Axis Bank Personal Loan 1 Lakh Interest Rate
ஆக்சிஸ் பேங்க் என்பது ஒரு தனியார்துறை வங்கி ஆகும். இவ்வங்கி மும்பை, மகாராட்டிரத்தை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இவ்வங்கியில் தனிநபர் கடன், வீட்டு கடன், தொழில் கடன், நகைக்கடன் மற்றும் கல்வி கடன் உள்ளிட்ட பல கடன்களையும், RD, FD உள்ளிட்ட பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. எனவே, அந்த வகையில் ஆக்சிஸ் பேங்க்கில் வழங்கக்கூடிய கடன்களில் ஒன்றான பர்சனல் லோன் பற்றிய சில விவரங்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம் வாங்க.
பேங்க் பர்சனல் லோன், பல்வேறு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்படும் பாதுகாப்பற்ற லோனாகும். நமக்கு ஏதேனும் அதிகமான தொகை தேவைப்பட்டால் நம் சம்பள தகுதியினை பொறுத்து வங்கிகளில் கடன் வாங்கி கொள்ளும் முறையாகும். சரி விஷயத்துக்கு வருவோம்.. நீங்கள் ஒரு ஆக்சிஸ் பேங்க் வாடிக்கையாளராக இருந்தது வங்கியில் 1 லட்சம் பர்சனல் லோன் பெறுகிறீர்கள் என்றால் அதற்கான வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு வட்டி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஆக்சிஸ் பேங்க் பர்சனல் லோன்:
வட்டி விகிதம்:
ஆக்சிஸ் பேங்க்கில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமாக 10.25% அளிக்கப்படுகிறது.
கால அளவு:
ஆக்சிஸ் பேங்க்கில் தனிநபர் கடனுக்கான கால அளவாக அதிகபட்சம் 60 மாதம் அதாவது 5 வருடம் வரை அளிக்கப்படுகிறது.
கடன் தொகை:
ஆக்சிஸ் பேங்க்கில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் முதல் அதிகபட்சம் 15 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கப்படுகிறது.
ஆக்சிஸ் வங்கியில் 2 லட்சம் நகை கடன் வாங்கினால் வட்டி எவவ்ளவு
எடுத்துக்காட்டு:
உதரணமாக, நீங்கள் ஆக்சிஸ் பேங்க்கில் 5 வருட கால அளவை தேர்வு செய்து 1 லட்சம் தனிநபர் கடன் பெறுகிறீர்கள் என்றால் அதற்கான வட்டி விகிதமாக 10.25% அளிக்கப்படுகிறது.
ஆகவே, இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும்போது நீங்கள் மாத EMI ஆக 2,137 ரூபாய் செலுத்தி வர வேண்டும்.
இந்த 5 வருடத்தில் உங்களுக்கான மொத்த வட்டி தொகை 28,222 ரூபாய் ஆகும்.
ஆகவே, நீங்கள் வாங்கிய 1 லட்சம் மற்றும் அதற்கான வட்டித்தொகை ஆகியவற்றை சேர்த்து மொத்தமாக 1,28,222 ரூபாய் செலுத்த வேண்டும்.
குறிப்பு: நீங்கள் வாங்கிய கடன் தொகையை பொறுத்து வட்டி தொகை மற்றும் EMI தொகை மாறுபடும்.
Axis பேங்க் 2 லட்ச வீட்டு கடனுக்கு 4,123 ரூபாய் EMI என்றால் மொத்த வட்டி எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |