வீட்டிலேயே பலூடா செய்வது எப்படி ??? How to make falooda in tamil..!

சப்ஜா விதை மருத்துவ பயன்கள்

பலூடா செய்யும் முறை..! How to make falooda in tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சப்ஜா பலூடா செய்வது எப்படி (how to make falooda in tamil) மற்றும் சப்ஜா விதை மருத்துவ பயன்கள் பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

சப்ஜா பலூடா செய்ய தேவையான பொருட்கள்:

  1. சப்ஜா விதை (sabja seeds in tamil) – ஒரு ஸ்பூன்,
  2. பால் – ஒரு டம்ளர்
  3. சேமியா – சிறிதளவு
  4. ஐஸ்க்ரீம் – 2 க்யூப்
  5. பாதாம், வால்நட், முந்திரி – தேவையான அளவு
  6. ப்ரவுன் சுகர் – தேவையான அளவு
  7. ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, நாவல்பழம் – சிறிதளவு
இதையும் படிக்கவும் வீட்டுலயே மிகச்சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம் அதுவும் கிரீம் இல்லாமல்

பலூடா செய்யும் முறை (How to make falooda in tamil):

Step: 1

சப்ஜா விதைகளை இரவே ஊறவைத்து கொள்ளவும், அதுவே 3 அல்லது 4 ஸ்பூன் அளவிற்கு வந்துவிடும்.

Step: 2

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பழங்களையும் தனித்தனியாக தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

Step: 3

பின்பு சேமியாவை வேகவைத்துக் கொள்ளவும்.

பிறகு ஓரு கிளாஸில் சப்ஜா விதை ஒரு ஸ்பூன் போட்டு அதன் மேல் சிறிதளவு சேமியா சேர்க்கவும்.

Step: 4

ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் போட்டு, மாதுளம் ஜூஸ் விட்டு அதன் மேல் ஐஸ்கிரீம் போட வேண்டும்.

பின்பு மறுபடியும் ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை சேர்க்க வேண்டும். பின்பு அதன் மேல் திரும்பவும் சேமியாவை சேர்க்க வேண்டும்.

Step: 5

ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் போட்டு, நாவல் பழம் ஜூஸ் விட்டு மறுபடி சப்ஜா விதை ஒரு ஸ்பூன் போட்டு அதன் மேல் சிறிதளவு சேமியா சேர்க்கவும்.

Step: 6

ட்ரை ஃப்ரூட்ஸ் கொஞ்சம் போட்டு, ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் விட்டு அதன் மேல் ஜஸ்கிரீம் போட வேண்டும்.

அதன் மீது சர்க்கரை கலக்கிய பாலை விட்டு லேசாக கலந்துவிடவும்.

பின்பு ஃப்ரிட்ஜில்  சிறிது நேரம் வைக்க வேண்டும், இப்பொழுது சூப்பரான சப்ஜா பலூடா ரெடி அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.

சரி இப்போது சப்ஜா விதைகளின் (sabja seeds benefits in tamil) மருத்துவ பயன்களை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க.

இதையும் படிக்கவும் வாழைப்பழ கேக் செய்வது எப்படி? தெளிவான செய்முறை விளக்கம்..!

சப்ஜா விதை மருத்துவ பயன்கள் (Sabja seeds benefits in tamil)

சப்ஜா விதை மருத்துவ பயன்கள் :1

இந்த சப்ஜா விதை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்பு கொண்டது.

சப்ஜா விதை மருத்துவ பயன்கள் (Sabja seeds benefits in tamil) : 2

ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.

சப்ஜா விதை மருத்துவ பயன்கள் : 3

உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம்.

சப்ஜா விதை மருத்துவ பயன்கள் : 4

இந்த சப்ஜா விதைகள் (Sabja seeds benefits) ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.

சப்ஜா விதை மருத்துவ பயன்கள் : 5

மலச் சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும் இருப்பினும் கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைகளை பெற்ற பின்பு இந்த சப்ஜா விதைகளை சாப்பிடுவதும் மிகவும் நல்லது.

சப்ஜா விதை மருத்துவ பயன்கள் (Sabja seeds benefits in tamil): 6

சளி, காய்ச்சல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், கீல்வாதம் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறு, மூக்கடைப்பை நீக்கும்; தோல் வியாதிகளைப் போக்கும்; குடல் புழுக்களை வெளியாக்கும்.

சப்ஜா விதை மருத்துவ பயன்கள் (Sabja seeds benefits in tamil) :7

சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை குறைத்து, உடலை சீரான சீதோஷ்ண நிலைக்கு கொண்டு வரும் இயல்புகொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கவும் Special ரவா கேசரி இப்படி செய்து பாருங்க -அருமையான சுவை..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>samayal kurippu