Tata Car New Model 2023
இன்றைய காலத்தில் கார் இல்லாத வீடே இல்லை என்று சொல்வது போல இருக்கிறது. அதிலும் Honda, Audi, Nission, Toyota மற்றும் Tata என நிறைய கார் நிறுவனங்கள் இருக்கிறது. நாம் எப்போதும் கார் வாங்கினாலும் நமக்கு பிடித்த மாதிரியான Model மற்றும் Color என என்று பார்த்து பார்த்து தான் வாங்குகின்றோம். இந்த வருடம் நீங்கள் புது கார் வாங்க வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் Tata கார் நிறுவனம் தற்போது புதியதாக கார் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது. சரி வாருங்கள் அந்த கார் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொண்டு நீங்களும் அந்த புதிய காரை வாங்கலாம்.
Tata Nano Electric New Car Tamil:
Tata கார் நிறுவனம் நிறைய வகையான கார்களை இது வரையிலும் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் இந்த வருடம் Tata நிறுவனம் Electric Car– ஐ அறிமுகம் செய்ய இருக்கிறது.
Tata நிறுவனம் ஏற்கனவே Electric Car-னை அறிமுகம் செய்து உள்ளது. அப்படி இருந்தாலும் இந்த வருடம் Nano காரை பெட்ரோல் காரக இல்லாமல் Electric காராக இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
Nano Car மட்டும் இல்லாமல் Tiago Car என்ற காரையும் Electric காராக Tata அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு கார்களில் Tiago Car தான் முதலில் அறிமுகம் ஆகும் என்று சொல்லப்படுகிறது.
அதற்கு அடுத்து Nano Car அறிமுகம் ஆகும். இந்த புதிய Nano Car 200-லிருந்து 255 கிலோ மீட்டர் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.
இந்த வருடம் கார் வாங்க வேண்டும் நினைப்பவர்களுக்கு இந்த Electric Car ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கம். இந்த வருடம் கண்டிப்பாக அறிமுகம் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள்⇒ உலகில் மிகவும் விலை உயர்ந்த கார் பட்டியல்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |