Vijay Tv Pugazh Marriage
பொதுவாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி பார்க்கக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி தொடக்கம் முதல் முடியும் வரை முழுக்க முழுக்க நகைச்சுவையாகவே இருக்கும். இந்த நிகழ்ச்சியகை பார்த்தாலே நேரம் போவதே தெரியாது. அந்த அளவிற்கு சூப்பராக இருக்கும். இந்த விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தனது திருமணப் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது குறித்த சில தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
‘குக் வித் கோமாளி’ புகழ் திருமணம்:
விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியில் வடிவேலு பாலாஜியால் அறிமுகம் செய்யப்பட்ட புகழ் இன்று உண்மையாகவே புகழின் உச்சியில் இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழை வேற லெவலுக்கு எடுத்து சென்றது.
அதாவது விஜய் டிவி-யில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் பிரபலமானவர் புகழ். இதை தொடர்ந்து விஜய் டிவியில் கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே சேர்ந்தது. குறிப்பாக இவர் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா என ஓடி ஓடி சென்று காதலிப்பதாக கூறி காமெடி செய்ததை எல்லாம் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. முதல் சீசனை விட இரண்டாவது சீசன் தான், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானது.
அதன் பின்பு வெள்ளித்திரையிலும் பிஸியானார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி குக் வித் கோமாளி சீசன் 3-க்கு வர முடியாத அளவுக்கு பிசியானார். அடுத்து புகழ் நடிப்பில் அவர் ஹீரோவாக நடித்திருக்கும் படமும் ரிலீஸாகவுள்ளது.
இந்த நிலையில் சத்தமே இல்லாமல் புகழ் தன் காதலியான பென்ஸியா என்பவருக்கும் நேற்று (செப்டம்பர் 1) திருமணம் நடைபெற்றது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்துவந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து புகழ் தனது திருமண புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |