How To Clean Flask Inside in Tamil
நமக்கு வீட்டில் இருக்கும் வேளைகளில் பெரிய வேலை சமையலறையில் இருக்கும் வேலைகள் தான். அதில் குறிப்பாக பாத்திரம் தேய்ப்பது தான் மிகப்பெரிய வேலை. பெரும்பாலான பெண்களுக்கு பாத்திரம் தேய்க்கும் வேலைதான் பிடிக்காது. மூன்று வேலையும் சமைத்து அதற்கு பயன்படுத்திய பாத்திரங்களை கழுவுவதிலே நாள் பொழுது கழிந்து விடுகிறது. எனவே, உங்கள் வேலைகளை எளிதில் முடிக்கக்கூடிய சில குறிப்புகளை நம் பொதுநலம் பதிவில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் பிளாஸ்கின் உட்புறத்தில் உள்ள கரையை சுத்தம் செய்வது எப்படி.? என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பாத்திரங்களில் நிறைய வகைகள் உள்ளது. அதில் பால் பாத்திரம், டீ பாத்திரம் மற்றும் டீ பிளாஸ்க் போன்றவற்றை எளிதில் சுத்தம் செய்ய முடியாது. அதில் உள்ள விடாப்பிடியான கரையை போக்கவே நீண்ட நேரம் எடுக்கும். அதுமட்டுமில்லாமல், மற்ற பாத்திரங்களை விட பிளாஸ்க்கில் அதிக கரையும் துர்நாற்றமும் வீசும். எனவே, இதனை எப்படி மிகவும் ஈசியாக சுத்தம் செய்வது எப்படி.? என்பதை பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Best Way To Clean Flask in Tamil:
தேவையான பொருட்கள்:
- பேக்கிங் சோடா – 3 ஸ்பூன்
- வினிகர் – 1/2 டம்ளர்
- முட்டை ஓடு – பாதியளவு
- கல் உப்பு – 1 ஸ்பூன்
- அரசி – 3 ஸ்பூன்
- சூடான தண்ணீர் – தேவையான அளவு
இரண்டே நிமிடத்தில் கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற இப்படி செய்யுங்க
சுத்தம் செய்யும் முறை:
முதலில், பிளாஸ்க்கின் உட்புறத்தில் பேக்கிங் சோடா, வினிகர், கல் உப்பு மற்றும் அரிசி சேர்த்து கொள்ளுங்கள். அடுத்து, ஒரு பாதியளவில் உள்ள முட்டை ஓடை எடுத்து பொடியாக நுனிக்கி பிளாஸ்கில் போட்டு கொள்ளுங்கள். அதன் பின் இறுதியாக, தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து பிளாஸ்க் முழுவதும் ஊற்றி 30 நிமிடம் வரை ஊறவிடுங்கள்.
30 நிமிடத்திற்கு பிறகு, பிளாஸ்கை நன்றாக குலுக்கி அதிலுள்ள தண்ணீரை மட்டும் நீக்கி கொள்ளுங்கள். மீண்டும் ஒரு முறை நன்றாக குலுக்கி அதிலுள்ள அனைத்தையும் நீக்கி சூடான தண்ணீர் விட்டு நன்கு கழுவி விடுங்கள். இவ்வாறு நீங்கள், செய்வதன் மூலம் பிளாஸ்க்கின் உட்புறத்தில் படிந்துள்ள அழுக்கு, கறை மற்றும் துர்நாற்றம் அனைத்தும் நீங்கி பிளாஸ்க் புத்தம் புதுசாக மாறிவிடும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |