மாவிலை கட்டுவது எதற்காக
பொதுவாக நம் முன்னோர்கள் எந்த செயல் செய்தாலும் அதனை காரணத்தோடு தான் செய்வார்கள். ஆனால் நமக்கு தான் அந்த உண்மையான காரணத்தை பற்றி அறிந்து கொள்ளாமல் அதனை செய்ய மாட்டோம். எந்த சுப நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி வாசலில் மாவிலை கட்டும் பழக்கம் இருக்கிறது. இவை கட்டுவதனால் வீடு அழகாக இருக்கிறது அதனால் கட்டுகிறோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதற்கு அறிவியல் காரணம் இருக்கிறது. அதனை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்ள போகிறோம்.
மாவிலை கட்டுவதற்கான அறிவியல் காரணம்:
தாவரங்கள் பகல் நேரத்தில் கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. ஆனால் மாவிலையில் உள்ள சிறப்பு என்றே சொல்லலாம். அதவாது மாமரத்திலிருந்து மாவிலையை பறித்த பிறகும் கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சி கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. இதன் காரணமாக தான் மாவிலை கட்டப்படுகிறது.
இதற்கும் மாவிலை கட்டுவதற்கும் என்ன சம்மந்தம் என்று யோசிக்கிறீர்களா.! சரி வாங்க தெரிஞ்சுப்போம்.
அதவாது சுப நிகழ்ச்சி மற்றும் விழா காலம் என்றால் மக்கள் அதிகமாக இருப்பார்கள். இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இருப்பார்கள்.
மக்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் ஆக்சிஜன் குறைவதற்கான வாய்புகள் இருக்கிறது. அதனால் மாவிலை கட்டும் போது கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சி சுற்றுசூழலை சீராக வைத்து கொள்கிறது.
மேலும் நிகழ்ச்சிக்கு வரும் மக்களிடம் எதிர்மறை ஆற்றல் இருந்தால் அவை நீங்கும், இவை கிருமியை அகற்ற கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.
அம்மை போட்டவர்கள் ஏன் கண்ணாடி பார்க்க கூடாதுனு தெரியுமா
மாவிலை தோரணம் கட்டுவது எப்படி.?
மாவிலையை ஒரே அளவுள்ளதாக எடுத்து கொள்ள வேண்டும். இதனை சுத்தமான தண்ணீரில் கழுவி விட வேண்டும்.
அடுத்து ஒரு வெள்ளை நூல் எடுத்து மஞ்சளை தடவி கொள்ளவும். அதில் இந்த மாவிலையை கோர்த்த கொள்ளவும். மாவிலையின் நடுப்பகுதியில் மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து கொள்ளவும்.
இதனை வாசலில் கட்டி விட வேண்டும்.
முக்கியமாக மாவிலை காய்ந்தாலும் கூட அதனுடைய சக்தி குறையாது.
முருங்கை மரத்தை வாசலில் வளர்க்க கூடாது என்று சொல்ல உண்மை காரணம் என்ன தெரியுமா
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |