குறைந்த முதலீட்டில் லாபம் தரும் தொழில்
வீட்டில் இருந்தபடியே தொழில் தூங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான தொழில் வாய்ப்பு. எப்போதும் விளம்பரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வரவேற்புக்கு முக்கியமானது புதுமை. நாம் விளம்பரம் செய்யும் அனைத்துமே புதுமையை மையப்படுத்தி மட்டுமே நிகழ்கிறது. அதாவது பொதுவாக உற்பத்தி துறைகளில் தங்களுடைய பொருட்களை விளம்பரம் படுத்தும் வகையில் அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களில் மீது மக்களை கவரும் விதமாக லேபிள் அல்லது ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்வார்கள், அதுமட்டும் அல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏதேனும் ஒரு விதத்தில் ஸ்டிக்கர்ஸ் மற்றும் லேபிள் தேவைப்படும். பள்ளி மாணவர்கள் அவர்களுடைய நோட் மற்றும் புத்தகங்களுக்கு ஸ்டிக்கர்ஸ் மற்றும் லேபிள் போன்றவற்றை பயன்படுத்துவார்கள். மற்றவர்கள் தங்களின் வண்டிக்கு விதவிதமான ஸ்டிக்கர்ஸ் பயன்படுத்துவார்கள். இப்படி எப்போதுமே நல்ல வருவாய் தரக்கூடிய தொழிலாக இருக்கும்.
எனவே மக்களிடம் அதிகம் வரவேற்கப்படும் இந்த லேபிள் பிரிண்டிங் தொழிலை ஆண், பெண் இருபாலரும் இந்த தொழிலை வீட்டில் இருந்தபடியே செய்தாலே பல ஆயிரம் லாபம் பெற முடியும்.
சரி வாங்க இந்த லேபிள் பிரிண்டிங் தொழிலை எப்படி துவங்கலாம், இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், இந்த தொழில் துவங்க என்னென்ன மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரம் தேவைப்படும், இந்த தொழில் மூலம் எவ்வளவு லாபம் பெற முடியும் போன்ற விவரங்களை இங்கு காண்போம்.
Sticker Printing Business Plan:-
இடவசதி:-
வீட்டில் தனியாக ஒரு சிறிய அரை இருந்தாலே போதுமானது, அனைவருமே இந்த தொழிலை துவங்கிவிடலாம், தங்களுடைய ஓய்வு நேரங்களில் லேபிள் தயார் செய்து விற்பனை செய்யலாம்.
அல்லது நகரத்திற்கு நடுவே மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் இதனை நீங்கள் தொடங்கினாள் அதிக வருவாய் பெறலாம்.
மூலப்பொருட்கள்:-
இந்த தொழில் துவங்க கட்டாயம் ஒரு கம்யூட்டர், பிரிண்டர் வைத்திருக்க வேண்டும், மிகவும் முக்கியமானது நீங்கள் பிரிண்ட் எடுக்க பயன்படுத்தும் Plain roll label stickers இவற்றின் விலை இப்போது 80 ரூபாய் முதல் தொடங்குகிறது. நீங்கள் stickers printed எடுக்க பயன்படுத்தும் பிரிண்டர் 6,000 முதல் 30,000 வரை சந்தையில் கிடைக்கிறது.
முதலீடு
உங்களிடம் கடை தொடங்குவதற்கான இடம் இருந்தால், குறைந்த முதலீட்டில் இந்த லேபிள் பிரிண்டிங் தொழிலை துவங்க வேண்டும் என்றால், குறைந்த பட்சம் 35 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.
இந்த தொழில் மிகவும் எளிமையானது உங்களுக்கு கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் பயன்படுத்த தெரிந்திருந்தால் போதுமானது.
சந்தை வாய்ப்பு:-
இந்த தொழிலை பொறுத்தவரை உங்களுக்கு நுணுக்கமான வடிவத்தை உருவாக்க தெரிந்திருந்தால் போதுமானது.
நீங்கள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப strickers உருவாக்கினால் உங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பெண்களே உங்களுக்கான தொழில் இது, மாத வருமானம் 20,000 வரை பெறக்கூடிய Eco Friendly Business….
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |