தீபாவளி ஸ்பெஷல் தேங்காய் பர்பி செய்வது எப்படி?

Thengai Parpi Seivathu Eppadi

தேங்காய் பர்பி செய்வது எப்படி தமிழில் – Thengai Parpi Seivathu Eppadi

வணக்கம் நண்பர்களே தீபாவளி வந்து விட்டது.. இன்னும் உங்கள் வீட்டுல தேங்காய் பர்பி செய்யவில்லையா.. தீபாவளி என்றாலே அனைவரது வீட்டிலும் செய்ய கூடிய பலகாரங்களில் ஒன்று தான் தேங்காய் பரபி. இந்த தின்பண்டத்தை சிலர் தேங்காய் மிட்டாய் என்றும் சொல்வார்கள். சிலர் அதனை தேங்காய் பாறை என்றும் செல்வார்கள். இந்த பலகாரம் செய்வதற்கு மிகவும் எளிமையாக தான் இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு அருமையான சுவீட் ரெசிபி. இந்த தேங்காய் பர்பி தங்களுக்கு செய்ய தெரியாது என்றால் கவலையை விடுங்கள் இந்த பதிவு தங்களுக்கானது தான். மிக எளிமையான முறையில் தேங்காய் பர்பி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம். இந்த தீபாவளிக்கு இந்த தேங்காய் பர்பி சுவீட்டை செய்து அசத்துங்கள்..

5 நிமிடத்தில் தீபாவளி பலகாரம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  1. தேங்காய் துருவல் – ஒரு கப்
  2. சக்கரை – ஒரு கப்
  3. ஏலக்காய் – 4 (பொடித்தது)
  4. முந்திரி, பாதாம் – தலா 1 தேக்கரண்டி (பொடியாக்கியது)
  5. நெய் – 1 தேக்கரண்டி
தீபாவளி ஸ்வீட் செய்வது எப்படி?

தேங்காய் பர்பி செய்முறை தமிழ்:

Thengai Parpi

ஸ்டேப்: 1

முதலில் துருவி வைத்துள்ள தேங்காயை லேசாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

ஸ்டேப்: 2

அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக்  சேர்த்து அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்ச வேண்டும்.

ஸ்டேப்: 3

பதம் வந்ததும் தேங்காய்த் துருவலைக் கொட்டி கிளறவும். நன்றாக கிளறி கெட்டி பதம் வந்ததும், வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி?

ஸ்டேப்: 4

ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும்.

ஸ்டேப்: 5

ஒரு தேக்கரண்டி நெய்யில் சீவிய முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டிய தேங்காய் கலவையில் கொட்டி லேசாக அழுத்தி விடவும்.

ஸ்டேப்: 6

லேசாக சூடு ஆறியதும் கத்தியால் விருப்பமான வடிவில் வில்லைகளாக போட்டு நன்கு ஆற விடவும்.

சமையல் குறிப்பு:

அடுப்பில் தொடர்ச்சியாக விடாமல் கிளற வேண்டும் இல்லையெனில் அடிபிடித்துவிடும்.

சர்க்கரைக்கு பதில் வெல்லம் போட்டும் தேங்காய் மிட்டாய் செய்யலாம். வெல்லம் சேர்த்தால் மிட்டாய் பிரவுன் கலரில் வரும்.

தீபாவளி பலகாரங்கள் செய்வது எப்படி?
தீபாவளி ஸ்பெஷல் பால்கோவா இப்படி செய்யலாம்..!
தீபாவளி ஸ்பெஷல் ருசியான சந்திரகலா ஸ்வீட் செய்வது எப்படி?
தீபாவளி ஸ்பெஷல் சீப்பு சீடை

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil