தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை

Advertisement

Thuimai India Katturai in Tamil

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு எங்களது அன்பான வணக்கங்கள்.. ஒரு நாடு சிறந்து விளங்க சுற்று சூழல் தூய்மை, சிறந்த கல்வி, ஊழலற்ற அரசியல், மதசார்பற்ற சட்டம், நீதி ஆகியவை மிகவும் அவசியம். அப்பொழுதான் அந்த நாடு சிறந்த நாடாக மாற்ற முடியும். இதற்கு யாருடைய பங்கு அவசியம் இருக்கிறதோ இல்லையோ மாணவர்களின் பங்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆகவே தூய்மையான இந்தியாவை உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்த பதிவில் தூய்மை இந்தியாவிற்கு மாணவர்களின் பங்கு என்ன என்பதை பற்றி கட்டுரை வடிவில் பதிவு செய்துள்ளோம் அவற்றை இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை – Thuimai India Katturai in Tamil

முன்னுரை
மாசடைந்துள்ள சூழல்
மாணவர்களும் எதிர்கால இந்தியாவும்
இந்தியாவை மாற்றும் சக்தி
கற்றுக்கொள்ள வேண்டியது
முடிவுரை

முன்னுரை:

ஒரு நாடு அனைத்துவிதமான வளங்களை பெற்றிருப்பதை விட அந்த நாடு தூய்மையாகவும், ஊழல் இல்லாமலும் இருப்பது தான் அந்த நாட்டிற்கு பெருமையாகும். நமது இந்திய நாடு ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்றத்தின் பாதையில் சென்று கொண்டிருந்தாலும். சுற்று சூழல் மாசடைவில் நமது இந்தியா இன்று மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதற்கு இந்திய நாட்டில் வாழ்கின்ற அனைவருமே முக்கிய காரணம் என்று சொல்லலாம். அழகு நிறைந்த இந்த இந்திய நாட்டை நாம் மாசுபடுத்தியதால் பலவகையான பாதிப்புகளை நாம் இப்பொழுது எதிர்கொள்கிறோம். ஆகவே இத்தகைய செயலை நாம் தவிர்ப்பதற்காக இக்கட்டுரையில் இந்தியாவின் தூய்மையில் மாணவர்களின் பங்கு என்ன என்பதை பற்றி இவ்வசன வரியில் நாம் தெரிந்துகொள்வோம்.

மாசடைந்துள்ள சூழல்:

இந்தியாவில் உள்ள பெரும்பாலான நகரங்கள் அதிகம் மாசடைந்து காணப்படுகின்றன. அவற்றில் தலைநகரான புதுடெல்லி காற்று மாசடைவு அதிகம் உள்ள நகரமாக பதிவாகியுள்ளது. அதேபோல் புனித நதிகளாக அழைக்கப்படும் கங்கை, யமுனை போன்றன நதிகள் அதிகளவான மாசடைந்த நதிகளாக மாறியுள்ளன.

மேலும் இந்தியாவை நாளுக்கு நாள் மக்கள் தொகை வளர்ச்சியும், நகராக்கமும்  மாசுபடுத்தி கொண்டே இருக்கின்றது. குறிப்பாக மக்களும் இவற்றின் விளைவுகளை புரிந்துகொள்ளாமல் சுற்று சூழலை மாசுபடுத்தி கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக உலகளவில் வளிமண்டலத்தில் அதிகம் கார்பன்டைஆக்சைடு வெளியிடும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு காரணம்  இன்றைய சமூகம் பொறுப்பில்லாமல் செய்யும் செயல்களே காரணம் என்று சொல்ல வேண்டும்.

பிளாஸ்டிக் மாசு பற்றிய தமிழ் கட்டுரை

மாணவர்களும் எதிர்கால இந்தியாவும்:-

“இனி வருங்காலம் இளைஞர்கள் காலம் ஏழ்கடல் மெல்லிசை பாடுதே” என்ற வரிகள் போல இன்றைய இந்தியாவை தூய்மை இந்தியாவாகவும், வல்லரசு இந்தியாவாகவும் மாற்ற கூடியவர்கள் மாணவர்கள் தான் என்று டாக்டர் அப்துல்கலாம் எப்போதும் சொல்வார். விஞ்ஞானத்தாலும், கண்டுபிடிப்புகளாலும் இந்தியா வளர்ந்திருந்தாலும் தூய்மையான இந்தியா தான் மிகச்சிறந்த வல்லரசாக வலம் வர முடியும். ஆகவே அந்த மாற்றங்களை மாணவர்கள் தான் செய்ய வேண்டும். முன்னோர்கள் செய்த தவறை அவர்கள் தான் திருத்தி அமைக்க வேண்டும்.

ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை

இந்தியாவை மற்றும் சக்தி:

நமது இந்திய நாட்டை தூய்மை இந்தியாவாக மற்றும் சக்தி இளைஞர் கையில் தான் உள்ளது. இவர்களது துடிப்பும், புதுமையான கல்வியும் இந்தியாவை தூய்மையாக மாற்ற கூடியது என்பதனால் தான் மாணவர்கள் தூய்மை இந்தியாவில் முக்கிய பங்காக பார்க்கப்படுகின்றனர். நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள் இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். ஆகவே இளைஞர்கள் முன் வந்தால் இந்தியாவை தூய்மை இந்தியாவாக மாற்றுவது சாத்தியம் தான்.

மாணவ செல்வங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது:

மாணவ செல்வங்கள் கல்வி கற்கும் காலங்களில் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ளலாம். அதாவது பாடசாலையை கூட்டி பெருக்கி சுத்தமாக வைத்திருப்பது. குப்பைகளை கண்ட இடங்களில் போடாமல் குப்பை தொட்டியில் போடுதல். பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பது. இது போன்ற நல்ல பாடங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை கடைப்பிடிக்காதவர்களுக்கும் தூய்மை பற்றிய விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும்.

முடிவுரை:

நம்முடைய பாரத தேசத்துக்கு சுதந்திரத்தை விட சுத்தம் தான் அவசியம்” என்கிறார் மகாத்மா காந்தி அவர்கள் அது போல சுற்று சூழல் தூய்மையும் சிறந்த கல்வியும் ஊழலற்ற அரசியலும் மதசார்பற்ற சட்டமும் நீதியும் தான் இந்தியாவை சிறந்த நாடாக மாற்றும். ஆகவே அதனை மாணவர்கள் தான் முக்கியமான பங்களிப்பினை வழங்க வேண்டும். சிறந்த கல்வி மூலமாக வரும்காலத்தில் சிறந்த தலைவர்களாக மாணவர்கள் வரவேண்டும். கடந்த காலங்கள் கடந்தவையாகவே இருக்கட்டும் இனியாவது நாம் நமது இந்தியாவை தூய்மை இந்தியாவாக மாற்றுவோம் நன்றி…

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement