Add Your Shop to Google Maps in Tamil
இன்றைய காலத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகிறார்கள். இதனை பயன்படுத்துவதன் மூலம் நிறைய விஷயங்களை கற்று கொள்ள முடிகிறது. படிக்கும் மாணவர்கள் முதல் கடையில் வைத்திருப்பவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. படிக்கும் மாணவர்களுக்கு ஏதாவது தெரியாத விஷயங்களை கற்று கொள்ள முடிகிறது, கடையில் வைத்திருப்பவர்களுக்கு எப்படி உதவுகிறது என்று நினைக்கிறீர்களா.! அதாங்க கடை வைத்திருப்பவர்கள் ஏதவாது சலுகையை அறிவித்தால் அதனை சமூக வலைத்தளங்களில் போடுகிறார்கள். இதன் மூலம் அவர்களுடைய கடை பிரபலமாகும்.
எடுத்துக்காட்டாக தஞ்சாவூரில் எந்த ஹோட்டல் நல்லா இருக்கும் என்று கேட்டால் ஹோட்டல் பெயர்களை கூறுவார்கள். அதன் பிறகு நாம் அந்த ஹோட்டல் எங்கே இருக்கிறது என்று கூகுளில் சர்ச் செய்து பார்ப்போம். இதில் அவர்களுடைய லொக்கேஷன் வரைக்கும் பார்க்க முடியும். அந்த வகையில் இன்றைய பதிவில் நீங்கள் கடை வைத்திருந்தால் அதனால் கூகுள் மேப்பில் Add செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
நமது மூச்சுக்காற்று மூலமாக ஸ்மார்ட் போனை அன்லாக் செய்யும் வசதி
Add Your Shop to Google Maps:
முதலில் கூகுள் மேப்பை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.
கூகுள் மேப்பை ஓபன் செய்ததும் கீழ் பகுதியில் 5 விதமான ஆப்ஷன்கள் இருக்கும். அதில் 4வதாக Contribute என்ற ஆப்ஷன் இருக்கும். இதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
பின் இதில் Add Place என்று மேலே காண்பிக்கும் அதனை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு கடை பெயர், கடை இருக்க கூடிய இடம், கடையின் போட்டோ, முகவரி போன்றவ கேட்கும். இதையெல்லாம் பதிவு செய்ய வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் கொடுத்த பிறகு கீழே Sumbit என்ற ஆப்ஷன் இருக்கும் அதனை கொடுக்க வேண்டும்.
இது போல் Google Assistant-ஐ உங்கள் மொபைலிலில் அமைத்து பாருங்கள்!
அதன் பிறகு 2 அல்லது 3 மணி நேரத்தில் கூகுள் மேப்பில் உங்களுடைய கடை காண்பிக்கும்.
இதில் கடை மட்டுமில்லை உங்கள் ஊரில் கோவில், உங்களின் இடம் போன்றவற்றை கூட பதிவு செய்யலாம்.
February 29-கு பிறகு வழக்கம் போல் தொடங்கும் PAYTM சேவை
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |