Paytm பயன்படுத்துபவர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

Advertisement

Features of Paytm

Paytm App -யில் ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் Paytm App -யை பயன்படுத்தி  ஒரு கடைக்கோ அல்லது ஒரு நபருக்கோ அடிக்கடி பணம் செலுத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன அம்சம் வந்திருக்கிறது என்பதை பின்வருமாறு பார்க்கலாம். இந்த நவீன காலத்தில் அனைவராலும் அதிகம் பயன்படுத்தப்படுவது ஸ்மார்ட் போன் தான். மனிதனுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஸ்மார்ட் போனில் உள்ளது. இதனை தான் உள்ளங்கையில் உலகம் என்று கூறுகிறார்கள். முன்பெல்லாம் கடையில் பொருள் வாங்கினாலோ அல்லது ஒரு நபருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றாலோ நேரில் சென்று தான் கொடுக்க வேண்டும். ஆனால், இப்போது அப்படி இல்லை ஸ்மார்ட் போன் மூலம் எளிதாக பணத்தை அனுப்பி விடுகிறார்கள். பணம் அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றுதான் Paytm. இந்த ஆப் மூலம் பணத்தை பெறவும் அனுப்பவும் முடிகிறது. எனவே, இந்த Paytm ஆப்பில் வந்துள்ள புதிய அம்சத்தை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

Paytm New Features in Tamil:

Paytm- யில் அடிக்கடி பயன்படுத்தும் காண்டாக்ட் ஆக இருந்தாலும் அதனை தேடித்தான் கண்டுபிடிப்போம். அதுமட்டுமில்லாமல், அடிக்கடி பணம் செலுத்தும் அதே கடையாக இருந்தாலும் கூட ஸ்கேன் செய்ய க்யூஆர் கோட்-ஐ கேட்போம் அல்லது அதை தேடுவோம். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். இதனை எளிமைப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தபட்டது தான் இந்த அம்சம்.

மேற்கூறியுள்ள இரண்டு விஷயங்களையும் எளிதாக்க Paytm- ல் புதிய பின் பட்டன் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் அடிக்கடி பணம் செலுத்தும் காண்டாக்ட்டுகளை பின் செய்து வைத்துக்கொண்டு விரைவாக பணம் செலுத்த முடியும்.

மேலும், இந்த பின் பட்டனில் 5 காண்டாக்ட்டுகளை மட்டுமே பின் செய்து வைத்துக்கொள்ள முடியும்.

போன்பே -யில் பின் நம்பரை மறந்து விட்டீர்களா.! அப்போ இதை பண்ணுங்க..

Paytm ஆப்பில் வந்துள்ள இந்த புதிய பின் பட்டனை எப்படி பயன்படுத்துவது.?

முதலில் உங்கள் Paytm லேட்டஸ்ட் வெர்சனுக்கு அப்டேட் ஆகி உள்ளதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள். அப்டேட் ஆகவில்லை என்றால் அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

how to pin contacts on paytm

இப்போது, உங்கள் Paytm ஆப்பிற்கு சென்று UPI Money Transfer section -னிற்கு கீழ் உள்ள Scan & Pay option -னை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

paytm new features in tamil

பிறகு, அப்பகத்தில் மேல்நோக்கி ஸ்க்ரோல் செய்து Recents section என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் உங்களுக்கு விருப்பமான அல்லது அடிக்கடி நீங்கள் பணம் அனுப்பும் காண்டாக்ட்டை லாங் பிரஸ் செய்தால் ஒரு பின் பட்டன் கிளிக் ஆகும். அதனை கிளிக் செய்தால் காண்டாக்ட் பின் செய்யப்படும். இதன் மூலம் நீங்கள் எளிதாக பணம் செலுத்தலாம்.

Phonepe -வில் பெயர் மாற்றம் செய்வது எப்படி.?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement