ஃபேஷன் உலகின் புதிய பரிமாணத்தை உருவாக்கிய நிதி யாதவின் வெற்றிக்கதை

Advertisement

 

ஃபேஷன் உலகில் நிதி யாதவ் 

இந்தியாவில் பல இளைஞர்கள் வேலை தேடுபவராக இல்லாமல் வேலை வழங்குபவர்களாக மாறியுள்ளனர். இன்று பல இந்திய தொழில்முனைவோர்  உருவாக்கியுள்ளது. அவர்களின் வெற்றிக்கதைகள் இன்னும் பல இளைஞர்களுக்கு தங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்க உத்வேகத்தை அளிக்கின்றன. பலர் தங்கள் வேலையை விட்டுவிட்டு தங்கள் கல்விப் பின்னணியுடன் தொடர்பில்லாத துறைகளில் தொழில் தொடங்குகின்றனர் அவர்களில் பலர் எட்டமுடியாத உயரத்தையும் அடைந்துள்ளனர். கடந்த சகாப்தத்தில் இந்தியாவில் பல தொழில்முனைவோரை உருவாக்கியுள்ளது, அவர்களில் பலர் முதல் தலைமுறை தொழில்முனைவோர் எளிய பின்னணி மற்றும் சிறிய நகரங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளும் இளம் தொழில் முனைவோரை ஆதரிப்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதில் இந்திய அரசின் ஸ்டார்ட்அப் இந்தியா மிக முக்கியமானதாகும். இந்த திட்டத்தால் பயன் அடைந்தோர் அதிகம். நீங்களும் அவர்களில் ஒருவராக மாற வேண்டுமா, அவர்களின் முயற்சிகள், அவர்கள் கடந்துவந்த தடைகள் எல்லாம் தெரிந்தால் உங்களாலும் ஒரு சொந்த தொழிலைத் தொடங்க முடியும் என்று நினைப்பவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.வாருங்கள் இன்று பேஷன் உலகில் தனக்கு என்று ஒரு முத்திரை பதித்த AKS Clothing நிறுவனத்தை பற்றியும் தான் நிறுவனர் நிதி யாதவ் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

ஃபேஷன் உலகின் புதிய பரிமாணத்தை உருவாக்கிய நிதி யாதவின் வெற்றிக்கதை: 

நிதி யாதவ் ஆரம்ப கால வாழ்க்கை: 

நிதி யாதவ், இந்தூரில் ஒரு வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்தவர். தனது இளங்கலை படிப்பை 2004 இல் இந்தூரில் தனது படிப்பை முடித்துள்ளார். படிப்பை முடித்த பிறகு, UK-வில், டெலாய்ட்டில் என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அந்த  வேலை தனக்கு திருப்த்தியானதாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லாததை உணர்ந்து, தனது வேலையை விட்டுவிட்டு. கல்விப் பின்னணியில் கணினி பொறியாளரான நிதி யாதவ். “டெவில் வியர்ஸ் பிராடா” என்ற திரைப்படத்தைப் பார்த்த நிதியின் ஃபேஷன் மீதான ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொண்டார. ஃபேஷன் உலகில் நுழைய, நிதி யாதவிற்கு சரியான கல்வி தேவைப்பட்டது. அதனால் அவர் புளோரன்ஸ் பொலிமோடா பேஷன் பள்ளியில் ஓராண்டு ஃபேஷன் டிசைனிங் மற்றும் விற்பனை தொடர்பான படிப்பை படித்தார். அவளுக்கு ஃபேஷன் டிசைனிங் துறையில் இத்தாலியில் வேலை கிடைத்ததும். குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று இந்தியாவுக்குத் திரும்பினார்.

வெறும் ரூ.1000 மூலதனத்தில் ஆரம்பித்து இன்று ரூ.30 கோடி சாம்ராஜ்யத்தை பிரேம் கணபதி தோசா பிளாசாவில் ஈட்டியது எப்படி

பேஷன் உலகின் முதல் வேலை:

இந்திய திரும்பிய நிதி, குருகிராமில் உள்ள ஒரு உள்ளூர் பேஷன் பிராண்டில் மூன்று மாதங்கள் பணிபுரிந்த பிறகு, திருமணம் செய்து கொண்ட நிதி, காலை 9 முதல் மாலை 5 வரை பார்க்கும் வேலை தனக்கு பிடித்தமில்லை என்பதை தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதனால் குடுத்பத்தினரின் அவரை வீட்டில் இருந்த படியே அவருக்கு விருப்பமான வேலையை செய்யும்படி ஊக்குவித்துள்ளனர்.  அப்போது நிதியின் கணவர் சத்பால் யாதவ் ஜபோங்கில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரின் துணையை கொண்டு நிதி யாதவ் சர்வதேச பேஷன் பிராண்டான ஜாராவில் ஆறு மாதங்கள் ஆராய்ச்சி செய்து, அதன் விநியோகச் சங்கிலியை இந்தியாவிலும் பிரதிபலிக்க விரும்பினார்.

AKS Clothing ஆரம்பக்கட்டம்:

The success story of fashion desinor Niti Yadav and aks clothing in tamil

2014 ஆம் ஆண்டு மே மாதம் நிதி யாதவ், AKS clothing நிறுவனத்தை, ரூ. 3.5 லட்சம் மூலதனத்துடன் குருகிராமில், தனது இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டில் 18-35 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மலிவு விலையில் உடைகளை வழங்குவதற்கான முதல் முயற்சியை ஆரம்பித்தார்.

இளம் தொழில்அதிபர் ரிதேஷ் அகர்வால் வெற்றிக்கு இதுதான் காரணமா…

ஃபேஷன் உலகில் நிதி யாதவின் வெற்றிக்கதை: 

நிதி யாதவ் தனது AKS தொழிலை ஆரம்பிக்கும் போது அவரது மகள் சுதினி 7 மாத குழந்தையாக இருந்துள்ளார்.

அவரது தொழில் தொடங்கிய ஆரம்பகட்டத்தில் குடும்பத்தையும் தொழிலையும் கவனிப்பதற்காகவும் தொழில் தொடங்கும் இடத்திற்க்கு தனியாக வாடகை தருவது போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய தனது வீட்டிலேயே தனக்கான தயாரிப்புகளை தயாரித்துள்ளார்.

AKS-ன் தனித்தன்மை:

The success story of fashion desinor Niti Yadav and aks clothing in tamil

2014-இல் பெண்களுக்கு எத்னிக் உடைகளின் மீது வரவேற்பு இல்லாததை உணர்ந்து, அந்த தயாரிப்பின் மீது அதிக அக்கறையுடன் வடிவமைத்து அதனது AKS க்கு என்ற புதிய சந்தையை பிடித்தார். ​​அந்த நேரத்தில் வேறு எந்த பிராண்ட் மீதும் கவனம் செலுத்தாமல், எத்னிக் உடைகள் மீது மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டார். ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் இடையே 15 முதல் 29 புதிய வகை தயாரிப்புகளை  அறிமுகப்படுத்தினார். 2014-ல் அவர் உருவாக்கிய உடைகளை imeroad, Jabong மற்றும் Myntra போன்ற நிறுவனங்கள் அவரது வீட்டில் வந்தே உடைகளை பெற்றுக்கொண்டதால் அவரது தொழிலின் விநியோகம் எளிதாக அமைந்தது. நிதி தயாரித்த உடைகள் தங்களின் வீடு முழுவதும் நிரம்பி இருப்பதை உணர்ந்து வீட்டின் கீழ்தளத்தையும் வாடகைக்கு எடுத்துள்ளார்.

AKS Clothing பணியாளர்கள்:

நிதி தனது முதல் பணியாளரை 2015 இல் பணியமர்த்தினார். அதுவரை, அதாவது ஒரு வருடம் தனியாக அனைத்து பணிகளையும் செய்துள்ளார். 2018 இல் நிதியின் கணவர் சத்பால் யாதவ் AKS நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். நிறுவனம் ஆரம்பித்து மூன்றாவது வருடம் 10 பேர் கொண்டு, AKS Clothing என்பதற்கு தனி அலுவலகமாகவும் மாற்றப்பட்டது. 2021கணக்கின்படி AKS-ல் 110 பேர் பணிபுரிகின்றனர்.

இறைச்சிகளை ஆன்லைனில் விற்பதில் முன்னணி நிறுவனமா?

சவாலான பெரும்தொற்று:

The success story of fashion desinor Niti Yadav and aks clothing in tamil

பெரும்தொற்றின் போது மிக சவாலானதாக இருந்த தொழில், பெண்களுக்கு தயாரித்த பல உடைகள் விற்பனையாகாமல் இருந்ததால் அவற்றுக்கு மாற்று வழியாக அதனை குழந்தைகள் பயன்படுத்தும் உடையாக மாற்றி அமைத்தனர்.

தாய் சேய் திட்டத்தின் மூலம் தாய் மற்றும் குழந்தைக்கு ஒரே மாதிரியான உடையை வடிவமைத்து. ஊரடங்கிலும் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளனர்.

AKS Clothing-ன் வழித்தடம்:

 

இன்று, AKS பிராண்ட் Myntra, Jabong, Flipkart போன்ற தளங்களிலும் AKS இன் சொந்த இணையதளத்திலும் கிடைக்கிறது . AKS நிறுவனம் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா முழுவதும் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. நாகாலாந்தில் இரண்டு ஆஃப்லைன் கடைகளையும் கொண்டுள்ளது. AKS Clothing இப்போது ஒவ்வொரு மாதமும் 150 புதிய ஸ்டைல்களை உருவாக்குகிறது. AKS Clothing ஒருமுறை விற்றுத் தீர்ந்த ஆடையை மீண்டும் உருவாக்க மாட்டார்கள்.

நிதி யாதவின் AKS Clothing நிறுவனத்தின் மதிப்பு: 

தொற்றுநோய்களின் போது வளர்ந்த சில நிறுவனங்களில் AKS ஒன்றாகும், மேலும் அதன் வருவாய் இந்த ஆண்டு ரூ.165 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3.5 லட்சத்தில் ஆரம்பித்த இந்த AKS Clothing நிறுவனம் இன்று 100 கோடி வருவாயை ஈட்டும் முன்னணி பேஷன் நிறுவனமாக உள்ளது. நீங்கள் தொழில் தொடங்க இது சரியான நேரமாக இருக்கும் என நினைக்கிறேன். உங்களின் புதுமையான ஐடியாவை கொண்டு நீங்களும் வெற்றியடைய எங்களுடைய வாழ்த்துக்கள். மேலும் எது போன்ற தொழில் முனைவோர்களில் வெற்றிக்கதையை தெரிந்துகொள்ள எங்கள் தளத்தை பின்தொடருங்கள்..

இது போன்ற தொழில்முனைவோரின் வெற்றிக்கதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> success story

 

Advertisement