IDFC Bank Business Loan
இந்த உலகில் மனிதனால் பணம் என்று உருவாக்கப்பட்டதோ அன்றிலிருந்து பணம் தான் அனைத்து என்றாகிவிட்டது. அதனால் அனைவருமே தங்களிடம் இந்த பணத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தினமும் ஓடி ஓடி உழைக்கிறார்கள். அப்படி நாம் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தவிட நமக்கு அதிகம் பணம் தேவைப்பட்டால் முன்பெல்லாம் யாரிடமாவது சென்று கடன் பெற்று கொள்வோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகளிலேயே கடன் பெற்று கொள்கின்றார்கள். அப்படி நீங்கள் ஒரு வங்கியில் கடன் பெறுவதற்கு முன்னால் அந்த வங்கியில் நாம் பெறப்போகும் கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் EMI தொகை என்பதை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் IDFC வங்கியில் 3 லட்சம் தொழில் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு என்பதனை பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
IDFC Bank Business Loan Details in Tamil:
தகுதி:
IDFC வங்கியில் தொழில் கடன் பெற விண்ணப்பிக்கும் நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தார் குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 68 வயது கொண்டவராக இருக்க வேண்டும்.
தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர் அவர் கோரும் தொழில்மீது 12lakh வருவாய் கொண்டதாக இருக்க வேண்டும்.
வட்டிவிகிதம்:
IDFC வங்கியில் நீங்கள் பெரும் தொழில் கடனுக்கு தோராயமாக 10.50 % வரை வட்டி வசூலிக்கப்படுகிறது.
கடன் தொகை:
IDFC வங்கியில் குறைந்தபட்சம் 1 லட்சம் முதல் அதிகபட்சம் 1 கோடி வரை வாடிக்கையாளரின் தகுதியை பொறுத்து தொழில் கடன் வழங்க படுகிறது.
கடன் காலம்:
நீங்கள் பெற்ற கடனை குறைந்தது 1 வருடம் முதல் 20 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வாடிக்கையாளரின் தகுதியை பொறுத்துவழங்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக:
கடன் தொகை: 3,00,000 ரூபாய்
வட்டி விகிதம்: 10.50 %
கடனுக்கான ஆண்டு: 7 வருடம்
EMI தொகை: 5,058ரூபாய்
மொத்த வட்டி: 1,24,888 ரூபாய்
அசல் தொகை: 4,24,888 ரூபாய்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |