IDBI Bank Personal Loan
நம்மில் அனைவருக்கும் கடன் பிரச்சனை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை சரி செய்ய தான் நம் அனைவருக்கும் வங்கி உள்ளது. அது என்ன வங்கி என்று யோசிப்பீர்கள். அது ஒன்றும் இல்லை வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் குறைவான வட்டி தான். ஆனால் இது யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள வங்கிக்கு செல்லவில்லை, வங்கி என்றால் அனைவருக்கும் ஒரு பயம் தான். அப்படி என்ன பயம் என்று தானே கேட்கிறீர்கள்.
அங்கு சென்றால் கூட்டமாக இருக்கும், அங்கு சென்று தவறாக மாற்றி கேட்டால் அவர்களுக்கு அது புரியாமல் வேறு எதாவது சொல்வார்கள். மறுமுறை கேட்டால் அப்போது கூட்டம் நிறைந்துவிடும். நம்மால் சரியான விவரங்களை வங்கியில் கேட்ட முடியாது. ஆனால் இப்போது அனைத்து இணையம் என்று மாறி விட்டது. உங்களுக்கு தோன்றும் சந்தேகங்களை உங்கள் ஸ்மார்ட் போனில் தேடினால் நொடியில் விவரங்கள் தந்துவிடும். அந்த வகையில் இன்று IDBI வங்கியில் எப்படி தனிநபர் கடன் பெறுவது அதற்கான வழிமுறைகள் என்ன ? நாம் வாங்கும் கடனுக்கு வட்டி என்ன EMI என்ன என்பதனை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
IDBI Bank Personal Loan :
IDBI வங்கியில் தனிநபர் கடன் 5 பிரிவின் கீழ் வழங்க படுகிறது. இன்று நாம் சம்பளம் பெறுவோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் IDBI வங்கியில் தனிநபர் கடன் வாங்க உள்ள நிபந்தனைகள், கடன் தொகை, EMI மற்றும் வட்டி போன்றவற்றை தெளிவாக பார்க்கலாம்.
IDBI Bank Personal Loan Eligibility in Tamil:
தகுதி:
IDBI வங்கியில் நிரந்தர மாதாந்திர சம்பளம் பெரும் வாடிக்கையாளர்கள் மற்றும் மாநில, மத்திய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் ஓய்வூதியர்கள் தகுதி பெற்றவர்கள்.
மாத சம்பளம் அல்லது ஓய்வூதியம் ரூபாய் 18,000 பெறும் நபராக இருக்க வேண்டும்.
மாத சம்பளம் பெறுவோர் குறைந்த பட்சம் 21 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஓய்வூதியம் பெறுவோர் கடன் முடியும் காலத்தில் 75 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கடன் காலம்:
IDBI வங்கியில் நீங்கள் வாங்கும் தனிநபர் கடனை அடைக்க குறைந்தபட்சம் 12 மாதங்கள் மற்றும் அதிகபட்சம் 60 மாதங்கள் அதாவது 5 வருடங்கள் ஆகும்.
தொகை அளவு:
IDBI வங்கி இப்போது தனிநபர் கடனாக அவர்களின் மதிப்பை பொறுத்து 25 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 5 லட்சம் வரை மாத சம்பளம் கொண்ட வாடிக்கையாளருக்கும் வழங்க படுகிறது.
செயலாக்க கட்டணம்
IDBI வங்கி தனிநபர் கடனில் 1% மற்றும் ரூபாய் 2,500 செயலாக்க கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வட்டி விகிதம்:
IDBI வங்கி தனிநபர் கடனுக்கான வட்டி விகிதமாக ஆண்டிற்கு 9.50% முதல் 14.00% வரை தோராயமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் உங்களது கடன் தொகை மற்றும் வங்கியின் விதிகள் படி வட்டி விகிதம் அமையும்.
குறிப்பு: EMI தொகை, வட்டி தொகை, வட்டி விகிதம் அனைத்தும் உங்களது கடன் தொகையினை பொறுத்தே மாறுபடும்.
ICICI வங்கியில் தனிநபர் கடனை வாங்க போறீங்களா அப்போ இத கண்டிப்பா தெரிந்து கொள்ளுங்கள்…
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |