Dandruff Cure Tips in Tamil
இன்றைய நிலையில் ஆண் பெண் இருவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான் இது. முடி கொட்டுவதற்கும் இது முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த பொடுகு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக நாம் கடைகளில் விற்கும் இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதனால் முடி வளர்ச்சிக்கு மேலும் பாதிப்பு வருகிறது. பொடுகு தொல்லையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
பொடுகு தொல்லை நீங்க டிப்ஸ்:
Tips -1
ஒரு மிக்சி ஜாரில் ஒரு கைப்பிடி அளவு கொழுந்து வேப்பிலையை எடுத்து கொள்ளுங்கள். பின் அதனுடன் சிறிதளவு துளசி சேர்த்து மை போல அரைத்து கொள்ள வேண்டும்.
பிறகு அதை தலையில் அடிப்பகுதியில் படும்படி தேய்க்க வேண்டும். தலையில் அந்த சாறு நன்கு காய்ந்ததும் தலையை குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இதுபோல வாரம் ஒரு முறை செய்து வருவதால் பொடுகு தொல்லை நீங்கும். பேன் தொல்லையும் நீங்கும்.
நிரந்தரமாக பொடுகு தொல்லை நீங்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்..! |
Tips -2
துளசி, கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள். பின் இவை மூன்றுடன் 1 எலுமிச்சை பழச்சாறை கலந்து மைபோல அரைத்து கொள்ள வேண்டும்.
பின் அதை தலையின் அடிப்பகுதி வரை நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு சிறிது நேரம் கழித்து தலைமுடியை நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு பயன்படுத்தி அலசி கொள்ளலாம்.
இதுபோல செய்து வருவதால் பொடுகு பிரச்சனை அடியோடு நீங்கும். முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
Tips -3
சிறிதளவு மருதாணி இலையை எடுத்து மிக்சி ஜாரில் வைத்து தண்ணீர் சேர்க்காமல் மைபோல அரைத்து கொள்ளுங்கள். பின் அதில் சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு சேர்த்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து ஒரு 20 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
20 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும். இப்படி செய்து வருவதால் பொடுகு பிரச்சனை சரியாகும். முடியும் பளபளப்பாக இருக்கும்.
ஈர், பேன், பொடுகு தொல்லை நீங்க இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள் 100% ரிசல்ட் கிடைக்கும். |
இதையும் பாருங்கள் => பொடுகு பிரச்சனை நீங்கி முடி அடர்த்தியாக வளர அட்டகாசமான டிப்ஸ் உங்களுக்காக..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்=> | Tips in Tamil |