அரை கீரை பயன்கள் | Arai Keerai Uses in Tamil
பெயர்தான் அரை ஆனால் இந்த கீரையின் நன்மைகள் பலருக்கு தெரிவதில்லை. அரைக்கீரையை ஒரு முறை பயிரிட்டால் அது பல மாதங்களுக்குப் பலன் தரும். அரைக்கீரையை தினமும் உணவோடு சாப்பிட்டு வர உடலுக்கு அனைத்து பலன்களும் கிடைக்கக்கூடும். நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கு சத்தான உணவு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும். உடலில் ஏற்படக்கூடிய அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் உடையது இந்த அரை கீரை. பல மகத்தான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள அரை கீரை பற்றிய நன்மைகளை இங்கே படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
முடக்கத்தான் கீரை பயன்கள் |
அரை கீரையில் அடங்கியுள்ள சத்துக்கள்:
அரை கீரையில் வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் போன்றவை அதிகமாக இடம் பெற்றுள்ளன. இவ்வளவு ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ள அரை கீரையை சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உண்ணலாம். தினமும் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:
பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள ஒரே கீரை அரை கீரை. சிலருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அவர்களை மிக விரைவில் தொற்று நோயானது பாதிப்படைய செய்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் உணவில் அரை கீரையை சேர்த்துக்கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அரை கீரை ஒரு கிருமி நாசினியாகவும் விளங்குகிறது.
உடல் பலம் பெற:
ஒரு சிலர் கடுமையான உடல் பாதிப்பினால் மிகவும் மெலிந்து போய் எலும்பும் தோலுமாக இருப்பார்கள். உடல் பலம் பெற மருந்து கடைகளில் விற்கும் சத்து டானிக், ஊசி ஏற்றுக்கொள்வார்கள். விலை உயர்ந்த டானிக்கை விட உடலில் அதிக பலத்தைத் தரக்கூடியது அரைக்கீரை. உடல் பலம் பெற அரைக்கீரையைத் தினமும் நெய்யுடன் சேர்த்துப் பொரியல் அல்லது கடையல் செய்துக் கொடுத்து வந்தால் பாதிப்படைந்தவர்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
வயிற்று புண் குணமடைய:
காலையில் வேலைக்கு செல்லும் பெரும்பாலானோர் காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதால், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. வயிற்றில் உள்ள புண்களை சரி செய்ய அரை கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டு வரலாம்.
வெந்தய கீரை நன்மைகள் |
கர்ப்பிணி பெண்களுக்கு உடல் பலம் கிடைக்க:
கர்ப்பிணிகள் உடலில் பலம் இழந்து இருக்கும் போது இந்த அரைக்கீரையைக் கடைந்து சாப்பிட்டு வந்தால் குழந்தைக்குத் தேவையான பாலும் அதிகமாக சுரக்கும். பிரசவித்த பெண்ணுக்கு ஆகாரம் கொடுக்க ஆரம்பித்த சமயம் அரைக்கீரையையும் கடைந்து கொடுப்பது நம் நாட்டு பழக்கத்தில் ஒன்றாகும்.
காய்ச்சல் குணமாக:
காய்ச்சல் பிரச்சனையை அடிக்கடி சந்திப்பவர்களுக்கு உடலில் வெப்பம் அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். மேலும் கை, கால்களில் வலியையும் உண்டாகும். இந்த காய்ச்சல் தீர்ந்ததும் நமது உடலுக்கு மீண்டும் பழைய பலம் திரும்ப கிடைக்க அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மனதிற்கும் தெம்பை ஏற்படுத்தும்.
உடல் சூடு குறைய:
அரை கீரையானது உடல் சூட்டைச் சமநிலையாக வைத்திருக்கும். நோயால் பாதிக்கப்பட்டு தேறியவர்களின் உடல் பலவீனத்தைப் போக்க அரைக்கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் பலவீனம் அகன்று பலம் பெறுவார்கள்
புற்றுநோய் குணமாக:
புற்று நோய்களில் பல வகையான புற்றுநோய்கள் உள்ளது. அதில் வயிற்று புற்று நோயும் ஒன்று. இந்த புற்று நோய் வயிறு மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்பு கொண்ட குடல், கணையம் போன்றவற்றையும் பாதிக்கும் தன்மை உடையது. அரை கீரையை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்பவர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான். ஏற்கனவே புற்றுநோய் பாதிப்புகள் உள்ளவர்கள் அரை கீரையை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.
ஆண்மை அதிகரிக்க:
பெரும்பாலான ஆண்களுக்கு இன்றைய காலத்தில் மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது. இது ஆண்களின் இனப்பெருக்க நரம்பு மண்டலங்களை பாதித்து ஆண்மை குறைவு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இப்படியான நிலையிலுள்ள ஆண்கள் அடிக்கடி அரை கீரையை தங்களின் உணவில் சேர்த்து கொள்வதால் ஆண்மை குறைவு விரைவில் நீங்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியம் |