தன்னம்பிக்கை கதைகள் | Motivation Story in Tamil

Motivation Story in Tamil

தன்னம்பிக்கை கதைகள் | Tamil Motivation Story

லைஃப்ல நாம எப்போது நம்மளுடைய தன்னம்பிக்கையை இழந்து போகிறோமோ அப்போதே நம்மளுடைய முயற்சிகளும் நம்மைவிட்டு போய் விடுகிறது. தன்னம்பிக்கை (Self confidence) என்பது என்னால்  ஒரு குறிப்பிட்ட விஷயத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று என் மனதில் நான் நம்பிக்கை வைப்பது. ஆனால் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் பலரிடம் இந்த தன்னம்பிக்கை என்று ஒரு எண்ணம் இல்லாமலேயே போய்விட்டது. ஆகவே அப்படிப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் நோக்கோடு இந்த பதிவில் ஒரு சிறிய தன்னம்பிக்கை கதை சொல்ல விரும்புகின்றோம்.

தன்னம்பிக்கை கதைகள் – Motivation Story in Tamil:

ஒரு காட்டில் ஒரு சிங்கம் கம்பீரமாக அதனுடைய எல்லையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அப்போது அதே காட்டிற்குள் வாழ்ந்துகொண்டிருந்த சில விலங்குகள் அந்த சிங்கத்தின் மீது கொஞ்சம் பொறாமை கொண்டு ஒரு கூட்டம் கூடி பேச ஆரம்பிக்கிறது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

அப்படி என்ன அந்த விலங்குகள் கூட்டம் கூடி பேசியது என்றால். அது என்ன எப்போது இந்த சிங்கம் மட்டும் தான் இந்த காட்டுக்கு ராஜாவாக இருக்கணுமா? இது என்ன திருத்தப்படக்கூடாத சட்டமா? இந்த சட்டத்தை நாம் மாற்ற வேண்டும் என்று விலங்குகள் எல்லாம் பேசிக்கொண்டிருந்ததாம்.

அப்போது அங்கு இருந்த ஒரு நரி சொல்லுது. சிங்கம் ஏன் காட்டு ராஜா அப்படினா.. சிங்கம் அதிக பலம் வாய்ந்த ஒரு மிருகம். அதனால தான் சிங்கம் எப்போதும் காட்டிற்கு ராஜாவாக இருக்கிறது என்று கூறியது.

அதனை கேட்ட புலி என்ன சிங்கம் பலம் வாய்ந்ததா? ஹ.. சிங்கத்தை விட எடையும், உயரமும், சண்டையிடும் திறனும் என்னிடம் இரண்டு மடங்கு உள்ளது. ஆகவே நான் சிங்கத்தை விட பலன் வாய்ந்தவன் என்று கூறியது.

புலி கூறியதை கேட்டுக்கொண்டிருந்த நீர்யானை சொல்லியது. அப்படி பார்த்தால் சிங்கம், புலி இரண்டையும் விட நான் அதிக உடல் எடையையும், அதிக உயரத்தையும் கொண்டிருக்கிறேன். அதேபோல் ஏன் வாயை பெரியதாக திறக்க முடியும். அப்படி நான் வாயை திறந்து சிங்கத்தை கடித்தால் சிங்கம் நொறுங்கி விடும். ஆகவே நான் தான் சிங்கத்தை விட பலமானவன் என்று நீர்யானை சொல்லியது.

அதனை கேட்டுக்கொண்டிருந்த காண்டாமிருகம் நானும் நீர்யானைக்கு நிகரான எடையையும், உயரத்தையும் கொண்டுள்ளேன். அதோடு எல்லாரையும் விட என்னிடம் நீளமான மற்றும் கூர்மையான கொம்பு உள்ளது. இந்த கொம்பை பயன்படுத்தி சிங்கத்தை குத்தி கிழித்துவிடலாம். ஆகவே நான் தான் சிங்கத்தை விட பலமானவன் என்று காண்டாமிருகம் கூறியது.

