பிப்ரவரி மாதத்தில் மட்டும் 28 நாட்கள் இருப்பது ஏன் தெரியுமா? Why February Has 28 Days in Tamil
பொதுநலம்.காம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.. ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள், 365 நாட்களும் கொண்டுள்ளது. அவற்றில் ஒரு சில மாதங்கள் 30 நாட்களும், ஒரு சில மாதங்கள் 31 நாட்களையும் கொண்டுள்ளது. இருப்பினும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏன் 28 நாட்கள் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த பிப்ரவரி மாதம் வருவதற்கு ஒரு பெரிய வரலாறே உள்ளது. எது என்ன வரலாறு என்று தெரிந்துகொள்ள ஆசையா அப்படியென்றால் பதிவை தொடர்ந்து படியுங்கள்.
பிப்ரவரி மாதத்தில் மட்டும் 28 நாட்கள்| What is The Reason for February 28 Days:
- பொதுவாக பண்டைய ரோமானிய பேரரசில் விவசாயம் தான் மிக பெரிய ஆதாரமாக இருந்து வந்தது. இதன் காரணமாக வேளாண் காலநிலையை பொறுத்தே அங்கு மாதங்களும், நாட்களும் நிர்ணகிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாம் ஆச்சரியம் படும் விஷயம் என்னெவென்றால் முதலில் மார்ச் முதல் டிசம்பர் வரை மொத்தமாக 10 மாதங்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளன. அப்படி பார்க்கும் போது மொத்தமாக 304 நாட்கள் மட்டுமே ஒரு வருடத்திற்கு இருந்துள்ளது.
- இருப்பினும் சந்திர காலண்டர் படி 355 நாட்களாக இருந்தது. மீதம் இருந்த நாட்களை குளிர்காலம் என்று ரோமானியர் அதற்கு பெயர் வைக்காமல் கழித்து வந்துள்ளனர், அதேபோல் அப்போது இருந்த மன்னரும் அதனை கண்டுகொள்ளவில்லையாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களா நீங்கள்?
- ஆனால் அந்த மன்னருக்கு பின்னர் வந்த மன்னர் இது சரி இல்லை என்று ஒரு கூட்டத்தை கூட்டி புதியதாக இரண்டு மாதங்களை அந்த 10 மாதங்களுடன் இணைத்துள்ளனர். அந்த மாதங்கள் தான் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் ஆகும்.
- இரண்டு மாதங்களை இணைத்த பின்பு சில சிக்கல் இருந்துள்ளது. அது என்னவென்றால் இரட்டைப்படை எண்களுக்கும் ரோமானிய பேரரசுக்கு ஆகாது ஒவ்வொரு மாதங்களையும் ஒற்றைப்படை எண்களாக வருமாறு மாற்றி அமைத்துள்ளார்.
- அதன்படி 7 மாதங்கள் 29 நாட்களும், 4 மாதங்கள் 31 நாட்கள் என்று மொத்தமாக 327 நாட்கள் கணக்கிடப்பட்டது. ஆனால் சந்திர காலண்டர் படி 355 நாட்கள் எனவே மீதம் இருப்பது 28 நாட்கள் தான். அந்த 28 நாட்கள் பிப்ரவரி மாதத்தில் வரவு வைக்கப்பட்டன. ஏன் என்றால் அன்றைய காலகட்டத்தில் பிப்ரவரி மாதம் தான் வருடத்தின் கடைசி மாதம் ஆகும்.
- பின் சூரிய தொடரை கொண்டு வருடம் கணக்கிட்ட போது 365.24 நாட்களாக நிர்ணகிக்கப்பட்டது. அப்போது அனைத்து மாதங்களையும் மாற்றிய சீசர் என்ன காரணம் என்று தெரியவில்லை பிப்ரவரி மாதத்தை மட்டும் கண்டுகொள்ளவில்லை. எனவே பிப்ரவரி மாதத்திற்கு மட்டும் அதே 28 நாட்கள் மாட்டும் நிர்ணகிக்கப்பட்டது.
- ஆனால் ஒரு வருடத்தில் மட்டும் கூடுதலாக வரும் அந்த 0.24 நாட்கள், நான்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் தான் வருமாம் அந்த நாளை எந்த மாதத்துடன் இணைப்பது என்பதில் குழப்பம் வந்த போது இருக்கவே இருக்கு பிப்ரவரி மாதம் அதில் சேர்த்துவிட என்று கூறப்பட்டது. ஆக பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும் போது அதனை லீப் வருடம் என்று குறிப்பிடப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 சவரனை ஏன் 8 கிராம் என்று சொல்கிறார்கள் தெரியுமா? அதன் உண்மையான காரணம் என்ன தெரியுமா?
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |