நல்லொழுக்கம் கட்டுரை | Olukkam Katturai in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை பற்றி தெரிந்துக்கொள்ளலாம். ஒருவரின் சிந்தனை ஒழுக்கமாக இருந்தால் அவர்களின் செயல்பாடுகளும் ஒழுக்கம் உடையதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நாம் பள்ளியில் சென்று படிப்பதற்கும், கல்லூரிக்கு சென்று படிப்பதற்கும் முக்கிய காரணமே அனைவருக்கும் நற்பண்பு மற்றும் ஒழுக்கம் இருக்க வேண்டும் என்ற காரணத்தில் தான். எவ்வளவு பணம் இருந்தாலும் அவரிடம் ஒழுக்கம் எனும் பண்பு இல்லையென்றால் அவர் மண்ணிற்கு சமமானவராக கருதப்படுவார். சரி வாங்க நாம் ஒழுக்கம் எனும் தலைப்பை கட்டுரை வடிவில் பார்க்கலாம்.
குறிப்பு சட்டகம்:
முன்னுரை |
நீதி நூல்கள் |
ஒழுக்கம் உயர்வு தரும் எனும் திருவள்ளுவர் கூற்று |
ஒழுக்கக் கல்வி |
முடிவுரை |
முன்னுரை:
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி – என்கிறார் திருவள்ளுவர்.
- இந்த குறளில் திருவள்ளுவர் ஒழுக்கம் உடையவருக்கு நன்மை கிடைக்கும் என்றும், ஒழுக்கம் தவறுதலால் துன்பம் அடைவார்கள் என்றும் கூறுகிறார். ஒழுக்கம் என்பது ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற நெறிமுறைகளை அறிந்து நேர்மையுடனும், சமூக பொறுப்புடனும் வாழ வேண்டும். நம் முன்னோர்கள் நமக்கு தேவையான அறநெறிகளை அனுபவங்கள் மூலம் எடுத்துரைத்துள்ளனர். அவர்களை நாம் முன்னோடியாக வைத்து வாழ வேண்டும்.
நீதி நூல்கள் – ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை:
- சங்க கால சான்றோர்கள் பலர் ஒழுக்கம் எனும் பண்பை பல்வேறு நீதி நூல்கள் மூலம் கூறி உள்ளனர். ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், திருக்குறள், நாலடியார், திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், பழமொழி போன்ற நூல்களில் பல நீதிக்கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர்.
ஒழுக்கம் உயர்வு தரும் எனும் திருவள்ளுவர் கூற்று:
- திருவள்ளுவர் ஒழுக்கமுடமை எனும் அதிகாரத்தை உருவாக்கி அதில் பல ஒழுக்க நெறிகளை எடுத்துரைத்துள்ளார். அதனால் தான் திருக்குறள் உலக பொதுமறை நூல் என்று போற்றப்படுகிறது. மற்ற நாட்டில் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டு படிக்க பயன்படுகிறது.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
- எனும் குறளில் ஒழுக்கம் ஒரு மனிதனுக்கு உயர்வை தரும் என்பதால் அந்த ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக மதித்துப் போற்ற வேண்டும் என இக்குறளில் கூறுகிறார்.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
- ஒருவர் வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என்றால் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று இக்குறள் மூலம் வலியுறுத்துகிறார்.
கல்வியின் சிறப்பு கட்டுரை |
ஒழுக்கக் கல்வி – Olukkam Uyarvu Tharum Katturai:
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் படிக்கும் காலத்தில் இருந்தே ஒழுக்கநெறி மாறாமல் இருக்க வேண்டும். நாம் கற்பதற்கு காரணமாக இருக்கும் ஆசிரியரை முதலில் மதிக்க வேண்டும். பெரியோர், தாய், தந்தை சொல்லை கேட்டு எவ்வித தீய வழியிலும் செல்லாமல் நல்லொழுக்கத்தை பேணி காக்க வேண்டும்.
- கல்வி கற்றவுடன் ஆசிரியர் கூறிய நீதிக் கருத்துக்களை மறந்து விட கூடாது. எந்த வித பாகுபாடுமின்றி அனைவரையும் மதிக்க வேண்டும். கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற குறள் மூலம் எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர்.
முடிவுரை:
இவ்வுலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு மானிடரும் நலம் பெற்று வாழ்வதற்கு நம் முன்னோர்கள் உருவாக்கப்பட்டுள்ள ஒழுக்க நெறிகளை பின்பற்றினால் மட்டுமே சுதந்திரமாக இவ்வுலகத்தில் அனைவரும் வாழ முடியும். எனவே நல்லொழுக்கத்தை வாழ்வின் மிக முக்கிய தேவையாகக் கொண்டு மேன்மையானவர்களாக வாழ்வோம்.
தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை |
எரிபொருள் சிக்கனம் கட்டுரை |
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |