இதை தெரிஞ்சுக்கிட்டு அரைக்கீரை சாப்பிடலாமா.! வேணாமான்னு யோசிங்க..

Arai Keerai Benefits in Tamil

அரைக்கீரை பயன்கள் | Arai Keerai Benefits in Tamil

கீரை  என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் இதில் ஏரளாமான சத்துக்கள் அடங்கியுள்ளது. கீரையில் உள்ள நன்மைகள் மட்டும் தெரிந்தால் தினமும் ஒரு கீரை சாப்பிடுவோம். நம் முன்னோர்கள் கடையில் விற்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் இயற்கையாக விளையும் காய்கறி மற்றும் கீரைகளை சாப்பிட்டதுனால் தான் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் பாஸ்ட் புட் மற்றும் ருசியை தேடி சாப்பிடுகின்றனர். அதனாலேயே உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அரைக்கீரை நன்மைகள்:

பல் வலி:

அரைக்கீரை நன்மைகள்

அரைக்கீரை வேரில் பல் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. பல் மற்றும் ஈறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

அரை கீரையை மஞ்சளுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீரை வடிக்கட்டி சக்கை இல்லாமல் நீரை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை கொண்டு வாய் கொப்பளித்தால் பல் வலி பிரச்சனை சரியாகிவிடும்.

முருங்கை கீரை நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. அதனால் அரைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கல்லீரல்:

அரைக்கீரை நன்மைகள்

மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டவர்கள் அரை கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலே கல்லீரல் தொடர்பான பிரச்சனை சரியாகிவிடும்.

சிறுநீரகம்:

அரைக்கீரை நன்மைகள்

உடலிற்கு தேவையான அளவு நீரை குடிக்காமல் இருப்பதால் தான் சிறுநீரக பிரச்சனை ஏற்படுகிறது. நீங்கள் அரை கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தாலே சிறுநீரக பிரச்சனை மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், இதனை சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் வழியாக வெளியேற்றும்.

புற்றுநோய்:

அரைக்கீரை நன்மைகள்

புற்றுநோய் வகைகளில் வயிற்று புற்றுநோயும் ஒன்று. இவை வயிறு மற்றும் குடல்,கணையம் போன்றவற்றையும் பாதிக்கும் தன்மை கொண்டது. அரை கீரையை உணவில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்று புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம். வயிற்று புற்றுநோய் அதிகம் பாதிக்கப்பட்டவர்களும் அரை கீரையை அதிகம் சாப்பிட வேண்டும்.

பொன்னாங்கண்ணி கீரை நன்மைகள்

வயிற்று புண்:

 

காலை உணவுகள் சாப்பிடாமல் இருப்பது, நேரத்திற்கு சரியாக உணவை சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றால் வயிறு புண் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய அரை கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புண்ணை சரி செய்யலாம்.

கொழுப்பின் அளவு:

அரைக்கீரை நன்மைகள்

இந்த கீரையில் டோகோட்ரியனால்ஸ் எனப்படும் வைட்டமின் வகை இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய பிரச்சனை வராமலும் தடுக்கிறது.

அரைக்கீரை வாங்கி சமைப்பதற்கு முன் அதன் தீமைகளை தெரிந்து கொள்ளுங்கள்..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்