இதனை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ஒட்டகச்சிவிங்கி எனது உயரத்தை பாருங்கள். என்னை சிங்கத்தால் ஒன்றும் செய்துவிட முடியாது. சிங்கம் என்னை தாக்க வந்தாலும் நான் உதைக்கும் உதையில் சிங்கம் பரந்து ஓடிவிடும். ஆகவே நான் தான் சிங்கத்தை விட பலமானவன் என்று ஒட்டகச்சிவிங்கி சொல்லி முடித்தது.

அப்பொழுது ஆற்றில் அதனை கேட்டு கொண்டிருந்த முதலை நானும் சிங்கத்தைவிட பலமானவன் தான் என்னையும் சிங்கத்தால் தாக்கவே முடியாது நான் சிங்கத்தின் காலை கவ்வி பிடித்தால் என்னிடம் இருந்து சிங்கம் தப்பிக்கவே முடியாது ஆகவே நானும் பலமானவன் என்றது.

இந்த அனைத்து மிருகங்களும் பேசிக்கொண்டிருப்பதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த யானை தனது பலத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தது. அனைத்து விலங்குகளையெல்லாம் விட உயரமும், எடையும், வீரமும் என்னிடம் அதிகமுள்ளது. எனது தும்பிக்கையை கொண்டு நான் சிங்கத்தை ஓங்கி அடித்தால் சிங்கம் சுருண்டு கீழே வீழ்ந்துவிடும். ஆகவே இந்த காட்டிலே மிக மிக பலமானவன் நான் தான் என்றது.

இதையெல்லாம் கேட்ட குரங்கு சொன்னது எத்தனை பேர் சிங்கத்தை விட பலமானவர்களாக இருந்தாலும். இந்த காட்டிற்கு ராஜாவாக சிங்கம் இருப்பதற்கு மிக முக்கிய காரணம். அது எந்த விலங்குகளை கண்டும் பயந்ததே கிடையாது. அதற்கு பயம் அப்படினா என்னவென்றே தெரியாது. அதனால் சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருக்கிறது என்று குரங்கு கூறியது.

இருப்பினும் விலங்குகள் அனைத்தும் தனது பலத்தை பயன்படுத்தி சிங்கத்தை இந்த காட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று திட்டமிட்டது.

திட்டமிட்டபடி நரி சிங்கத்திடம் சென்று சிங்க ராஜா காட்டில் உள்ள மிருகங்கள் எல்லாம் உங்களை பார்க்க சேர்ந்து வந்துள்ளன ஏன் என்று தெரியவில்லை வாங்க என்று அழைத்தது.

தன்னம்பிக்கை கட்டுரை

இதனை அறிந்த சிங்கம் நரியை நம்பி விலங்குகளை பார்க்க வருகிறது. அப்பொழுது அங்கு நின்றுகொண்டிருந்த ஒட்டகச்சிவிங்கி சிங்கத்தை எட்டி உதைத்தது, என்ன நடக்கிறது என்று சிந்திப்பதற்குள்ளவே சிங்கம் சுருண்டு தூரமாக போய் விழுகிறது. அங்கிருந்த காண்டாமிருகம் தனது கொம்பினால் சிங்கத்தை குத்தி தூரமாக வீசுகிறது. சிங்கம் அங்கிருந்த ஆற்றில் போய் விழுகிறது அப்பொழுது தட்டுத்தடுமாறி சிங்கம் எழுத்து நிற்கும்போதே சிங்கத்தின் காலினை முதலை கவ்விக்கொள்கிறது. அந்த முதலையிடம் இருந்து போராடி தப்பித்து சிங்கம் வெளியே வர. நீர்யானை சிங்கத்தை தனது வாயால் கவ்வ மிக வேகமாக சிங்கத்திடம் பாய்ந்தது. நூல் அளவில் நீர் யானையிடம் இருந்து சிங்கம் தப்பித்து. இவ்வாறு ஒவ்வொரு மிருகங்களும் தனது பலத்தை பயன்படுத்தி சிங்கத்தை தாக்கியது. இதனை புரிந்துகொண்ட சிங்கம் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி ஒவ்வொரு மிருகங்களையும் தாக்க ஆரம்பித்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒவ்வொரு விலங்குகளாக கீழே விழ ஆரம்பித்தது. அனைத்து விலங்குகளையும் வென்றபிறகு சிங்கம் அனைத்து விலங்குகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அதிக இரத்த காயங்கத்துடன் தனது குகைக்குள் சென்றது.

