பணம் எடுக்க உதவும் செக்கின் பின்புறம் கையெழுத்து போடுவதற்கான காரணம் இதுதானா..!

Advertisement

Who Signs The Back of a Cheque 

அனைவரிடமும் கண்டிப்பாக ஏதோ ஒரு வங்கியில் அக்கவுண்ட் இருக்கும். அப்படி பார்த்தால் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரிடமும் வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது. அதிலும் சிலர் பணப்பரிவர்த்தனை அதிகமாக செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதனால் இரண்டு அல்லது மூன்று அக்கவுண்ட்களையும் வைத்து இருக்கிறார்கள். இவ்வாறு ஒரு அக்கவுண்ட் வைத்து இருந்தாலும் அல்லது பல அக்கவுண்ட் வைத்து இருந்தாலும் பணம் எடுப்பது என்னவோ வங்கி மற்றும் ATM கார்டு மூலம் தான். அந்த வகையில் சிலர் வங்கியில் அளிக்கப்பட்டிருக்கும் செக் மூலமாக பணம் எடுப்பார்கள். இவ்வாறு பணம் எடுக்கும் போது செக்கின் பின்புறமும் கையெழுத்து போடுவார்கள். ஆகவே பணம் எடுக்க உதவும் செக்கின் பின்புறம் கையெழுத்து போட காரணம் என்ன தெரியுமா..? ஒருவேளை இதற்கான பதிவில் உங்களுக்கு தெரியவில்லை என்றால் இந்த பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

ஏன் சூப்பர் மார்க்கெட்டில் எல்லாம் ஜன்னல்கள் இல்லை தெரியுமா 

பேங்க் செக்கின் பின்புறம் கையெழுத்து போடுவதற்கான காரணம் என்ன..?

பணம் எடுப்பதை பொறுத்தவரை ATM கார்டு, UPI, NET Banking என பல முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பலர் செக் மூலமாகவும் பணம் எடுத்து வருகிறார்கள்.

இவ்வாறு செக் மூலம் பணம் எடுப்பதிலும் இரண்டு வகைகள் இருக்கிறது. எனவே அதனை அடிப்படையாக வைத்து தான் செக்கில் கையெழுத்து போடப்படுகிறது.

  1. Bearer Cheque
  2. Order Cheque

அதாவது Bearer Cheque என்பதை பொறுத்தவரை செக்கின் பின்புறத்தில் கையெழுத்து போட வேண்டிய பழக்கம் இருக்கிறது. அந்த வகையில் இந்த கையெழுத்து இட்டு இருக்கும் ஒரு Bearer Cheque-ஐ யார் கொண்டு வந்தாலும் அவர்கள் பணத்தினை பெற்று கொள்ளலாம்.

bearer cheque

ஏனென்றால் செக்கின் பின்புறத்தில் கையெழுத்து இட்டு இருப்பதை உறுதி செய்த பிறகே பணம் அளிக்கப்படுகிறது. எனவே அந்த செக்கினை கொண்டு வந்த நபருக்கும் பணதிற்கும் எந்த பொறுப்பும் இல்லை என்றாலும் கூட அது வங்கி பொறுப்பாகாது என்பதே இதற்கான அர்த்தமாகும்.

order cheque

மேலும் Order Cheque-ஐ பொறுத்தவரை கையெழுத்து போட வேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்றால் யார் செக்கில் கையெழுத்து இட்டு இருக்கிறார்கள் என்பதையும் அவர் தான் நேரில் வந்து இருக்கிறாரா ன்பதையும் சரிபார்த்த பிறகே உங்களுக்கான பணம் அளிக்கப்படுகிறது.

எனவே வங்கியில் நாம் பயன்படுத்தும் செக்கை பொறுத்தும், நம்முடைய பணபரிவத்தனை பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் என்ற காரணத்திறகாக மட்டுமே செக்கின் பின்புறம் கையெழுத்து போடப்படுகிறது.

 

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –>  Thinking 
Advertisement