LEO படத்தில் வரும் Hyena பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Hyena Details in Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! இப்போ Trending -ல போய்கிட்டு இருக்கின்ற ஒன்று தான் LEO Movie. இந்த LEO படத்தில் நடித்திருக்கும் நடிகர் யார் என்று நம் அனைவருக்குமே தெரியும். அவரை தெரியாதவர்கள் என்று யாராவது இருக்க முடியுமா..? LEO படம் அக்டோபர் 19 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்போது Social Media -வில் அதிகம் Trending இருப்பது LEO Movie தான். ஆனால் அதை விடவும் ஓன்று Trending ஆக போகிறது என்றால் அது தான் Hyena. இந்த Hyena பற்றி உங்களுக்கு தெரியுமா..? வாங்க Hyena பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளாலாம்.

நாய்கள் பற்றிய தகவல்

Hyena பற்றிய சுவாரஸ்யமான தகவல்:

hyena interesting facts in tamil

இந்த Hyena கழுதைப்புலி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த விலங்குக்கு கடுவாய், என்புதின்றி, கொடுவாய், தரக்கு, புலிக்குடத்தி, கழுதைக்குடத்தி, கழுதைக்குறத்தி, வங்கு என்ற வேறுபெயர்களும் இருக்கின்றன.

இந்த கழுதைப்புலிகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆசியக் கண்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் காணப்படுகிறது.

இது புதர் மற்றும் காடுகளை தன் வாழ்விடமாகக் கொண்டது. இது வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் விலங்காகும். பொதுவாக 1 முதல் 5 குட்டிகள் வரை ஈனும்.

வரிக்குதிரைக்கு உடம்பில் ஏன் கோடுகள் இருக்குனு தெரியுமா

உடல் அமைப்பு:

hyena interesting facts in tamil

இந்த கழுதைப்புலி்யின் உடல் மேற்பகுதி சாம்பல் நிறத்தில் தோற்றமளிக்கிறது. இதன் உடல் முழுவதும் கறுப்பு நிறத்திலான 5 முதல் 9 வரை அடர்த்தியான வரிகள் காணப்படுகின்றன. இந்த விலங்குடைய முகத்தின் முன்பகுதி, பிடரி மயிர்கள், தோள்பட்டை மற்றும் காதுகள் கறுப்பு நிறத்தில் காணப்படுகிறது.

இதன் கழுத்திற்கு கீழ் பகுதியில் கறுப்பு நிறத்திலான தொண்டை தோல்திட்டு ஒன்று காணப்படும். இதன் கால்கள் மிகவும் நீளமானதாக இருக்கிறது.

நம் இந்திய நாட்டில் காணப்படும் கழுதைப்புலிகள் 1.2 முதல் 1.45 மீட்டர் உயரமும், 26 முதல் 41 கிலோ எடையும் கொண்டவை. மேலும் ஆண் மற்றும் பெண் கழுதைப்புலிகளின் உடல் அமைப்பில் எந்த வேறுபாடுகளும் கிடையாது.

இந்த விலங்கு சினத்தில் இருந்தாலோ அல்லது மற்ற விலங்கை பயமுறுத்தவோ தன் உடலில் இருக்கும் முடிகளை செங்குத்தாக நிமிர்த்தும் அதாவது சிலிர்த்து போவதுபோல செய்யும்.

இப்படி செய்யும்போதும் இதன் உருவம் எப்பொழுதும் இருக்கும் அளவை விட 30 முதல் 40 விழுக்காடு வரை பெரிதாக காணப்படும்.

கருப்பு எறும்பு ஏன் மனிதர்களை கடிப்பதில்லை என்று உங்களுக்கு தெரியுமா

உணவு முறை:

hyena interesting facts in tamil

இந்த கழுதைப்புலி விலங்கானது வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவையாக இருக்கிறது. இருந்தாலும், இவை பெரும்பாலும் பிற விலங்குகள் கொன்று விட்டுச்செல்லும் எச்சங்களை உண்கிறது. மேலும் சிறு விலங்குகள், பழங்கள் மற்றும் பூச்சிகளையும் தின்னும்.

இதன் குட்டிகள் பிறந்த 30 நாட்களுக்குப் பிறகு மாமிச உணவை உட்கொள்ள ஆரம்பிக்கும். இவை கூட்டமாக வேட்டையாடும் விலங்குகளாகும். மேலும் இவை புள்ளி மான், முயல் மற்றும் கால்நடைகளை உண்பதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இதுபோன்று விலங்குகள் பற்றிய  தகவல்கள் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் 👉 Animals in Tamil
Advertisement