IppoPay Mohan K Success Story
இந்த பரபரப்பான உலகில் இப்போதெல்லாம் பேங்கிற்கு சென்று பணம் எடுப்பதற்கும், போடுவதற்கும் நேரமும் இருப்பதில்லை பொறுமையும் இருப்பதில்லை. உண்மையை சொல்லப்போனால் அதெல்லாம் மிகவும் அரிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது. ஒரே ஒரு ஸ்மார்ட்போன் உலகமே நம் கையில். இந்த காலக்கட்டத்தில் எதையும் ஸ்மார்ட்டாக செய்வதைதான் அனைவரும் விரும்புகிறோம். அந்த வகையில், மொபைல் பேமெண்ட் ஆப்ஸ் மூலம் நொடிப்பொழுதில் எத்தன லட்சமாக இருந்தாலும் பரிமாறிக்கொள்ளலாம். அந்த அளவிற்கு நமது டெக்னாலஜி எல்லாம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
இந்த பேமெண்ட் ஆப்ஸ், பணத்தைப் பரிமாறிக் கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்குப் புதிய அனுபவத்தை வழங்கவும் புதிய வழிகளைக் கொண்டு வருகின்றன. இப்போதெல்லாம், Google Pay, Paytm, Mobikwik, PhonePe, PayU மற்றும் Razorpay போன்ற அப்ளிகேஷன்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றன. மேலும் சில நிறுவனங்கள் அடுத்த பில்லியன் பயனர்களை ஆய்வு செய்வதை நோக்கமாக கொண்டு, மெட்ரோ அல்லாத நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள இடைவெளியைக் குறைக்க முயற்சி செய்துவருகின்றன.
IppoPay நிறுவனர் மோகன்
மோகனின் ஆரம்பகால வாழ்கை:
ராமேஸ்வரத்தியுள்ள சிறிய கிராமமான தாமரைக்குளத்தில், மீனவர் குடும்பத்தில் பிறந்ததவர் மோகன். அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
பிறகு, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள எம்.டி சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் 2006-ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்தார்.
கல்லூரி படிப்பை முடித்த மோகன்.கே சென்னையில் ஒரு சிறிய நிறுவனத்தில் ஒரு புரோகிராமராக வாழ்க்கையை தொடங்கினார்.
மோகனின் முதல் நிறுவனம்:
2013 ஜனவரி 13-ல் Roamsoft Technologies என்ற பெயரில் தனது சொந்த நிறுவனத்தை தொடங்கினர். Roamsoft Technologies, ஒரு software Development நிறுவனமாகும். FinTech-இல் அதிக ஆர்வம் கொண்ட மோகன் கே, 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஒரு FinTech நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
Foloosi மூலன் FinTech உலகின் முதல் அடி:
அந்த நிகழ்ச்சியில் அவர் துபாயை மையமாக கொண்டு செயல்படும் தொழிலதிபர் ஒமர் பின் பெர்க்கை சந்தித்தார். ஒமர் பின் பெர்க், Foloosi என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவர். ஒமர் பின் பெர்க், மோகனை Foloosi நிறுவனத்தின் CTO (chief Technology Officer)வாக பணிபுரிய அழைத்தார். அதாவது UAE இல் ஃபின்டெக்கால் உருவாகும் சிக்கல்களைத் தீர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் அழைத்தார்.
POS இயந்திரம் பயன்படுத்தாமல், QR code, payment Link, payment Gateway போன்றவை பயன்படுத்தி வணிகங்கள் நடைப்பெற தேவையான மென்பொருட்களை தயாரிப்பதில் Floosi நிறுவனம் ஈடுபட்டுவந்தது அதில் ஒரு அங்கமாக இணைய மோகன் கே அழைக்கப்பட்டார்.
ஃபேஷன் உலகின் புதிய பரிமாணத்தை உருவாக்கிய நிதி யாதவின் வெற்றிக்கதை
அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட மோகன் கே, சென்னையில் ஒரு குழுவை உருவாக்கி UAE -ன், Foloosi கான ஒரு பூட்ஸ்ட்ராப் முயற்சியில் இறங்கினர்.
2018-ல் சில லட்சங்களை கொண்டு Foloosi-க்கான தனது பணியை தொடங்கினர். Payment Gateway தயாரிக்க ஒருவருடம் தேவைப்பட்டுள்ளது மோகனுக்கு. Foloosi தனக்கான Payment GateWay-யை 2019-ல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. Foloosi Payment GateWay அறிமுகமான முதல் மாதத்தில் 10,000 AED (United Arab Emirates dirham) பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. Foloosi Payment GateWay தனது முதல் ஆண்டு முடிவில் 15 மில்லியன் AED பரிவர்த்தனைகளை தாண்டியது.
இதன் பலனாக UAE -ல் தனது வணிகத்தை விரிவுபடுத்த அரை மில்லியன் டாலர்களை ஏஞ்சல் நிதியாக பெற்றார். அதன் பிறகு Foloosi வெளியேறி Ippopay யை உருவாக்க திட்டமிட்டார்.
IppoPay வின் தொடக்கம்:
2020 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் IppoPay நிறுவனத்தை நிறுவினார். தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் சிறு வணிகங்களை மையமாகக் கொண்டு FinTech-க்கை உருவாக்க முடிவுசெய்தார்.
அனைத்து payment aggregator களும் பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தங்களது தளங்களை உருவாக்குவதால், மோகன் கே, தமிழ் போன்ற உள்ளூர் மொழியில் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதை மைய கருத்தாக கொண்டு IppoPay யை வடிவமைத்தார்.
ippoPay நிறுவனத்தை தனது நண்பரான ஜெய்குமாரை இணை நிறுவனர் மற்றும் CTO ஆக நியமித்து, 15 பேர் கொண்ட குழுவை உருவாக்கினார். 2021-ன் ஆரம்பத்தில் IppoPay தனது சேவைகளை வழங்க ஆரம்பித்தது.
QR Code பயன்படுத்தி நடந்த வணிகத்தில் தற்போது வரை 2 லட்சத்திற்கும் அதிகமான வணிகர்கள் IppoPay வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
தமிழகத்தில் 2022 டிசம்பர் கணக்கின்படி IppoPay-ல் 279 Sales Officers உள்ளனர்.
இவருக்கு சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா பெஸ்ட் ஃபின்டெக் ஸடார்ட் அப் ஆஃப் தி இயர் என்ற விருதை வழங்கி கவுரவித்தது.
பல போராட்டங்களுக்கு பிறகு IppoPay இன்று தமிழகத்தில் பல போட்டியாளர்களுக்கு மத்தியில் முன்னணி நிதி சேவையை வழங்கி வருகிறது. மோகன் போன்று நீங்களும் ஒரு நிறுவனத்திற்கு முதலாளி ஆக வேண்டுமா இப்போதே தெளிவான திட்டமிடலை தொடங்குங்கள்…
தடைக்கற்களை படிகல்லாய் மாற்றிய IppoPay மோகனின் வெற்றிக்கதை
இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | success story |