சூர்யாவின் அடுத்த திரைப்படம் | Suriya Next Movie Name in Tamil
சூர்யா என்பவர் தமிழ்நாட்டின் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவர். இவரது முதல் படம் நேருக்கு நேர் 1997-ஆம் ஆண்டு வெளியானது. இதுவரை திரை உலகில் பல படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர். சரவணன் என்ற இயற்பெயரும் இவருக்கு உண்டு. 2006-யில் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள்ளனர். சரி இந்த பதிவில் சூர்யாவின் அடுத்த புது படம் என்ன என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.
சூர்யாவின் அடுத்த திரைப்படம் என்ன தெரியுமா?
பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இப்படம் அடுத்த வருடம் அதாவது 2022 பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
மேலும் தற்போது இப்படத்தின் டீசர் ரிலீசுக்காக தான், சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து வெளியாகியுள்ள செய்தியில், எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வரும் 2022 புத்தாண்டு அன்று வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.
விரைவில் இந்த செய்தி குறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |