ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மாத வருமானம் அருமையான தொழில்..!

Advertisement

Profitable Business Ideas in Tamil

புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் வணக்கம்.. குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த தொழில் சிறந்த தேர்வாக இருக்கும். நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்கத் தயாராக இருந்தால், நாங்கள் உங்களுக்கு ஒரு வணிக யோசனையை வழங்குகிறோம்.

இந்த தொழில் தினமும் குறைந்தபட்சம் ரூ.4000/- எளிதாக சம்பாதிக்கலாம். இந்த தொழிலில் தனிப் பயிற்சி எடுக்கத் தேவையில்லை என்பது இதன் மிகப்பெரிய சிறப்பு அம்சம். இந்த வணிகம் கார்ன் ஃப்ளேக்ஸ் (Corn Flakes) பிசினஸ். அதாவது சோளம் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது.

இன்றய கால கட்டத்தில் சோளத்தில் செய்யக்கூடிய இந்த கார்ன் ஃபிளேக்குகளுக்கு (Corn Flakes) நல்ல மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. ஆரோக்கியத்திற்கு மிகவும் சத்தானது என்பதாலும் தயார் செய்ய அதிக சிரமம் இல்லை என்பதாலும் பலரது வீடுகளில் காலை உணவாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த தொழிலை தொடங்க உங்களுக்கு யூனிட் ஒன்றை அமைக்கக்கூடிய நிலம் இருக்க வேண்டும். இது தவிர தயாரிக்கப்பட்ட கார்ன் பிளேக்ஸை (Corn Flakes) சேமிப்பிற்கு இடமும் தேவை. உங்களுக்கு ஒரு கிடங்கும் தேவைப்படும். இவையெல்லாம் சேர்த்து உங்களிடம் மொத்தம் 2000 முதல் 3000 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வருமானத்தை அள்ளிக்கொடுக்கும் E-Commerce பிசினெஸ் செய்வது எப்படி..?

இந்த தொழிலை ஆரம்பிக்க உங்களிடம் தேவைப்படும் பொருட்கள்:

Corn Flakes Business in Tamil

  • கார்ன் ஃப்ளேக்ஸ் (Corn Flakes) தொழிலுக்குத் தேவையான உபகரணங்களைப் பற்றி பேசினால், உங்களுக்கு இயந்திரங்கள், மின்சார வசதி, ஜிஎஸ்டி எண்ம் மூலப் பொருட்கள், இரும்பு வகை இடம் மற்றும் கிடங்கு ஆகியவை தேவைபடும்.
  • இந்த தொழிலுக்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் கார்ன் ஃப்ளேக்ஸ் (Corn Flakes) தயாரிப்பதற்கு மட்டுமல்ல, கோதுமை மற்றும் அரிசி பிளேக்ஸ் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
  • மக்காச்சோளத்தின் உற்பத்தி அதிகமாக உள்ள பகுதியில் உங்கள் தொழிலை அமைக்க வேண்டும். வெகுதூரத்தில் இருந்து மக்காச்சோளத்தை கொண்டு வந்து அதில் கார்ன் பிளேக்ஸ் (Corn Flakes) தயாரித்தால் செலவும் அதிகமாக இருக்கும். முடிந்தால், நிலம் இருந்தால் நாமே சோளத்தை பயிரிட்டு தயாரிக்கவும் செய்யலாம்.

முதலீடு:

  • தொழிலுக்கு தேவையான பண முதலீடு என்பது நீங்கள் பெரிய அளவில் ஒரு தொழிலைத் தொடங்க, விரும்புகிறீர்களா அல்லது சிறிய அளவில் தொடங்க விரும்புகிறீர்களா என்பதைப் பொறுத்தது. குறைந்த பட்சம் இந்த தொழிலுக்கு ரூ,1 முதல் ரூ. 2 லட்சம் வரை முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மத்திய அரசு வழங்கும் முத்ரா கடன் வசதி முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் தொழில் தொடங்குபவர்களுக்கு 90 சதவீதம் வரை கடன் வசதியை அரசு வழங்குகிறது. ரூ.2 லட்சத்தில் தொழில் தொடங்கினால், தொடக்கத்தில் ரூ.20,000/- மட்டுமே உங்கள் கையில் இருந்தால் போதும். மீதமுள்ள பணத்தை மத்திய அரசிடமிருந்து கடனாகப் பெறலாம்.

லாபம்:

  • ஒரு கிலோ கார்ன் ஃபிளேக்ஸ் (Corn Flakes) செய்ய 30 ரூபாய் செலவாகும். சந்தையில் எளிதாக கிலோ ரூ.70-க்கு விற்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 கிலோ கார்ன் ஃபிளேக்ஸ் (Corn Flakes) விற்றால் உங்களுக்கு 4000 ரூபாய் லாபம் கிடைக்கும். அதே நேரத்தில், நீங்கள் மாதம் புள்ளிவிவரங்களைக் கணக்கிட்டால், உங்கள் வருமானம் ரூ.1,20,000/- வரைக்கு கிடைக்கும்.
  • உங்களுக்கு இந்த தொழில் ஏற்றதாக இருந்தால் இந்த தொழிலை இப்போதே தொடக்கி வாழ்வில் முன்னேறுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு முறை முதலீடு செய்தால் போதும் வேலையே செய்யாமல் கைநிறைய சம்பாதிக்கலாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement