First Aid For Fracture
முதலுதவி என்பது பற்றி நாம் நிறைய இடத்தில் கேள்வி பட்டிருப்போம். அதிலும் குறிப்பாக யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அத்தகைய இடத்தில் தான் இந்த வார்த்தையினை அதிகமாக பயன்படுத்துவார்கள். அதாவது முதலுதவி என்பது ஒருவருக்கு திடீரென்று காயம் பட்டாலோ அல்லது உடலில் வேறு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதற்கு உடனடி சிகிச்சை அளிக்கும் ஒரு முறை ஆகும். இதுவே முதலுதவி எனப்படும். அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு நோய் அல்லது பிரச்சனைக்கும் வெவ்வேறு முதலுதவி இருக்கிறது. ஆகவே இன்று நமக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால் என்ன முதலுதவி நாம் செய்ய வேண்டும் என்பதை தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
எலும்பு முறிவு:
பொதுவாக ஒரு மனிதனின் உடலில் 206 எலும்புகள் ஆனது காணப்படுகிறது. ஆனால் குழந்தைகள் பிறக்கும் போது 300 எலும்புகள் இருந்தாலும் கூட அவை நாளடைவில் ஒன்றுடன் ஒன்றாக இணைந்து 206 எலும்புகளாக மாறி விடுகிறது.
இத்தகைய எலும்புகளில் ஏதேனும் ஒன்று பாதிப்பு அடைந்தாலும் கூட நமது உடலில் சாதாரணமான செயல்பாட்டில் இருக்காது. அதேபோல் எலும்பு முறிவுகளில் நிறைய வகைகளும் இருக்கிறது.
எனவே இதுபோன்ற எலும்பு முறிவு நமது உடலில் ஏற்பட்டால் நாம் என்ன முதலுதவி செய்ய வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எலும்பு முறிவிற்கான முதலுதவி:
இரத்தத்தை கட்டுப்படுத்துதல்:
நம்முடைய உடலில் ஏதோ ஒரு இடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு அத்தகைய பகுதிகளில் இருந்து இரத்தம் வருகிறது என்று இரத்தத்தை நீங்கள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.
அதாவது இரத்தம் வரும் இடத்தில் அதனை தடுத்து நிறுத்த ஒரு காட்டன் பஞ்சினால் இரத்தம் வரும் இடத்தினை லேசாக வைத்து அழுத்தவும். அதேபோல் நீங்கள் எலும்புகளின் மீது கை வைத்து எதுவும் செய்யக்கூடாது.
பதட்டத்தை குறைக்க வழிகள்:
பொதுவாக அனைவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டால் பதட்டமும் மற்றும் இரத்தம் கசிவதால் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனை முதல் கட்டமாக வரும். அதனால் நீங்கள் இந்த இரண்டினையும் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வீக்கம் குறைய:
எலும்பு முறிவினால் அடிபட்ட இடத்தில் வீக்கமும் வரலாம். ஆகையால் எலும்பு முறிவினால் வீக்கம் எதுவும் வந்தால் வீக்கத்தை குறைக்க ஐஸ் பேக் மற்றும் ஒரு காட்டன் துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து வீக்கம் உள்ள இடத்தில் வைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் வீக்கம் குறையும்.
எலும்பு முறிவின் போது செய்யக்கூடாதவை:
- அடிபட்டவருக்கு உணவு மற்றும் இதர பானங்கள் எதையும் கொடுக்கக்கூடாது.
- எலும்பு முறிவு அதிகமாக ஏற்பட்டு அதனால் எலும்புகள் வெளியே வந்து இருந்தால் அதனை செலுத்த நீங்கள் முயற்சிக்கக்கூடாது.
- அதேபோல் அடிபட்ட இடத்தில் அதிகப்படியான அழுத்தத்தை கொடுக்கக்கூடாது.
- எந்த இடத்தில் அடிபட்டு இருந்தாலும் அத்தகைய இடத்தினை அசைக்க கூடாது.
மேலே சொல்லப்பட்டுள்ள முதலுதவியினை செய்தாலும் கூட உடனே மருத்துவரை அணுகுவது மிக சிறந்த ஒன்று.
வலிப்பு வந்தால் இந்த முதலுதவியை மட்டும் செய்து விடுங்கள்
இதுபோன்று முதலுதவி பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | First Aid |