Sbi Gold Loan Interest Rate 2023 in Tamil
நண்பர்களே பொதுவாக நாம் எப்போதும் தங்க நகைகள் மீது மிகவும் ஆர்வமாக இருப்போம். ஏனென்றால் நகை என்றால் மிகவும் அழகு. அதுவும் தங்க நகை என்றால் சொல்லவாவேண்டும். எப்படி இருந்தாலும் ஒரு வருடத்திற்கு ஒரு கிராம் நகையாவது வாங்கியிருப்போம். ஏன் பணம் இருந்தால் தங்க நகைகள், மனை மீது காசு போடுகிறார்கள் என்றால் அதில் தான் நாளுக்கு நாள் மிகவும் மதிப்பு ஏறிக்கொண்டே போகும்.
தங்க நகை வாங்குவதற்கு இரண்டு காரணம் உள்ளது. அதில் ஒன்று மேல் சொன்னது, இரண்டாவது என்னவென்றால் நம்முடைய அவசர தேவைக்கு முதலாவதாக உதவுவது தங்க நகைகள் தான். அதனை அடகு வைத்து அதன் மூலம் பயன்பெறுகிறோம். அதனை விட முக்கியமானது என்னவென்றால் நாம் தங்க நகைகளை அடகு வைக்கும் இடம் எப்போதும் ஒன்று தான் அடகு கடை. இதில் அடகு வைத்தால் எவ்வளவு வட்டி தெரியுமா..? அதே நாம் வங்கியில் அடகு வைத்தால் வட்டி மிகவும் குறைவு அதனை பற்றி தெரியுமா..? தெரியவில்லை என்றால் தற்போது அதனை பற்றி தெரிந்துகொள்ளலாம்..! இந்த பதிவின் வாயிலாக SBI வங்கியில் தங்க நகைகளுக்கு எவ்வளவு வட்டி விகிதம் என்று பார்க்கலாம் வாங்க..!
Sbi Gold Loan Interest Rate 2023 in Tamil:
வட்டி விகிதம் | 8.80% |
தொகை | Rs.20,000 – Rs.50,00,000 |
வயது | 18 வயது முதல் – 70 வயது வரை |
முதிர்வு காலம் | 36 மாதங்கள் |
செயலாக்கட்டணம் | 0.50% + ஜிஎஸ்டி |
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 SBI வங்கியில் 1.5 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் எவ்வளவு EMI கட்டவேண்டும்
தங்க நகை கடன் சிறப்பு அம்சங்கள்:
தங்க நகையில் கடன் வாங்குபவர்கள் குறைத்தபட்சமாக 20,000 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 5 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
கடனை திருப்ப செலுத்துவதற்கு குறைத்தபட்சம் 12 மணி நேரம் முதல் 36 மாதங்கள் வரை திருப்பி செலுத்தும் காலம் வழங்கப்படுகிறது.
கடனாளியால் முன்கூட்டியே செலுத்தப்படும் கடன்களுக்கு எஸ்பிஐ முன்கூட்டியே செலுத்தும் கட்டணத்தை விதிக்காது.
தங்கத்தை அடகு வைக்கும் போது எந்த அளவில் தங்கம் இருந்ததோ அந்த அளவிற்கு பத்திரமாக திருப்பி கொடுக்கப்படும். வங்கியில் அடகு வைக்க மிகவும் குறைவான ஆவணங்கள் தேவைப்படும்.
2023 SBI வங்கியில் 2.5 லட்சம் வங்கி கடன் பெற்றால் எவ்வளவு EMI மற்றும் வட்டி கட்டவேண்டும்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |