தமிழ்நாட்டின் அழகான 10 மாவட்டம்

Advertisement

Top 10 Beautiful District In Tamilnadu

பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களும் அழகான மாவட்டம் தான். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தனி சிறப்பு இருக்கும். இருப்பினும் நமது பொதுநலம்.காமில் தினமும் ஒவ்வொரு சுற்றுலா தளங்களை பற்றி பதிவு செய்து வருகிறோம். அதன் வரிசையில் இன்று நாம் தமிழ்நாட்டின் அழகான 10 மாவட்டங்களை பற்றி பார்க்க உள்ளோம். சரி வாங்க அந்த 10 அழகான மாவட்டங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டம்:

திருவண்ணாமலை மாவட்டம் தமிழ் நாட்டில் அழகான மாவட்டமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மிக பெரிய மாவட்டங்களில் இந்த திருவண்ணாமலை மாவட்டம் ஒன்று. பல அழகான பசுமையான ஊர்களையும், கிராமங்களையும் கொண்டுள்ளது இந்த திருவண்ணாமலை. வறட்சி காலங்களிலும் ஓரளவு பசுமையை தக்க வைத்துக்கொள்ளும் மாவட்டமும் இந்த திருவண்ணாமலை மாவட்டம் ஆகும்.

சேலம் மாவட்டம்:

பல அழகான மலைகள் சூழ்ந்த மாவட்டம் தான் இந்த சேலம் மாவட்டம். கல்வராயன் மலைத்தொடரின் பெரும் பகுதி சேலம் மாவட்டத்தில் தான் உள்ளது. பலருக்கும் அதிகம் தெரியாத பச்சைமலை இந்த சேலம் மாவட்டத்தில் தான் உள்ளது. மேலும் அழகான அருவிகள் மற்றும் கிராமங்களையும் சேலம் மாவட்டம் பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டம்:

காவேரி ஆறும், பவானி ஆறும், சத்தியமங்கலம் வனப்பகுதியும் ஈரோடு மாவட்டத்திற்கு அழகு சேர்க்கிறது. பவானிசாகர் அணை மற்றும் கொடிவேரி அணை பார்க்க வேண்டிய அழகான இடங்கள். பல சினிமா படங்கள் இந்த ஈரோடு மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம்:

மேற்குத்தொடர்ச்சி அடிவாரத்தில் அழகாக அமைந்திருக்கும் தென்காசி மாவட்டத்திற்கு அழகிற்கு குறைச்சலே இருக்காது. தமிழ் நாட்டின் குற்றால அருவிகள் இந்த மாவட்டத்தில் தான் உள்ளதாம். குற்றாலம் அருவி மட்டுமில்லாமல் மேலும் பல அழகான இடங்கள் தென்காசியில் அமைந்துள்ளதாம்.

திண்டுக்கல் மாவட்டம்:

திண்டுக்கல் மாவட்டத்தில் மிக அழகான இடம் என்றால் அது கொடைக்கானல் மலை பகுதி தான். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை என்ற பகுதியும் இருக்கிறது. இந்த சிறுமலையும் ரொம்ப அழகான மலை பகுதி ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஓசூரில் இப்படி ஒரு இடம் இருக்கா.! இவ்வளவு நாளா தெரியலயே..!

திருநெல்வேலி மாவட்டம்:

தமிழ்நாட்டின் மிக முக்கியமான மற்றும் அழகான மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தை சொல்லலாம். ஐந்து வகை நிலங்களும் இருக்கும் ஒரு இடம் திருநெல்வேலி மாவட்டம் தான். திருநெல்வேலி மாவட்டத்தில் மிக அழகான இடம் பாபநாசம்.

கோயம்புத்தூர் மாவட்டம்:

இந்த கோயம்புத்தூர் மாவட்டத்தில் அனைவரையும் அதிகம் ஈர்க்கும் இடமாக கோவைக்குற்றாலம், வெள்ளையங்கிரி மலை, பொள்ளாச்சி, வால்பாறை என்று நிறைய இடங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

கன்னியாகுமரி மாவட்டம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை மிகவும் அழகாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். அதன்பிறகு தென்னந்தோப்பு மற்றும் ஆறுகளும் இந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிகவும் அழகு சேர்க்கிறது. இந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சீசன்களிலும் இயற்கை அழகையும், கடற்கரை அழகையும் காணமுடியும். இந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றி பார்ப்பதற்கு மிகவும் அழகான இடங்கள் நிறைய இருக்கிறது.

தேனி:

தமிழ்நாட்டின் மிக அழகான மாவட்டம் என்று தேனி மாவட்டத்தை  சொல்லலாம். இங்கு வானுயர்ந்த மலைகள் சூழ்ந்த பசுமையான அழகை தேனி மாவட்டம் பெற்றுள்ளது. இங்கு மேக மலை, கொழுக்குமலை, குமிழி, குரங்கணி இவையெல்லாம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இயற்கையை விரும்பக்கூடிய நபர்கள் சுற்றி பார்க்க வேண்டிய இடம் தான் இந்த தேனி மாவட்டம்.

நீலகிரி மாவட்டம்:

மலைகளின் அரசி என்று அழைக்கக்கூடிய மாவட்டம் தான் நீலகிரி மாவட்டம். நீலகிரி மாவட்டத்தின் அழகை வார்த்தைகளால் கூறமுடியாது. ஊட்டியை தவிர நீலகிரி மாவட்டத்தில் இன்னும் நிறைய இடங்கள் அமைந்துள்ளது.

மேல் கூறப்பட்டுள்ள அனைத்துமே தமிழ்நாட்டில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் தான். நீங்கள் இயற்கையை அதிகம் விரும்பும்  நபராக இருந்தால் கண்டிப்பாக மேல் கூறப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று வாருங்கள் நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கொடைக்கானலில் இவ்வளவு இடம் இருக்கா பாக்கமாக வரக்கூடாது..!

 

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide
Advertisement