உங்கள் Phone-ல Power Button Work ஆகலையா? கவலைய விடுங்க இந்த ட்ரிக்கை பாலோ பண்ணுங்க

Advertisement

How To Switch On Phone Without Power Button in Tamil

நண்பர்களுக்கு வணக்கம் நாம் அனைவரிடமும் கண்டிப்பாக ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கும். அந்த ஆண்ட்ராய்டு மொபைலை நாம் அதிகமாக பயன்படுத்திக்கொண்டு இருக்கும் போது. குறிப்பாக Power Button-ஐ அடிக்கடி On மற்றும் Off செய்துகொண்டே இருக்கும் போது அதன் பவர் பட்டன் வேலை செய்யாமல் போய்விடும். இதனால் நம்முடைய ஆண்ட்ராய்ட் போனை On செய்ய முடியாது. யாராவது போன் செய்தால் மட்டுமே அந்த போனை ஆன் செய்ய முடியும். அதற்காக யாராவது Call செய்ய மாட்டார்களா என்று காத்துக்கொண்டிருப்போம். இன்னும் சிலர் Power Button-ஐ செய்வதற்கு ஜார்ஜ் போட்டு மிக எளிதாக On செய்து கொள்வார்கள். ஆனால் மொபைல் சுவிட்ச் ஆப் ஆகிவிட்டது என்றால் பிறகு அதனை ஆன் செய்வது என்பது முடியாதா காரியமாக இருக்கும்.

இருப்பினும் Power Button வேலை செய்யவில்லை என்றாலும் நாம் சுவிட்ச் ஆன் செய்ய முடியும். அதுவும் மொபைலை ஜார்ஜ் போட்டு நம்மால் சுவிட்ச் ஆன் செய்ய முடியும் அது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைக்காமல் Highlight செய்யலாம்..

உங்கள் Phone-ல Power Button Work ஆகலையா? கவலைய விடுங்க இந்த ட்ரிக்கை பாலோ பண்ணுங்க

உங்கள் மொபைலின் வால்யூம் பட்டனை (volume button) இடைவிடாது அழுத்தவும், அவ்வாறு அழுத்திக்கொண்டே உங்கள் மொபைல் ஜார்ஜர் பின்னை மொபைலில் சொருகவும்.

இப்பொழுது உங்கள் மொபைல் போன் On ஆகும்.

இப்பொழுது select Language என்பதில் English என்பதை Select செய்துகொள்ளுங்கள்.

பிறகு coloros recovery என்ற ஆப்சன் தோன்றும் அவற்றில் Reboot என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

இப்பொழுது உங்கள் மொபைல் ரீபூட் செய்யப்பட்டு On செய்யப்படும்.

இந்த முறையை நீங்கள் OPPO மொபைல் வைத்திருப்பவர்கள் ட்ரை செய்து பார்க்கலாம். இருப்பினும் மற்ற மடல்களில்  மொபைல் போன் வைத்திருப்பவர்களும் ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் இந்த ட்ரிக்ஸ் பயனளிக்க கூடியதாக  இருக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்க போன்ல Side பட்டன் ஒர்க் ஆகலையா..! அப்போ இந்த Settings மறக்காம On பண்ணிடுங்க..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement