கரடி பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்கள் சில..

Advertisement

Bear Information in Tamil

விலங்குககளில் ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொருவருக்கும் பிடிக்கும். விலங்குகளில் அழகான ஒரு விலங்கு என்றும் சொல்லலாம். பார்ப்பதற்குஅழகாகஇருக்கும். என்ன விலங்கு என்று யோசிக்கிறீர்களா.! அது வேறொண்ணுமில்லைங்க கரடி தான்.

நம்முடைய பதிவில் விலங்குகளை பற்றி பதிவிட்டு வருகிறோம், அந்த வகையில் கரடியை பற்றி இந்த பதிவில் வாயிலாக அறிந்து கொள்வோம்.

எந்த இனம்:

கரடி  ஒரு ஊனுண்ணிப் பாலூட்டி விலங்கு இவ்வினத்தைச் சேர்ந்தவையாக இருக்கிறது.  பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் (Grizzly bear) என்னும் பழுப்பு நிறக்கரடிகளும் ஊனுண்ணிப் பாலூட்டிகள் யாவற்றினும் மிக பெரியது ஆகும். ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறியவகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன. துருவக் கரடிகள் பெரிய உருவத்தைக் கொண்டவை. இவை, பனி படர்ந்த துருவப் பகுதியில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வெண்மை நிறம் கொண்டவை.

உடல் பாகம்:

information about bear in tamil

கரடிகள் சராசரியாக நான்கு அடி உயரமும் நூற்றுப் பதினைந்து கிலோ எடையும் கொண்டவை. தோலுக்காகவும், மருத்துவ குணம் கொண்டதாகக் கருதப்படும் அவற்றின் கணையத்திற்காகவும் அவை வேட்டையாடப்படுகின்றன. கோடை காலத்தில் கரடிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் கர்ப்ப காலம் ஏழு மாதங்கள் ஆகும்.  ஒரு முறையில் இரண்டு குட்டிகள் பிறக்கும். குட்டிகளுக்கு இரண்டு அல்லது மூன்று வயதாகும் வரை அம்மா கரடிகள் தான் முதுகில் தங்கள் குட்டிகளைச் சுமந்து செல்லுமாம்.

குளிர் மிகுந்த பகுதிகளில் வாழும் கரடிகள் மிகக் கடுமையான குளிர்காலம் முழுவதையும் ஆழ்ந்த உறக்கத்திலேயே (Hibernation ) கழித்து விடுகின்றன. துருவப் பகுதியில் வாழும் கரடிகள் பல மாதங்கள் இப்படி உறங்கும் தனித்துவமான தன்மை கொண்டவை.

கங்காரு பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்.!

வகைகள்:

information about bear in tamil

பனிக்கரடி
கொடுங்கரடி
அமெரிக்கக் கருங்கரடி
வெண்கண்வளையக் கரடி
சுலாத்துக் கரடி
ஆசியக் கருங்கரடி
மலேயக் குறுங்கரடி யாவற்றினும் சிறிய கரடி.

உணவு முறை:

கரடியானது இலைகள் மற்றும் மாமிசம் போன்றவற்றை உண்ண கூடியதாக இருக்கும். பெரும்பாலும் பழங்கள், பழ வித்துக்கள், தண்டுகள், சில குறிப்பிட்ட இலைகள், மரப்பட்டைகள் போன்றவற்றை உண்ணுகின்றன. இந்த விலங்குக்கு எந்த காலத்தில் எந்த உணவுகள் கிடைக்கும் என்பதை அறிந்து வைத்திருக்குமாம்.

சத்தம் எப்படி எழுப்பும்:

கரடிக்கு பயமாக இருக்கும் போது முனகும்,.

அதுவே கரடியின் எதிரிகளை விரட்டும் போது குரைக்கும்.

கோபமாக இருக்கும் போது உறுமுமாம்.

மற்றவர்களை பயமுறுத்துவதற்கு கர்ச்சிக்கும்.

பாண்டா கரடி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்.!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement