How to Get More Interest on PPF Account
அனைவருக்குமே நாம் சேமிக்கும் தொகைக்கு அதிக வட்டி கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக, போஸ்ட் ஆபீஸ் மற்றும் பேங்கில் உள்ள சேமிப்பு திட்டங்களில் எந்த சேமிப்பு திட்டம் அதிக வட்டியை அளிக்கும் என தேடி அதில் முதலீடு செய்வோம். அந்த வகையில், நாம் சேமிக்கும் தொகைக்கு அதிக வட்டியை பெறக்கூடிய PPF அகௌண்ட் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. அதாவது, நீண்டகால மற்றும் பாதுகாப்பான சேமிப்பு திட்டமான PPF திட்டத்தில் எப்படி சேமித்தால் அதிக வட்டியை பெறலாம் என்பதை இப்பதிவின் வாயிலாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொது வருங்கால வைப்பு நிதி அல்லது PPF (Public Provident Fund) என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டமாகும். மேலும், PPF -ல் வரிச் சலுகைகளும் வழங்கப்படுகிறது. முக்கியமாக இத்திட்டத்தில் நாம் முதலீடு தொகைக்கு அதிகமான வட்டியை பெற முடியும். அதனை பற்றி இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Invest in PPF to Get Maximum Interest in Tamil:
PPF திட்டத்தின் முக்கிய சிறப்பு என்னவென்றால் அதில் கூட்டு வட்டி அளிக்கப்படுகிறது என்பதே ஆகும். இத்திட்டத்தில் நாம் சேமிக்கும் தொகைக்கு 7.1% வட்டி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் கணக்கிற்கு வட்டி செலுத்தப்படும். மேலும், வருமான வரிச் சட்டத்தின் 80c பிரிவின் கீழ் வரி சலுகையும் வழங்கபடுகிறது. உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கிகளில் PPF அக்கவுண்டை ஓபன் செய்யலாம்.
இத்திட்டத்தில் ஒரு நிதியாண்டில், குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்திற்கான கால அளவாக 15 வருடம் வழங்கபடுகிறது. 15 வருடத்திற்கு பிறகு நீங்கள் டெபாசிட் தொகை மற்றும் அதற்கான வட்டி விகிதம் மற்றும் வரி சலுகை சேர்த்து கூடுதல் தொகையை பெறலாம்.
PPF vs SIP இரண்டில் எந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் தெரியுமா..?
Monthly Depsoit:
PPF திட்டத்தின் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையை மாதத்தின் 5 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதாவது, 01 ஆம் தேதி முதல் 05 ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். ஏனென்றால் 01 ஆம் தேதி முதல் 05 ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்யும் தொகைக்கான வட்டி விகிதத்தை அந்த மாதமே வழங்குவார்கள். அதுவே, நீங்கள் 05 ஆம் தேதியிற்கு பிறகு டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் அதற்கான வட்டி விகிதத்தை அடுத்த மாதத்தில் தான் வழங்குவார்கள்.
உதாரணமாக, உங்கள் PPF அக்கவுண்டில் 1,10,000 ரூபாய் இருக்கிறது என்றால், மாதத்தின் முதல் 05 ஆம் தேதிக்குள் 50000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் 1,15,000 ரூபாய்க்கான வட்டி விகிதம் கணக்கிடப்படும். அதுவே நீங்கள் 05 ஆம் தேதியிற்கு பிறகு, அதாவது, 7 ஆம் தேதியோ 10 ஆம் தேதியோ 5000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் ஏற்கனவே உங்கள் அக்கௌண்டில் உள்ள 1,10,000 ரூபாய்க்கான வட்டி விகிதத்தை மட்டுமே கணக்கிடுவார்கள். அதாவது, PPF திட்டத்தில் Compound Interest மூலம் கணக்கிடப்படுகிறது. ஆகையால் நீங்கள் PPF திட்டத்தில் மாதத்தின் 05 ஆம் தேதிக்குள்டெபாசிட் செய்வதன் மூலம் அதிக வட்டியை பெற முடியும்.
Flexible Deposit Amount:
Flexible Deposit Amount என்பது நீங்கள் எவ்வளவு பணம் டெபாசிட் செய்ய விரும்புகிறீர்களோ அதனை டெபாசிட் செய்யலாம். அதாவது, ஒரு மாதம் உங்களிடம் 500 இருக்கிறது அதனை டெபாசிட் செய்கிறீர்கள், அடுத்த மாதம் உங்களிடம் 10000 ரூபாய் இருந்தால் அதனையும் டெபாசிட் செய்யலாம். அதற்கு அடுத்த மாதம் உங்களிடம் பணம் இல்லையென்றால் டெபாசிட் செய்யாமலும் இருக்கலாம்.
மேலும், முக்கியமாக இத்திட்டத்தில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் போன்ற முதல் காலங்களில் உங்களால் முடிந்த அளவிற்கு அதிக தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் முதிர்வு காலத்தில் அதிக தொகையை பெற முடியும்.
Lumsum Amount:
PPF திட்டத்தின் 100 சதவீதம் லாபத்தை பெற வேண்டுமென்றால் ஒரு நிதியாண்டின் அதிகபட்ச டெபாசிட் தொகையான 1.50 ஆயிரம் ரூபாயினை நீங்கள் நிதியாண்டின் முதல் மாதம் அதாவது, ஏப்ரல் மாதத்தில் 05 ஆம் தேதிக்குள் ஒவ்வொரு வருடமும் டெபாசிட் செய்து வந்தால் அதிகமான லாபத்தை பெறலாம்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |