டாடா நிறுவனத்தின் மிக குறைந்த விலையில் எலக்ட்ரிக் கார் அறிமுகம்..! விலை எவ்வளவு தெரியுமா?

Tata Tiago EV Review in Tamil

Tata Tiago EV Review in Tamil

இந்தியாவில் டாடா நிறுவனம் தற்பொழுது மிகவும் குறைந்த விலை எலக்ட்ரிக் காரான டாடா டியாகோ EV காரை வெளியிட்டுள்ளது. இந்த கார் இந்தியாவின் மிகவும் குறைந்த விலை எலக்ட்ரிக் காராக உள்ளது. சரி இந்த எலக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு, அந்த காரில் உள்ள வசத்தில் மற்றும் சிறப்பு அம்சங்களை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

டிசைன் எப்படி இருக்கும்?

இந்த டாடா டியாகோ EV அதன் ICE என்ஜின் மாடல் காரின் அதே டிசைன் கொண்டுள்ளது. இதில் எலக்ட்ரிக் பேட்ஜிங் உள்ளது. இதன் முன்பக்க கிரில் தற்போது மூடப்பட்டுள்ளது. இதில் டாடா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களுக்கு உரித்தான ப்ளூ நிறத்தில் உள்ளது.

இந்த கார் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஒரு 19.2 KWH பேட்டரி பேக் மற்றும் 24 KWH பேட்டரி பேக் கொண்டுள்ளது. இதன் 24KWH பேட்டரி பேக் 315 KM ரேஞ்சு செல்லும். இதன் 19.2 KWH பேட்டரி பேக் 250 KM ரேஞ்சு கொண்டுள்ளது.

இந்த காரில் அதன் Ziptron high Voltage Architecture கொண்ட Permanent magnet Synchronous Electric Motor உள்ளது. இந்த கார் 60 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் அடைந்துவிடும். இதில் இரண்டு டிரைவ் மோட் வசதி உள்ளது. இதில் DC பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதன் மூலம் 80% சார்ஜிங் 57 நிமிடங்களில் அடைந்துவிடும்.

இந்த காரில் உள்ள வசதிகள்:

Tata Tiago EV

இந்த கார் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி இருந்தாலும் இதில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ரெயின் சென்சிங் வைப்பர், கிருஸ் கண்ட்ரோல், 8 Harman சவுண்ட் சிஸ்டம், கனெக்டெட் கார் டெக்னாலஜி போன்ற வசதிகள் உள்ளன.

விலை:

இந்த கார் விலை 8.49 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் தொடங்கி 11.79 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலை வரை இருக்கும். இது மிகவும் குறைந்த விலை ஆகும். இவ்வளவு குறைந்த விலைக்கு அதிக வசதிகள் இந்த எலக்ட்ரிக் காரில் உள்ளன.

இவற்றில் மூன்று மாடல்கள் உள்ளது அதன் விலை மற்றும் விவரங்களை பார்க்கலாம் வாங்க.

டாடா டியாகோ மாடல்பேட்டரி பேக் சார்ஜிங் வேரியண்ட்விலை (எக்ஸ் ஷோரூம்)
119.2 KWH3.3 KW ACXE8.49 லட்சம் ரூபாய்
XT9.09 லட்சம் ரூபாய்
224 KWH3.3 KW AC XT9.99 லட்சம் ரூபாய்
XZ+10.79 லட்சம் ரூபாய்
XZ+TEch LUX 11.29 லட்சம் ரூபாய்
324 KWH 7.2 KW AC XZ+11.29 லட்சம் ரூபாய்
XZ+TEch LUX 11.79 லட்சம் ரூபாய்

குறிப்பு:

இந்த காரை வாங்கவேண்டும் என்று நினைப்பவர்கள் வருகின்ற அக்டோபர் 10-ஆம் தேதி புக்கிங் செய்து கொள்ளலாம்.

நீங்கள் புக்கிங் செய்த பிறகு உங்களுக்கு ஜனவரி மாதம் டெலிவரி செய்யப்படும்.

இந்த வாய்ப்பு முதலில் காரை  வாங்குகின்றான் 10 ஆயிரம் நமர்களுக்கு மட்டும் தான் இந்த Tata Tiago EV கார் 8.49 லட்சம் ரூபாய் விற்கப்படும் என்று கூறியுள்ளனர் டாடா நிறுவனம். அதிலில் 2 ஆகியராம் நபர்கள் ஏற்கனவே Tata Tiago EV எலக்ட்ரிக் கார் வைத்திருப்பவர்கள் மீண்டும் இந்த எலக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என்று விரும்புகின்றன ஆக அவர்களுக்கு 2000 கார் ஒதுக்கப்பட்டுள்ளது.

அப்பறம் என்ன யோசிக்கிரங்க உடனே இந்த காரை வாங்கி உங்கள் ஊருக்குள் வளம் வந்து அசத்துங்கள் நன்றி வணக்கம்..

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>www.pothunalam.com
SHARE