Leo Hyena
விஜய்யின் லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அதுதொடர்பான பல முக்கிய அம்சங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, லியோ வரும் மிருகமான ஹைனா (Hyena) எனப்படும் கழுதைப் புலி யும் பயங்கர ஃபேமஸ் ஆகியுள்ளது. இந்த ஹைனா பற்றிய சுவாரஷ்யமான தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். சரி வாங்க பதிவை தொடர்ந்து வாசிக்கலாம்.
லியோ படத்தில் வரும் Hyena பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள்:
லியோ படத்தில் வரும் Hyena கழுதைப்புலி என்று அழைக்கப்படுகிறது. இந்த விலங்கிற்கு கடுவாய், என்புதின்றி, கொடுவாய், தரக்கு, புலிக்குடத்தி, கழுதைக்குடத்தி, கழுதைக்குறத்தி, வங்கு என்று வேறுபெயர்களும் உண்டு.
இந்த கழுதைப்புலிகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆசியக் கண்டத்தில் பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவில் காணப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
விலங்குகளின் ஆண்பால், பெண்பால் பெயர்களும் இளமை பெயர்களும்….
வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் விலங்காகும். பொதுவாக, ஒன்று முதல் ஐந்து குட்டிகள் ஈனும், புதர் மற்றும் காடுகளை தனது வாழ்விடமாக கொண்டிருக்கும்.
கழுதைப்புலியின் உடல், மேற்பகுதி சாம்பல் நிறத்தில் தோற்றமளிக்கின்றது. இதன் உடம்பில் ஐந்து முதல் ஒன்பது வரை அடர்த்தியான வரிகள் காணப்படுகின்றன.
இந்த மிருகத்தின் முகத்தின் முன் பகுதியில் பிடரி முடிகள் இருக்கும். மேலும் இதனுடைய தோள்பட்டை மற்றும் காதுகள் கருப்பு நிறத்தில் இருக்கும்.
கழுத்திற்கு கீழ் பகுதியில் கருப்பு நிறத்திலான தொண்டை தோல்திட்டு ஒன்று காணப்படுகிறது. இதனுடைய கால்கள் மிகவும் நிலமானது ஆகும்.
இந்தியநாட்டில் காணப்படும் கழுதைப்புலிகள் 1.2 முதல் 1.45 மீட்டர் உயரமும். 26 முதல் 41 கிலோ எடையும், கொண்டவை. ஆண் மற்றும் பெண் கழுதைப்புலியின் உடலில் எந்த வேறுபாடுகளும் இருக்காது.
கழுதைப்புலி விலங்கானது வேட்டையாடி உண்ணும் திறமை கொண்டவையாக இருக்கிறது. இருந்தாலும் இவை பெரும்பாலும் பிற விலங்குகள் கொன்றுவிட்டு செல்லும் எச்சங்களை உண்கின்றது. மேலும் சிறு வில்லன்கள் பழங்கள் மற்றும் பூச்சிகளையும் தின்னும்.
குட்டிகள் பிறந்த 30 நாட்களுக்கு பிறகு மாமிசம் தின்ன ஆரம்பிக்கும். இவை கூட்டாகவே வேட்டையாடும் விலங்குகள் ஆகும். இவை புள்ளிமான், முயல் மற்றும் கால்நடைகளை உண்கின்றன.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெள்ளை முகம் கொண்ட கபுச்சின் குரங்கு பற்றிய தகவல்
மேலும் விலங்குகள் பற்றிய சுவாரசியமான விஷயங்களை தெரிந்துகொள்ள வந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | விலங்குகள் பற்றிய தகவல்கள் |