வாழைப்பழ கேக் செய்யலாம் !!! How to Make Banana Cake Tamil

கேக் செய்முறை

பேரீச்சம்பழ கேக் மற்றும் வாழைப்பழ கேக் செய்முறை (How to make cake in tamil)..!

குழந்தைகளுக்கு விடுமுறை வேற விட்டாச்சு, இந்த விடுமுறை நாட்களில் தான் குழந்தைகள் விதவிதமாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். எனவே குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய வாழைப்பழ கேக் மற்றும் பேரீச்சம்பழ கேக் எப்படி செய்வது என்று இந்த பகுதியில் நாம் காண்போம் வாங்க..!

பேரீச்சம்பழ கேக் செய்முறை

 1. பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் – 100 கிராம்
 2. பிரவுன் சுகர் – 75 கிராம்
 3. மைதா – 75 கிராம்
 4. வெண்ணெய் – 30 கிராம்
 5. முட்டை – 1
 6. வெனிலா எசன்ஸ் – அரை தேக்கரண்டி
 7. சமையல் சோடா – அரை தேக்கரண்டி
 8. சூடான தண்ணீர் – 125 மில்லி

ஸாஸ் செய்யத் தேவையான பொருட்கள்

 1. பிரவுன் சுகர் – 100 கிராம்
 2. வெண்ணெய் – 95 கிராம்
 3. திக்கான கிரீம் – 125 கிராம்

ஈஸியா பப்ஸ் செய்யலாம் வாங்க !!!

கேக் செய்முறை (How to make cake in tamil) ..!

பேரீச்சைப்பழம் கேக் செய்முறை ஸ்டேப் :1

பேரீச்சைப்பழம் கேக் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் பேரீச்சம்பழம், சமையல் சோடா போட்டு அதில் சூடான வெந்நீர் ஊற்றவும். கேக்கிற்கான கலவை தயார் பண்ணும்வரை ஓரமாக வைக்கவும் .

வெண்ணெய், பிரவுன் சுகர் இரண்டையும் மிருதுவாகும்வரை அடிக்கவும்.

பேரீச்சைப்பழம் கேக் செய்முறை ஸ்டேப் :2

பின்பு முட்டையைச் சேர்த்து அடிக்கவும். (நிறைய அளவு செய்யும்போது முட்டையை ஒன்று ஒன்றாக அடிக்க வேண்டும்)

அதன் பின் மாவைப் போட்டு மெதுவாகக் கலக்க வேண்டும். வேகமாக அடிக்கக் கூடாது

பேரீச்சைப்பழம் கேக் செய்முறை ஸ்டேப் :3

பின்பு ஊற வைத்த பேரீச்சம் கலவை, வெனிலா எசன்ஸ் இரண்டையும் மாவுக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

பின் வெண்ணெய் தடவிய கேக் டின்னில் கலவையை ஊற்றவும்.

பேரீச்சைப்பழம் கேக் செய்முறை ஸ்டேப் :4

கேக் செய்வதற்கு முன் ஓவனை 180 டிகிரி சூடு செய்ய வேண்டும். அப்படி ஏற்கனவே சூடு செய்த ஓவனில் கேக் கலவையை 45 நிமிடத்திற்கு வேகவிட வேண்டும். 45 நிமிடம் கழித்து வெந்துவிட்டதா என மரக்குச்சியால் குத்திப் பார்க்கவும். ஸாஸ் செய்வதுவரை கேக் சூடு ஆறட்டும்.

ஸாஸ் செய்யும் முறை

ஒரு கனமான பாத்திரத்தில் வெண்ணெயை உருக விடவும்; உருகியதும் பிரவுன் சுகர், கிரீம் போட்டு 10 நிமிடங்களுக்குச் சிறு தீயில் நன்றாகக் கலக்கவும். பின்பு அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

ஆறின கேக்கின் மேல் மரக்குச்சியால் சிறு சிறு துவாரங்கள் போடவும். அதன் மேலே செய்து வைத்த ஸாஸில் பாதி ஊற்றவும். மீதி ஸாஸ் தேவைப்படும்போது சூடு பண்ணி உபயோகப்படுத்தலாம்.

இந்தக் கேக்கை வெனிலா ஐஸ் கிரீமுடன் சுவைத்தால், மிகவும் அருமையாக இருக்கும்.

சுவையான மினி பிட்சா செய்வது எப்படி !!!வாழைப்பழ கேக் செய்முறை (How to make cake in tamil)..!

வாழைப்பழ கேக் தேவையான பொருட்கள்:

 1. மைதா மாவு – 250 கிராம்
 2. சர்க்கரை பவுடர் – 250 கிராம்
 3. வெண்ணெய் – 200 கிராம்
 4. வாழைப்பழம் – 250 கிராம்
 5. வாழைப்பழ எசன்ஸ் – 1 டீஸ்பூன்
 6. வெனிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன்
 7. சோடியம் பை கார்பனேட் – 1 டீஸ்பூன்
 8. உலர்திராட்சை – 125 கிராம்
 9. பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
 10. ஆப்ப சோடா – 1/2 டீஸ்பூன்
 11. கோழி முட்டை – 4

வாழைப்பழ கேக் செய்முறை (Banana Cake Preparation):

 • வாழைப்பழ கேக் செய்முறை முதலில் மைதா மாவை சல்லடையில் சலிக்கும்போது, ஆப்ப சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து சலிக்க வேண்டும்.
 • வாழைப்பழத்தையும், சோடியம் பை கார்பனேட் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
 • பின்பு வெண்ணெய் மற்றும் சர்க்கரை பவுடர் இரண்டையும் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நுரை வரும் அளவிற்கு நன்கு அடித்து கொள்ளவும்.
 • பின்பு அடித்த முட்டையுடன் வெண்ணெய் கலவையை சேர்க்க வேண்டும்.
 • முட்டை கலவை, வெண்ணெய் கலவை, மைதா மற்றும் பிசைந்து வைத்துள்ள வாழைப்பழம், திராட்சை, முந்திரி மற்றும் எசன்ஸ் அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
 • மூன்று ஸ்டீல் ட்ரேயில் பட்டர் பேப்பரை போட்டு வெண்ணெய் தடவி, அவற்றில் அந்த கலவையை ஊற்றி அடுப்பில் மிதமான தீயில் சுமார் 1 மணி நேரம் வேகவைத்து எடுக்கவும்.
 • அவ்வளவுதான் சுவையான வாழைப்பழம் கேக் தயார். இந்த கேக்கை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஸ்பெஷலான முட்டை சாண்ட்விச் மற்றும் ப்ரெஷ்ஷான புதினா சட்னியும் ரெசிபி !!!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.