மறுநாள் காலை விடிந்தது சிங்கத்துடன் சண்டை போட்ட அனைத்து மிருங்கங்களும் பேசிக்கொண்டிருந்தன அது என்னவென்றால். சண்டை போட்டதில் சிங்கத்திற்கு அதிக இரத்த காயம் ஏற்பட்டதால் சிங்கம் குகையிலேயே இருந்திருக்கும் அல்லது அதற்கு ஏற்பட்டுள்ள இரத்த காயத்தினால் தன்னுடைய உடல் வலிமையை இழந்திருக்கும் என்று விலங்குகள் எல்லாம் பேசிக்கொண்டிருந்தது.

அப்பொழுது அந்த சிங்கம் உடல் முழுவது இரத்த காயங்களுடன் அதே கம்பீர நடையுடன் எந்த ஒரு பயமும் இல்லாமல் அந்த  குகையில் இருந்து வெளியே வந்து நான் யாரு என்று என்னுடைய பலம் என்ன என்று எனக்கு தெரியும். இப்போ நீங்களும் அதை தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லும் விதமாக அனைத்து விலங்குகளையும் பார்த்து சிங்கம் கர்ஜித்தது. சிங்கம் கர்ஜித்ததை கண்ட அனைத்து மிருகங்களும் பயந்து ஓட்டம் பிடித்தன.

அப்பொழுதான் அந்த விலங்குகளுக்கு புரிய வருகிறது. இந்த சிங்கம் காட்டிற்கு ராஜாவாக இருப்பதற்கு முக்கிய காரணம் எதுவென்றால் அதனிடம் உள்ள பலத்தாலோ, விலங்குகளை தாக்கும் திறனாலோ இல்லை. அந்த சிங்கம் எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளமுடியும் என்ற ஒரு நம்பிக்கை மற்றும்  பயம் அப்படிங்கிற ஒரு விஷயம் அதனிடம் இல்லை என்பதால் சிங்கம் காட்டிற்கே ராஜாவாக இருக்கிறது என்று அனைத்து விலங்குகளும் புரிந்து கொள்கின்றன. திரும்ப அந்த சிங்கம் கம்பீர நடையுடன் அந்த காட்டிற்கே ராஜாவாக இருந்தது.

தன்னம்பிக்கை பொன்மொழிகள்..!


தன்னம்பிக்கை கதைகள் – Motivation Story in Tamil:

இந்த கதையில் நான் என்ன உங்களுக்கு சொல்ல வருகிறேன் என்றால்.. மனிதராகிய நாம் எந்த ஒரு சூழ்நிலையிலும். அதனை எதிர்கொள்ளும் தைரியம் நம்மிடம் இருக்க வேண்டும்.

சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள், நம்மால் சரியாக செய்ய முடியுமா என்று எண்ணி அதை செய்யத் தயங்குவார்கள். எதுக்குங்க பயம், செய்யணும்னு நினைக்கிற விஷத்தை தைரியமா செய்ங்க வெற்றி உங்கள் வசம். எதற்காகவும் பயப்படாதீங்க உங்களால் முடியும் என்று உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

முயற்சி இல்லாமல் எதையுமே சாதிக்க முடியாது. எந்த ஒரு செயலை செய்வதற்கும் பயந்து கொண்டே இருந்தால் வாழ்வில் வெற்றி அடைய முடியாது. உங்களால் இந்த விஷயத்தை செய்ய முடியுமா என்று யாராவது கேட்டால் தன்னம்பிக்கையோடு என்னால் நிச்சயம் முடியும் என்று தயக்கமில்லாமல் சொல்லுங்கள். நாம் நினைத்தால் இந்த உலகத்தையே வெல்லலாம்.

விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.
நன்றி வணக்கம்..!

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com