அரைஞாண் கயிறு கட்டுவது எதற்காக? | Arana Kayiru Benefits in Tamil
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக ஆண் பெண் இருபாலாருடைய உடலிலும் அரைஞாண் கயிறு கட்டுவது அவசியம். முன் இருந்த காலத்தில் இது ஒரு கருவி என்றும் சொல்வார்கள். அது என்ன கருவி என்று சொல்கிறீர்கள் என்று யோசிப்பீர்கள். ஆமாம் வாங்க அதனை பற்றிய ரகசியத்தை தெரிந்துகொள்வோம்..!
அரைஞாண் கயிறு என்று பெயர் வர காரணம்:
அரைஞாண் கயிறு காலத்திருந்து ஆடைக்கு அதவாது கோவணத்தைக் கட்டுவதற்கு பயன்படுவது இந்த அரைஞாண் கயிறு தான்.
இடுப்பு என்றால் அரை, பழந்தமிழ் சொல்லில் ‘கூபக அறை’, அதாவது இடுப்பு எலும்புப் பகுதிக்கு ‘கூபக அறை’ என்று பெயர். ஞாண்’ என்றால் வளைத்துக் கட்டுவது எனவும், கூபக அறையை வளைத்துக் கட்டுவதால் இக்கயிற்றுக்கு ‘அரைஞாண் கயிறு’ என்றும் பெயர் வந்தது.
ஆடைக்கு ஆதாரமாக பயன்படுத்திய பொருள் அரைஞாண் கயிறு அதேபோல் அந்த காலத்தில் ஆண்கள் வேட்டைக்கு செல்லும் போது எடுத்து செல்லும் பொருட்களை வைத்துக்கொள்வதற்கு அரைஞாண் கயிறு பயன்பட்டது.
அரைஞாண் கயிறு அணிவது ஏன்?
ஆண்கள்களுக்கு சிறுநீரகத்திலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள், விதைப்பையிலிருந்து வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்று சேரும் இடம் உடலின் அடிவயிற்றுப்பகுதிதான். அப்போதுதான் குடல் இறக்காமல் இருக்குமாம்.
அப்போது மரத்திற்கு மரம் தாவுவது, குதிப்பது, மரம் ஏறுவது போன்ற விஷயங்களை மனிதர்கள் அதிகம் செய்தார்கள். அப்போது விதைப்பைகள் மேலேறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது அதனை சரி செய்ய இந்த அரைஞாண் கயிறு பயன்படும்.நாம் முன்னோர்கள் என்ன சொன்னாலும் அதன் பின் அறிவியலும் இருக்கிறது. அதனை நம் முன்னோர்கள் செய்ததால் தான் மருத்துவமனைகள் கூட இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்.
அரைஞாண் கயிறு நாம் அணியும் உள்ளாடையை தாண்டி நம்முடைய உள்ளுறுப்புகளைப் பாதுகாப்பதற்கு முக்கிய ஆயுதமாகவும், கருவியாகவும் உள்ளது.
அணியாவிட்டால் ஏற்படும் விளைவுகள்:
முன் இருந்தவர்கள் மட்டுமே அரைஞாண் கயிற்றின் மகத்துவத்தை பற்றி தெரிந்து அவர்கள் இதுவரை அரைஞாண் கயிறு அணிந்து இருப்பார்கள். ஆனால் இப்போது இருக்கும் வீட்டில் அதிகளவு யாரும் அணிந்திருக்கமாட்டார்கள். ஆனால் அது மிகவும் தவறு அரைஞாண் கயிறு அணியாவிட்டால் விரைவாதம், அண்டவாதம் போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.பெண்கள் புடவை அணிவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?
எந்த நிறத்தில் அரைஞாண் கயிறு அணிய வேண்டும் | அரைஞாண் கயிறு கட்டும் முறை:
அந்த காலத்தில் இரண்டு இனகுழுவாக வாழ்ந்து வந்தனர்கள். அவர்களின் இனைத்தை தனித்துவபடுத்துவதற்காக கறுப்பு, சிவப்பு போன்ற பல்வேறு நிறங்களில் அணிந்தனர். எதுவும் இல்லையென்றால் வெள்ளை நிறத்தில் கயிறு அணிவார்கள். பிற்காலத்தில் குலதெய்வத்தை வணங்குபவர்கள் கறுப்புக் கயிறும், வைணவத்தைப் வணங்கியவர்கள் சிவப்புக் கயிற்றையும் கட்டி அடையாளப்படுத்திக் கொண்டனர்.
வெப்பம் அதிகமாக இருப்பதால் கருப்பு நிறத்தை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்ப்பார்கள். கருப்பு நிறம் வெப்பத்தை உறிஞ்சி உடலுக்கு கெடுதல் விளைவிக்கும். ஆகவே சிவப்பு நிறமானது சிறந்தது ஆகும்.
நகை அணிவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | facts |