What Happens If You Put Honey On Your Head
வணக்கம் பிரண்ட்ஸ்..! இன்றைய பதிவின் வாயிலாக வாசகர்களுக்கு ஒரு பயனுள்ள தகவலை தெரிவிக்க போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் இந்த பதிவு பயனுள்ள பதிவாக தான் இருக்கும். அப்படி என்ன தகவல் அது என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அதை தெரிந்து கொள்வதற்கு முன் உங்களுக்கு தேன் சாப்பிட பிடிக்குமா..? அப்படி நீங்கள் தேன் சாப்பிட்டு இருந்தால் இந்த விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே..! அது என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தால் இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேனை முடியில் தடவினால் முடி வெள்ளை ஆகுமா..?
பொதுவாக நம் அனைவருக்குமே தேன் என்றால் மிகவும் பிடிக்கும். அனைவருமே தேனை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி சிறு வயதில் நாம் தேன் சாப்பிடும் போது பெரியவர்கள் தேனை சாப்பிட்டு விட்டு உடனே கையை கழுவி விடு. தலையில் தேய்த்தால் முடி நரைத்து விடும் என்று சொல்லியிருப்பார்கள்.
நாமும் இதற்கு பயந்து இன்று வரை தேன் சாப்பிடும் போது கவனமாக சாப்பிடுகிறோம். ஆனால் ஏன் அப்படி சொன்னார்கள், தேனை தலையில் தேய்த்தால் முடி நரைத்து விடுமா..? இது உண்மையா.? பொய்யா.? என்று என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் அதற்கான பதிலை இங்கு காணலாம்.
தேன் பயன்படுத்துபவரா நீங்கள்.. அப்போது இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா
தேனை முடியில் தடவினால் முடி நரைத்து விடும் என்று சொல்வது உண்மை கிடையாது. அதுபோல தேனை முடியில் தடவினால் முடியும் நரைக்காது. தேன் ஒரு இயற்கை கண்டிஷனர் ஆகும். தேனில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் முடி தொடர்பான பிரச்சனைகளை நீக்கி முடியை வளர செய்கிறது. தேனில் குளுக்கோஸ் ஆக்சிடேஸ் என்சைம் உள்ளது. இது ஹைட்ரஜன் பெராக்சைடை உருவாக்குகிறது. இந்த ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு தனித்துவமான பொருளாகும்.
அதுபோல தேனில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை முடியின் வேர்க்கால்களில் ஏற்படும் அழற்சி தொற்றுக்களை நீக்க உதவுகிறது. பூஞ்சை தொற்றான பொடுகு, சொரியாசிஸ் போன்றவற்றை தடுக்க தேன் சிறந்த நிவாரண பொருளாக பயன்படுகிறது.
சுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி.. இதோ சில வழிகள்
சரி தேனில் இவ்வளவு சத்துக்கள் இருக்கிறது. தேனில் இருக்கும் சத்துக்கள் முடிக்கு பெரிதும் உதவுகிறது என்று சொல்கிறீர்கள். அப்புறம் ஏன் தேனை முடியில் தடவினால் முடி நரைத்து விடும் என்று சொன்னார்கள் என்று கேட்பீர்கள்.
அப்படி சொல்வதற்கு காரணம் அந்த காலத்தில் தேனை சாப்பிட்டு விட்டு தெரியாமல் தலையில் தடவி விடுவார்கள். அதுபோல அன்றைய காலகட்டத்தில் இன்று இருக்கும் ஷாம்பு போன்ற பொருட்கள் கிடையாது. அதனால் தலையை சரியாக அலசாமல் விட்டுவிடுவார்கள். இதனால் நாளடைவில் முடி நரைக்க ஆரம்பித்துவிடும். இதன் காரணமாக தான் அப்படி சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் தான் பல வகையான ஷாம்புகள் இருக்கிறது. அதனால் முடியை சையாக அலசி விட்டால் எந்த பிரச்சனையும் கிடையாது.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |