விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா கட்டுரை

vilippana india selippana india katturai in tamil

விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா கட்டுரை

உலகிலேயே மிகச் சிறந்த நாடு இந்தியா. செல்வங்கள், திறமைகள், தொன்மைகள் என அனைத்திலும் உலகையே வியக்க வைத்த நாடு. அப்படிப்பட்ட இந்தியா இப்பொழுது பல சரிவுகளை சந்தித்து வருகிறது. இந்த நிலைமை மாறுவதற்கு மக்களிடையே விழிப்புணர்வு அவசியம். அப்பொழுது தான் நாம் ஒரு செழிப்பான இந்தியாவை உருவாக்க முடியும். நாம் இந்த பதிவில் விழிப்பான மற்றும் செழிப்பான இந்தியாவை உருவாக்குவதற்கு தேவையான வழிமுறைகளை கட்டுரை வடிவில் பார்க்கலாம் வாங்க.

விழிப்பான இந்தியா செழிப்பான இந்தியா பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
இந்தியா வல்லரசாக
விழிப்புணர்வு
செழிப்பான இந்தியா
முடிவுரை

முன்னுரை:

  • நம் நாட்டில் உள்ள வளர்ச்சியை மேம்படுத்துவது ஒவ்வொரு இந்திய குடிமகனுடைய கடமையாகும்.

“ஈன்று புறந்தருதல் எந்தலை கடனே
சான்றோர் ஆக்குதல் தந்தைக்கு கடனே
வேல்வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடனே
நன்னடை நல்கல் வேந்தற்கு கடனே”

  • என்று பொன்முடியார் அவர்கள் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். மற்றவர்களை குறை கூறுவதற்கு முன் நமது கடமைகளை நாம் எந்த வித குறையும் இல்லாமல் சரியாக செய்தாலே செழிப்பான இந்தியாவை உருவாக்க முடியும்.

இந்தியா வல்லரசாக:

  • ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த நம்மை பல போராட்ட வீரர்கள் அவர்களின் உயிரை தியாகம் செய்து சுதந்திரத்தை பெற்று தந்தனர். தன்னலம் கருதாமல் மற்றவர்களின் நலன் கருதி தியாகம் செய்தவர்களின் வழியில் சென்று இந்த நாட்டை வளமானதாக மாற்றுவது அனைவரின் கடமையாகும். பெரியோர்கள் கூறிய அறிவுரையின் படி நடந்தால் இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற மறைந்த டாக்டர் ஐயா அப்துல் கலாம் அவர்களின் ஆசை நிறைவேறிவிடும்.
தேசிய ஒருமைப்பாடு கட்டுரை

விழிப்புணர்வு – Vilippana India Selippana India Katturai in Tamil:

  • இந்தியா வளமானதாக மாற வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது நம் தேசத்தை செழுமையானதாக மாற்றுவதற்கு முதலில் மாற்றம் நம்மில் இருந்து தொடங்க வேண்டும். ஒரு தனி மனிதனின் விழிப்புணர்வு நம் தேசத்திற்கு மிகவும் அவசியம்.
  • ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள் அரசியல் தலைவர்கள். அவர்களின் செயல்பாடு சிறப்பானதாகவும், நேர்மையான அரசு அதிகாரிகள் மற்றும் மக்களுக்காக சேவை செய்பவர்கள் என அனைவரும் எந்த விதமான ஊழல் செய்யாமல் இருந்தால் இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

செழிப்பான இந்தியா:

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர் 

  • என்ற திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ப மக்கள் அனைவரும் அறிவுடையவர்களாகவும், அரசியல் பற்றிய அறிவும், முற்போக்கு சிந்தனை உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அரசியல் பற்றிய அறிவு இருப்பதன் மூலம் பல நல்ல தலைவர்கள் நம் தேசத்தை ஆழ்வார்கள், நம்முடைய அரசியல் நன்றாக இருந்தால் இந்தியா செழுமையானதாக இருக்கும்.

முடிவுரை:

  • இந்தியா வளர்ச்சி அடைய முதலில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமக்களின் கூட்டு முயற்சியால் செழிப்பான இந்தியாவை உருவாக்க முடியும். நம் முன்னோர்களின் கண்ட கனவுகளையும் நிறைவேற்ற முடியும்.

வாழ்க இந்தியா! வளர்க இந்தியா!

தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai