நுகர்வோர் தான்.
தவறான விளம்பரங்களால் ஏற்படும் தாக்கங்கள்
Effects of False Advertisement in Tamil
இந்தக்காலகட்டத்தில் எதையுமே நம்மால் நம்ப முடியவில்லை. நல்ல விளம்பரங்களுடன் சில போலி விளம்பரங்களும் வருகின்றது, அதனால் எதை எடுத்தாலும் அதனை சந்தேகப்படும் அளவிற்கு தான் உள்ளது.
எடுத்துக்காட்டாக, இதனை தடவுங்கள் உங்கள் முக பாரு ஒரே நாளில் போய்விடும் என்பார்கள், அதனை உபயோகப்படுத்தி பார்த்தால் தான் தெரியும் அது உண்மையா இல்லை போலியா என்று. இது போன்று நாம் பயன்படுத்தும் பொருட்களுக்கு மட்டும் இல்லை, வேலைவாய்ப்பு போன்ற அனைத்து துறைகளிலும் தவறான விளம்பரங்கள் நிறைந்திருக்கின்றது.
தவறான விளம்பர தயாரிப்புகளில் பணத்தை முதலீடு செய்வது வீண். அதுமட்டுமின்றி, தவறான பொருட்களைப் பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். தவறான விளம்பரங்களும் பல மருத்துவ நோய்களுக்கு முக்கியப் பங்காற்றுகின்றன.
தவறான விளம்பரங்களில் இருந்து தப்பிப்பது எப்படி
தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகள் கட்டுரை
தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ASCI (Advertising Standards Council of India) தனது விருப்பப்படி எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்.
ஒரு பொருள் அல்லது சேவை விளம்பரப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இல்லை என்பதை நீங்கள் கண்டறிந்தால், நுகர்வோர் விவகாரத் துறையின் இணையதளம் வழியாக ஆன்லைனில் புகாரைப் பதிவு செய்யலாம்.
எதில் இறங்கினாலும் கவனமாக அனைத்தையும் தெரிந்துவிட்டு இறங்குங்கள்.
முடிவுரை
விளம்பரங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் நிறைய விதமான கோட்பாடுகளை அரசு நிர்ணயம் செய்துள்ளது, அந்த விளம்பரங்களினால் யாருக்கேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |