கருப்பு நிற உள்ளாடை மற்றும் ஆடைகள் அணிகிறீர்கள் என்றால் இதை தெரிந்து கொள்ளுங்கள்.!

why not to wear black clothes in tamil

கருப்பு நிற ஆடைகள்

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் கருப்பு நிற ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் அணிய கூடாது என்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம். மேலும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தெரிந்து கொள்வோம். பொதுவாக பெரும்பாலானவர்களுக்கு கருப்பு நிற ஆடை மிகவும் பிடிக்கும். சிலர் நபர்கள் வைத்திருக்கும் டிரஸ் அனைத்தும் கருப்பு கலராகவே வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் நபர்கள் உள்ளாடைகள் கருப்பு நிறமாக வைத்திருப்பார்கள். இந்த கருப்பு நிறம் ஏன் அணிய கூடாது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ கருப்பு நிற ஆடையை அணிய கூடாத ராசிகள்

கருப்பு நிற ஆடைகள் ஏன் அணிய கூடாது.?

கருப்பு நிற சிலர் நபர்களுக்கு பிடிக்கும். சிலர் நபர்கள் கருப்பு ஆடை அணிவது அழகாக இருக்கிறது என்று அணிகிறார்கள். ஆனால் கருப்பு நிறத்தை நம் முன்னோர்கள் அணிய கூடாது என்று சொல்வார்கள் இதற்கான உண்மையான காரணம் என்ன என்று தெரியுமா.?

 கருப்பு நிறத்தை விட மற்ற நிற ஆடைகள் அனைத்தையும் அணிந்து வெளியில் சென்றால் வெயில் நம் உடலில் உள்ள வெப்பத்தை ஈர்த்து வெளியிடும். அதுவே கருப்பு நிற ஆடைகள் அணியும் போது வெப்பத்தை இழுத்து தனது உடலுக்குள்ளேயே வைத்து கொள்ளும். ஆனால் வெளியிடாது. அதனால் தான் கருப்பு ஆடையை அணிய கூடாது என்று கூறியிருக்கிறார்கள். 

பொதுவாக கருப்பு நிறம் வெயிலை ஈர்க்க கூடியது. அதனால் தான் குடையை கூட கருப்பு நிறமாக இருந்தது. இப்பொழுது தான் எல்லா நிறங்களிலும் குடைகள் வந்துள்ளது.

நீங்கள் எப்போதாவது கருப்பு ஆடை அணிகிறீர்கள் என்றால் செல்லும் இடத்தை பொறுத்தது. அது எப்படி என்றால் நேர்மறை சக்தி உள்ள இடத்தில் கருப்பு நிறம் ஆடை அணியலாம். இல்லையென்றால் கருப்பு ஆடை அணிந்து செல்வதை தவிர்த்திடுங்கள். இதனால் தான் கோவிலுக்கு மற்றும் வீட்டில் பூஜை செய்யும் போது கருப்பு ஆடை அணிய கூடாது என்று சொன்னார்கள்.

நீங்கள் எப்போதாவது கருப்பு ஆடை அணிகிறீர்கள் அதுவே சில நபர்கள் எப்பொழுதும்  உள்ளாடை கருப்பு நிறத்தில்  அணிவார்கள். கருப்பு நிற உள்ளாடை அணிவதை தவிர்த்திடுங்கள். நீங்கள் எப்பொழுதும் கருப்பு நிற உடையை அணிகிறீர்கள் என்றால் உங்களின் உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதவாது தோலில் அரிப்பு, வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் கருப்பு நிற உள்ளாடைகள் அணிவதை தவிர்த்திடுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் Facts