எந்தெந்த கலரை மிக்ஸ் செய்தால் என்ன கலர் கிடைக்கும் தெரியுமா.?

Advertisement

எந்தெந்த கலரை மிக்ஸ் செய்தால் என்ன கலர் கிடைக்கும்

பள்ளி பருவத்தில் drawing என்ற தனிப்பாடம் இருக்கும், இதில் ஆசிரியர்கள் சொல்லி கொடுப்பார்கள். இதனை வைத்து பாட புத்தகத்தில் வரைந்து கலர் அடிக்க வேண்டியிருக்கும். இந்த கலரில் பல வகைகள் உள்ளது. அதவாது கலர் பென்சில், கலர் ஸ்கெட்ச், வாட்டர் கலர் என்று பலவகை இருக்கிறது.

இதில் நம்முடைய பெற்றோர்களின் காலத்தில் கலர் பென்சில் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் வாட்டர் கலர் தான் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் சில கலர்கள் கிடைக்காது. அதற்கான வழியை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம்.

எந்தெந்த கலரை மிக்ஸ் செய்தால் என்ன கலர் கிடைக்கும்:

பொதுவாக நீங்கள் எந்த மாதிரியான கலர் வகைகள் வாங்கினாலும் அதில் 12 நிறங்கள் தான் இருக்கு, சில கலர் லாவெண்டர் அல்லது பர்பிள் கலரெல்லாம் இருக்காது. அதனால் உங்களுக்கு உதவும் வகையில்  இந்த பதிவானது இருக்கும்.

புளு மற்றும் மஞ்சள் நிறத்தை கலந்தால் பச்சை நிறம் கிடைக்கும்.

மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை சேர்த்தால் ஆரஞ்சு கலர் கிடைக்கும்.

புளு மற்றும் சிவப்பு நிறத்தை கலந்தால் பர்பிள் கலர் கிடைக்கும்.

வெள்ளை மற்றும் ஊதா கலரை கலந்தால் ஸ்கை புளு கலர் கிடைக்கும்.

வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தை சேர்த்தால் பிங்க் கலர் கிடைக்கும்.

பிங்க் மற்றும் மஞ்சள் நிறத்தை கலந்தால் peach கலர் கிடைக்கும்.

மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தை சேர்த்தால் chartreuse நிறம் கிடைக்கும்.

புளு, வெள்ளை, பச்சை  நிறத்தை சேர்த்தால் Teal நிறம் கிடைக்கும்.

ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு போன்ற நிறங்களை சேர்த்தால் Tangerine கலர் வரும்.

பச்சை மற்றும் சிவப்பு நிறத்தை சேர்த்தால் பிரவுன் கலர் கிடைக்கும்.

சிவப்பு, மஞ்சள், ஊதா போன்ற நிறங்களை சேர்த்தால் மெரூன் கலர் கிடைக்கும்.

ஊதா, மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களை சேர்த்தால் Mint கலர் வரும்.

பர்பிள் மற்றும் வெள்ளை நிறத்தை கலந்தால் Lilac கலர் வரும்.

Lilac கலர் மற்றும் ஸ்கை புளு கலரை கலந்தால் லாவெண்டர் கலர் கிடைக்கும்.

புளு, சிவப்பு, மஞ்சள் நிறத்தை கலந்தால் கருப்பு நிறம் கிடைக்கும்.

சாப்பிடும் போது கையை தரையில் வைத்து சாப்பிட கூடாது ஏன் தெரியுமா..?

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement