கையில் கடிகாரம் அணிதல்
இந்த உலகத்தில் அன்றாடம் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் நமக்கானதாக இருந்தாலும் கூட அதில் சில விஷயங்களை நாம் எதற்காக செய்கிறோம் என்பதே தெரியமால் இருக்கிறது. நாமும் அத்தகைய முறையினை தொடர்ச்சியாக பின்பற்றி வருகிறோம். ஆனால் ஒரு செயலுக்கான காரணம் நமக்கு தெரியாமல் இருந்தாலும் கூட அதன் பின்னால் இருக்கும் காரணம் என்பது மிகவும் சாத்தியமான ஒன்றாகவே இருக்கும். இதன் படி பார்க்கையில் நாம் வேலைக்கு செல்லும் போது, வெளியில் செல்லும் போது என அனைத்து இடத்திற்கு கையில் கடிகாரம் கட்டி செல்லும் பழக்கமானது இருக்கும். அதேபோல் அதிகபட்சமாக கையில் கட்டும் கடிகாரத்தை இடது கையில் தான் அணிவோம். அதனால் இன்றைய பதிவில் கடிகாரம் இடது கையில் அணிவதற்கான காரணம் என்ன என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
ஏன் சூப்பர் மார்க்கெட்டில் எல்லாம் ஜன்னல்கள் இல்லை தெரியுமா
Why Watch on Left Hand in Tamil:
நேரம் என்பது நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் நேரத்தினை வைத்து தான் நம்முடைய வாழ்க்கையில் சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட முடியும்.
அந்த வகையில் நேரத்தினை கணக்கிட வேண்டும் என்றால் கடிகாரத்தின் மூலம் தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதற்காக செல்லும் இடமெல்லாம் கடிகாரம் எடுத்து செல்ல முடியாது என்பதனால் கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் படி பார்க்கையில் அதிகமாக ஆண்கள் முதல் பெண்கள் வரை என அனைவரும் இடது கையில் தான் கடிகாரம் கட்டுகிறார்கள்.
- அதாவது பெரும்பாலும் நாம் வலது கையினை தான் அதிகமாக பயன்படுத்துவோம். அதனால் இடது கையில் கட்டுவதன் மூலம் கடிகாரம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
- மேலும் கடிகாரம் அதிகமாக விலை கொடுத்து வாங்கும் பொருள் என்பதால் இது இடது கையில் பாதுகாப்பாக இருக்கும்.
- வலது கையில் கடிகாரம் கட்டுவது என்றாலோ அல்லது அதில் நேரம் சரியாக ஓடவில்லை என்றாலோ சரிவது என்பது மிகவும் கடினம். அதுவே இடது கையில் அணியும் போது இவை எல்லாம் எளிதானவை.
- அதுமட்டும் இல்லாமல் அதில் ஒரு சிறிய அமைப்பில் பொறிமுறையை முறுக்குவதற்கான அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது, இதனை வலது புறத்தில் சரி செய்ய முடியாது.
இத்தகைய காரணங்களினாலே அதிகமாக இடது கையில் கடிகாரம் அணியப்படுகிறது.
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | Thinking |