Eyebrows Faster And Thicker Tips
ஆண்களை விட பெண்கள் அனைத்து விஷயங்களிலும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அதில் என்ன தீமைகள் இருக்கிறது என்று தெரியாமலேயே அதை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் நாளடைவில் சருமத்தில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அப்படி பெண்கள் அழகாக வைத்திருக்க நினைப்பதில் புருவங்களும் ஓன்று. பெண்கள் அனைவருக்குமே புருவம் அடர்த்தியாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஆசைப்படுபவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
புருவங்கள் அடர்த்தியாக வளர:
டிப்ஸ் -1
முதலில் சின்ன வெங்காயம் 3 எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். பின் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு மைபோல நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின் அதை எடுத்து அரைத்த வெங்காயத்தில் இருக்கும் சாறை மட்டும் பிழிந்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
இந்த வெங்காய சாறை உங்கள் புருவங்களில் தடவி 5 நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளலாம்.
வெங்காய சாறு புருவ முடியை அடர்த்தியாகவும் வேகமாகவும் வளர செய்கிறது. வெங்காய சாறு புருவங்களில் இருக்கும் கொலாஜன் திசுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. அதனால் புருவங்கள் வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.புருவங்கள் அழகாக இருக்க இந்த 5-யில் ஏதவாது ஒன்றை ட்ரை செய்து பாருங்கள் |
டிப்ஸ் -2
அடுத்து ஒரு கிண்ணத்தில் 1 அல்லது 2 ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ளவும். பின் அந்த தேங்காய் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி கொள்ளவும்.
பிறகு இந்த எண்ணெயை இரவு தூங்க செல்லும் முன் உங்கள் புருவங்களில் தேய்த்து 5 நிமிடம் வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் காலியில் எழுந்து கழுவி கொள்ளலாம்.
இதுபோல 2 வாரங்கள் செய்து வந்தால் உங்கள் புருவங்களில் முடி வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரும். தேங்காய் எண்ணெய் புருவத்தில் முடிகளை வேகமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்கிறது. புருவ முடிகள் கருமையாக வளர உதவுகிறது.
இதுபோல 1 மாதம் வரை செய்து வந்தால் உங்கள் புருவங்கள் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும். ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நண்பர்களே நல்ல ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்.
7 நாட்களில் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |