பாஸ்தா செய்வது எப்படி | How to Prepare Pasta in Tamil
Pasta Recipes in Tamil – வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மக்ரோனி பாஸ்தா எப்படி செய்யலாம் என்று தெரிஞ்சிக்கலாம். உடலுக்கு மிகவும் சிறந்த உணவாக பாஸ்தா விளங்குகிறது. பாஸ்தா காலை மற்றும் மாலை நேரத்தில் சாப்பிடக்கூடிய டிபன் வகையை சேர்ந்தது. இந்த உணவானது மிக விரைவில் செய்யக்கூடிய டிஷ் ஆகும். உடல் மெலிந்து காணப்படுபவர்கள் உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இந்த பாஸ்தாவை சாப்பிட்டால் நிச்சயமாக உடல் குண்டாகிவிடும். இத்தகைய பாஸ்தாவை எவ்வாறு செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும் என்பதை பார்ப்போமா.!
சுவையான வெஜிடபிள் பாஸ்தா சூப் செய்யலாம் வாங்க !!! |
செய்ய தேவையான பொருள்:
- பாஸ்தா – 2 கப் (150 கிராம்)
- தண்ணீர் – 8 கப்
- உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- ஆயில் – 2 டேபிள் ஸ்பூன்
- வெட்டிய இஞ்சி – 1 டீஸ்பூன்
- நறுக்கிய பூண்டு பல் – 2
- நறுக்கிய வெங்காயம் – 1
- தக்காளி – 2 அல்லது 3 அரைத்த சாஸ்
- துண்டாக நறுக்கிய கேரட் – 1
- பச்சை பட்டாணி – 1/4 கப்
- சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
- குடைமிளகாய் நறுக்கியது – 1
- கரமசாலா – 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை – சிறிதளவு நறுக்கியது
மக்ரோனி பாஸ்தா எப்படி செய்வது – Pasta Recipes in Tamil:
பாஸ்தா செய்வது எப்படி ஸ்டேப் 1: முதலில் ஒரு கடாயில் மக்ரோனியை வேக வைப்பதற்கு தண்ணீர் 8 கப் அளவிற்கு எடுத்துக்கொண்டு கொதிக்க வைக்கவும்.
ஸ்டேப் 2: கொதிக்கும் நீரிலே உப்புவை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டேப் 3: அடுத்ததாக 2 கப் அளவிற்கு பாஸ்தாவை நீரில் வேகவைக்க வேண்டும்.
ஸ்டேப் 4: 88 முதல் 10 நிமிடத்தில் வெந்துவிடும் தன்மை கொண்டது. வெந்த பிறகு தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 5: இப்போது தனி கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்றாக சூடானதும் நறுக்கி வைத்துள்ள 1 டீஸ்பூன் இஞ்சியை சேர்க்கவும்.
ஸ்டேப் 6: அதனுடன் நறுக்கி வைத்துள்ள பூண்டையும் சேர்க்கவும். இப்போது நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
ஸ்டேப் 7: வதக்கிய பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அடுத்து 2 அல்லது 3 தக்காளியை சாஸ் போன்று அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 8: கடாயில் வதக்கியத்துடன் இந்த தக்காளி சாசினையும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
ஸ்டேப் 9: அடுத்து அவற்றில் நறுக்கிய 1 கேரட்டை சேர்க்கவும். கேரட் சேர்த்த பிறகு பச்சை பட்டாணியும் சேர்க்கவும்.
ஸ்டேப் 10: அடுத்து கடாயில் குடைமிளகாய் நறுக்கி வைத்துள்ளதை சேர்க்கவும். நன்றாக வதக்கிய பிறகு இதனுடன் 1/2 டீஸ்பூன் சீரகத்தூள், கரமசாலா, காரத்திற்கேற்ப மிளகாய்த்தூள் சேர்த்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 11: இப்போது அனைத்தையும் சேர்த்த பிறகு உப்பு தேவையான அளவிற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டேப் 12: அடுத்து இதனை வதக்கிவிட்டு சிறிது நேரம் வேகவைக்க வேண்டும்.
ஸ்டேப் 13: நன்றாக வெந்த பிறகு வேகவைத்துள்ள பாஸ்தாவை அதில் சேர்த்து அதனுடன் 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்க்க வேண்டும்.
ஸ்டேப் 14: அடுத்ததாக கொத்தமல்லி இலை நறுக்கியதை சிறிதளவு சேர்த்து வதக்கிவிட வேண்டும்.
ஸ்டேப் 15: கடைசியாக 1 டீஸ்பூன் ஆயிலை சேர்த்துக்கொள்ள வேண்டும். இப்போது அதை வதக்கிவிட வேண்டும். சுவையான பாஸ்தா ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal kurippu tamil |