மொபைலில் ads தொல்லையா? அதை ஒழிக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!

Advertisement

How to Stop Ads on Android Phone in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் மொபைல் ஆண்ட்ராய்டு மொபைல் தான். ஆண்ட்ராய்டு மொபைலில் நிரைய வகைகள் உள்ளது. நாம் பயன்படுத்தும் மொபைல் போனில் பல வகையான ஆப்ஸை நாம் டவுன்லோடு செய்து வைத்திருப்போம், பொழுதும் பலவகையான வெப்சைட் மற்றும் யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து வைத்திருப்போம்.

இதனால் நமது மொபைல் டிஸ்பிளேயில் நிறைய விளம்பரங்களாக வந்து குவிந்து இருக்கும். இது சில சமயம் மொபைல் போன் ஹாக்கிங் ஆவதற்கும் வழிவகுக்கும். ஆக இதனை நாம் நமது மொபைல் போனில் இருக்கும் சில செட்டிங்கை மாற்றி அமைத்தான் மூலம் தடுக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

Tricks: 1

முதலில் உங்கள் மொபைல் போனின் Setting உள்ளே செல்லவும், அதில் Google என்பதை கிளிக் செய்யுங்கள்.

பிறகு Ads என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள்.

பின்பு Reset Advertising ID? என்று இருக்கும் அதனை கிளிக் செய்து CONFIRM என்ற

அதன் பிறகு Delete Advertising ID என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Delete செய்து கொள்ளுங்கள்.

இந்த செட்டிங்ஸை மாற்றியமைத்த பிறகு ஓரளவு உங்கள் மொபைலில் விளம்பரங்கள் வருவது தடுக்கப்படும்.

Tricks: 2

உங்கள் முதலில் Setting உள்ளே செல்லவும். அவற்றில் Apps என்பதை கிளிக் செய்யுங்கள், பிறகு அதில் Apps என்ற ஆப்சனுக்கு பக்கத்தில் மூன்று புள்ளிகள் இருக்கும்.. அதனை கிளிக் செய்து Special access என்ற ஆப்ஷனில்  கிளிக் செய்யுங்கள்.

Special access என்ற ஆப்ஷனை கிளிக் செய்த பிறகு Dispaly Over Other Apps அல்லது Appear on top ஆப்சன் இருக்கும் இரண்டு எந்த ஆப்சன் உங்களுக்கு தோன்றினாலும் அதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

இப்பொழு அவற்றில் விளம்பரங்களைக் காட்ட அனுமதி உள்ள அனைத்து செயலிகளின் பட்டியலையும் காண்பீர்கள்.

அங்கே நீங்கள் சந்தேகிக்கும் அல்லது விளம்பரங்களை காட்டும் செயலிகளை ஒவ்வொன்றாக தேர்வு செய்து அதனை மட்டும் Off செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் தேவை உள்ளதா செயலிகளில் இருந்து வரும் விளம்பரங்கள் தடுக்கப்படும்.

Tricks: 3 

மூன்றாவதாக நாம் தெரிந்துகொள்ள இருப்பது Google Chrome உள்ளே செல்லவும். உள்ளே சென்ற பிறகு அவற்றில் இடது வலது புறத்தின் மேல் மூன்று புள்ளிகள் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள்.

பிறகு அவற்றில் Setting என்பதை கிளிக் செய்யுங்கள். ஓராகி ஸ்கிரால் செய்து பாருங்கவும் அதில் Site Setting என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள்.

பின் அதில் Intrusive ads என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள், Intrusive ads On-யில் இருந்தால் அதனை Off செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

அதேபோல் Site setting ஆப்சன் உள்ளே Pop up and redirects ஆப்சன் இருக்கும் அத்தனையும் கிளிக் செய்து Off  செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதன் இரண்டியும் நீங்கள் Off செய்து வைப்பதன் மூலம் தேவை இல்லாத விளம்பரங்கள் வருவதை நீங்கள் தவிர்க்க முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
GPAY- ல PIN NUMBER இல்லாம பணம் அனுப்பலமா?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement