How to Reprint PAN Card in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் நவீன மையமாக மாறிவிட்டது. அதனால் நமது இந்திய நாட்டில் ஒரு சில ஆவணங்கள் மிக மிக முக்கியமாக கருதப்படுகிறது. அப்படி உள்ள பல ஆவணங்களில் ஒன்று தான் இந்த பான் கார்டு. நமது நாட்டில் முக்கியமான நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்ட் வைத்திருப்பது மிக அவசியமாகும். வருமான வரி தொடர்பான பணிகளுக்கும், அடையாளச் சான்றிதழாகவும் இது பயன்படுகிறது. ஆகையால் இந்த ஆவணத்தை கவனமாக பாதுகாப்பது மிக முக்கியமாகும்.
நாம் எவ்வளவு தான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் ஒரு சில நேரங்களில் நம்மையும் மீறி சில தவறுகள் நேர வாய்ப்புள்ளது. அதேபோல் தான் மிக மிக முக்கியமான பான் கார்டு காணாமல் போனாலோ, அல்லது திருடப்பட்டாலோ என்ன செய்வது? பான் கார்ட் தொலைந்து விட்டாலோ, திருடப்பட்டாலோ, பான் அட்டையின் சொந்தக்காரர் பதற்றப்பட வேண்டியதில்லை. நாம் தொலைத்த பான் கார்டினை நாம் எளிதாக Reprint செய்து கொள்ள முடியும் அது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Reprint PAN Card in Tamil:
ஸ்டேப் – 1
முதலில் Google-ல் Request for Reprint of PAN Card என்பதை தேடுங்கள். அப்படி தேடினால் www.tin-nsdl.com என்ற இணையத்தளம் வரும் அதனை கிளிக் செய்யுங்கள்.
ஸ்டேப் – 2
அதில் உங்களது PAN Card எண், ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.
ஸ்டேப் – 3
அதன் பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள Terms and Condition Agree பண்ணிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள Captcha-வை கொடுங்கள்.
ஸ்டேப் – 4
அதன் பிறகு உங்களின் மொபைலுக்கு ஒரு OTP வரும் அதனை Enter செய்த பிறகு 50 ரூபாய் பணம் செலுத்த பரிந்துரைக்கப்படும். அதனை செலுத்தினால் வெறும் 7 நாட்களில் உங்களது PAN Card Reprint செய்யப்பட்டு வந்துவிடும்.
இன்டர்நெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |