First Aid Stroke Patient in Tamil
பொதுவாக எந்த நேரத்தில் என்ன வியாதி வரும் என்பதே தெரிவதில்லை. அதாவது, மயக்கம், மாரடைப்பு, தலை வலி, பக்கவாதம் போன்றவை எப்போது வரும் என்றே தெரிவதில்லை. சில நேரங்களில் இது உயிருக்கே ஆபத்தாக கூட முடிகிறது. அனைத்து வியாதிகளுக்கும் ஒரு முதலுதவி சிகிச்சை இருக்கிறது. அதனை நம் அனைவருமே தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, அந்தவகையில் பக்கவாதத்திற்கான முதலுதவி சிகிச்சை என்ன என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Stroke First Aid Treatment in Tamil:
பக்கவாதம் வருவதற்கான காரணங்கள்:
- உயர் இரத்த அழுத்தம்
- நீரிழிவு நோய்
- சிகரெட் புகைத்தல்
- இருதய நோய்
திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி என்ன தெரியுமா?
அறிகுறிகள்:
- உடல் பலவின்மை
- உடலில் ஒரு பக்கம் உணர்வு இல்லாமல் இருப்பது.
- கண்களில் பார்வை குறைபாடு
- தலைவலி மற்றும் மயக்கம்
முதலுதவி சிகிச்சை:
ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டால், அவரின் தலை மற்றும் தோளை சற்று மேலே உயர்த்தி நோயாளியை கிழே படுக்க வைக்கவும்.
பிறகு, நோயாளி நன்றாக சுவாசிக்கவில்லை என்றால் அவரை இடதுபக்கத்தில் படுக்க வைக்க வேண்டும்.
அதன் பிறகும், நோயாளி சுவாசிக்கவில்லை என்றால் அவருக்கு CPR (Cardiopulmonary resuscitation) செய்ய வேண்டும்.
பிறகு, அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மின்சாரம் தாக்கியவருக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும்..?
பக்கவாதம் பெரும்பாலும் யாருக்கு வருகிறது.?
பக்கவாதம் தீடிரென்று வரக்கூடிய ஒன்றாக இருந்தாலும் அது குறிப்பிட்ட நபர்களை மட்டுமே தாக்குகிறது. அதாவது, அதிகமாக புகைபிடிப்பவர்கள், மன அழுத்தம் உடையவர்கள், உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், அதிகமாக பதப்படுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்பவர்கள் ஆகியோரை அதிகம் தாக்குகிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |